தமிழகத்தின் கண்ணாடி

24 Jan 2019
34 mins ago
1 / 37
குடியரசு தின விழாவை முன்னிட்டு கோவை சி.எஸ்.ஐ., பள்ளியில் ஒத்திகையில் ஈடுபட்ட மாணவியர்கள்.
1 hr ago
2 / 37
சென்னையில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டு நிறைவு நாளில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பேசினார். மேடையில் முதல்வர் பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர்.
1 hr ago
3 / 37
போட்டோ எடு போடு: பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த கோரி அரசு ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றன. திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன்பு மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர்களில் பெரும்பாலானோர் மொபைலில் போட்டோ எடுத்து சமூகவலைதளங்களில் பதிவு செய்தனர்.
1 hr ago
4 / 37
சென்னையில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலீட்டாளர்களுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை முதல்வர் பழனிசாமி வழங்கினார். அருகில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், தொழில்துறை அமைச்சர் சம்பத் .
2 hrs ago
5 / 37
பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த கோரி அரசு ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன்பு மறியலில் ஈடுபட்டனர்.
3 hrs ago
6 / 37
அகற்றுங்க: விளம்பரத்திற்காக வைக்கப்பட்ட இரும்பு கம்பிகள், வாகன ஓட்டிகளுக்கு ஆபத்து ஏற்படுத்தும் முன்பு அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும. இடம் : தரமணி, சென்னை.
4 hrs ago
7 / 37
விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் மாசி மக திருவிழாவையொட்டி தேர் சீரமைக்கும் பணி நடந்து வருகிறது.
4 hrs ago
8 / 37
ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் சார்பில் பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி சிவகங்கையில் மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள்.
5 hrs ago
9 / 37
கோட்டா அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டம் திருப்பூர் சப் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. ஜாக்டோ ஜியோ போராட்டம் காரணமாக அதிகாரிகள் குறைவான பேரே பங்கேற்றனர்.
5 hrs ago
10 / 37
மாதா அமிர்தானந்தமயி மடத்தின் 29ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு சென்னை வந்துள்ள மாதா அமிர்தானந்தமயி தன் பக்தர்களுக்கு ஆசி வழங்கினார். இடம்: விருகம்பாக்கம்.
5 hrs ago
11 / 37
தேசிய குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, திருப்பூர் ஜெய்வாபாய் பெண்கள் பள்ளியில் நடந்த விழாவில், விழிப்புணர்வு பலூன்களை துணை கமிஷனர் உமா மற்றும் மாணவிகள் பறக்கவிட்டனர்.
5 hrs ago
12 / 37
கோவை ரயில்வே ஸ்டேஷனில் 100 அடி உயர தேசிய கொடி வைக்கப்பட்டது அதனை பொது மக்கள் மொபைல் கேமரா மூலம் படம் பிடித்தனர்.
5 hrs ago
13 / 37
விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் முன்பு ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் மறியலில் ஈடுபட்டனர்.
5 hrs ago
14 / 37
செல்பி போராட்டம் : கோவை ரயில்வே ஸ்டேசன் ரோட்டில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் மறக்காமல் எடுத்து கொண்ட செல்பி தருணம்.
6 hrs ago
15 / 37
பொதுமக்கள் அவதி...: சைதாப்பேட்டை நீதிமன்றம் அருகே தி.மு.க., வினர் நடத்திய ஆர்பாட்டத்தால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல்.
6 hrs ago
16 / 37
கோவை ரயில்வே ஸ்டேசன் ரோட்டில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட ஜாக்டோ - ஜியோ அமைப்பினர்.
6 hrs ago
17 / 37
கொடநாடு வழக்கு தொடர்பாக தமிழக முதல்வர் பழனிசாமி பதவி விலகக்கோரி தி.மு.க., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்த வாகன ஓட்டிகள். இடம்.சைதாப்பேட்டை,கோர்ட் அருகில்
6 hrs ago
18 / 37
சென்னை : குறைவான எண்ணிக்கையில் ரயில் டிக்கெட் கவுன்டர் இருப்பதால் காலை நேரங்களில் ரயில் பயணிகள் நீண்ட நேரம் நின்று டிக்கெட் வாங்குகின்றனர். இடம்: தாம்பரம் ரயில்வே நிலையம்.
6 hrs ago
19 / 37
கரூர் கலெக்டர் அலுவலகம் முன்பு ஜாக்டோ ஜியோ சார்பில் நடந்த சாலை மறியலில் பங்கேற்ற அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள்
6 hrs ago
20 / 37
திருவள்ளுர் ஜே என் சாலையில் உள்ள தாலுகா அலுவலகம் அருகில் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் மறியல் போராட்டம் நடத்தினர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
6 hrs ago
21 / 37
குடியரசு தின ஒத்திகை. சென்னை, மெரினா, காமராஜர் சாலையில் நடந்தது. ஒத்திகையில் வங்காள நடனமாடி அசத்திய மேகாலயா நடன கலைஞர்கள்.
6 hrs ago
22 / 37
கோவை சிங்கநல்லுார் குளத்தை இந்தியாவின் வன மகன் என போற்றப்படும் பத்மஸ்ரீ விருது பெற்ற ஜாதவ் பேயங் பார்வையிட்டார்.
6 hrs ago
23 / 37
உடுமலை நகராட்சி சார்பில் நெகிழி விழிப்புணர்வு பேரணியை எஸ்.கே.பி.மேல் நிலைப்பள்ளி தலைமையாசிரியர் துவக்கிவைத்தார்.
6 hrs ago
24 / 37
ஒத்திகை...: குடியரசு தின ஒத்திகை. சென்னை, மெரினா, காமராஜர் சாலையில் நடந்தது. ஒத்திகையில் ஏற்பாடு செய்யப்பட்ட கலைநிகழ்ச்சியில் அசத்திய மாணவியர்.
7 hrs ago
25 / 37
மதுரையில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மறியல் போராட்டம் நடத்தினர்.
7 hrs ago
26 / 37
குடியரசு தின ஒத்திகை, சென்னை மெரினா, காமராஜர் சாலையில் நடந்தது. ஒத்திகையில் அணிவகுத்து மிடுக்கு நடைபோட்டு வந்த வீரர்கள்.
7 hrs ago
27 / 37
கடும் பனிப்பொழிவு...: காலை ஆறு மணிக்கு மேலும் நடுங்க வைக்கும் கடும் பனிப்பொழிவு. இடம்- மெரினா, காமராஜர் சாலை.
7 hrs ago
28 / 37
குடியரசு தினவிழாவை முன்னிட்டு கரூர் அரசு விளையாட்டு மைதானத்தில் பள்ளி மாணவிகளின் ஒத்திகை நடந்தது
7 hrs ago
29 / 37
ஒத்திகை...: சென்னை, மெரினா, காமராஜர் சாலையில் நடந்த குடியரசு தின ஒத்திகையில் தேசிய கொடியேற்றி மரியாதை செலுத்தும் அதிகாரிகள்.
8 hrs ago
30 / 37
உடுமலையில் ஜி.வி.ஜி.விசாலாட்சி மகளிர் கல்லூரி மற்றும் விஜயா பதிப்பகம் சார்பில் புத்தக கண்காட்சி துவங்கியது.
8 hrs ago
31 / 37
தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, திருப்பூர் ஜெய்வாபாய் பெண்கள் பள்ளியில் தேசிய குழந்தைகள் தினம் என்ற வடிவில் அமர்ந்திருந்த மாணவிகள்.
10 hrs ago
32 / 37
குடியரசு தினவிழாவை முன்னிட்டு கரூர் அரசு விளையாட்டு மைதானத்தில் போலீசாரின அணிவகுப்பு ஒத்திகை நடந்தது.
14 hrs ago
33 / 37
ஆதவன் உதிக்க உறை பனி எல்லாம் உதிர்ந்து போக தண்ணீர் மேலே பட்டு செல்லும் பனியின் ரசனை கண்டு செல்கிறார் ஒருவர். இடம்: கூடலூர் ரோடு, கோவை .
18 hrs ago
34 / 37
சாதனை மாணவர்: ஆசியா அளவில் நேபாளில் நடந்த ஊரக விளையாட்டு போட்டியில் மும்முறை தாண்டும் போட்டியில் தங்கப்பதக்கம் பெற்ற 2 மாணவரை வரவேற்பு கொடுத்த மாணவர்கள்.இடம் திருவள்ளுர் அடுத்த மெய்யூர் அரசினர் மேல் நிலைப்பள்ளி
19 hrs ago
35 / 37
பணி துவக்கம் : உப்பளம் தொகுதி ஜெயவிலாஸ் நகரில் விரிவு பகுதியில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணியை அன்பழகன் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.
19 hrs ago
36 / 37
ஊழியர்கள் மறியல் : திண்டுக்கல்லில் ஜாக்டோ ஜியோ சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மறியலில் ஈடுபட்ட ஊழியர்கள்.
19 hrs ago
37 / 37
கண்ணை கவரும் மலை : மலையை குளிர்விக்கும் விதமாக பெய்த பனிப்பொழிவால் ஏற்பட்ட இயற்கை அழகு காண்பவர்களின் கண்களை கவர்கிறது.இடம்: மேட்டுபாளையம் - குன்னூர் ரோடு .
Advertisement