தமிழகத்தின் கண்ணாடி

24 Apr 2019
2 hrs ago
1 / 17
சத்யசாய் பாபா ஆராதனை தினம்(ஸித்தி தினம்) முன்னிட்டு திருப்பூர் பி.என் ரோடு சத்ய சாய் சேவா சங்கம் சார்பில் அன்னதானம் நடந்தது.
2 hrs ago
2 / 17
குன்னூர் சிம்ஸ் பூங்கா கண்ணாடி மாளிகையில் , சுற்றுலா பயணிகளை கவர, பூந்தொட்டியில் வைக்கப்பட்டுள்ள கற்றாழை வகை மலர் செடிகள்.
2 hrs ago
3 / 17
திருப்பூர் திருமலை நகர் மாரியம்மன் கோவில் பொங்கல் விழாவை முன்னிட்டு சாகம்பரி அலங்காரத்தில் அருள்பாலித்த அம்மன்.
2 hrs ago
4 / 17
சுண்ணாம்பாறு சுற்றுலா!: புதுச்சேரி நோணாங்குப்பம் சுண்ணாம்பாறு படகு குழாமில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது மகிழ்ச்சியுடன் படகுகளில் செல்லும் சுற்றுலா பயணிகள்
3 hrs ago
5 / 17
பாதசாரிகள் மேல் விழுந்து விபத்து ஏற்படுவதற்கு முன், இந்த சிக்னல் கம்பம் அகற்றப்படுமா? இடம்: ஒயிட்ஸ் சாலை, ராயப்பேட்டை.
3 hrs ago
6 / 17
குன்னூர் செல்லாண்டியம்மன் கோவிலில் ஆண்டு திருவிழா கணபதி ஹோமத்துடன் துவங்கியது.
3 hrs ago
7 / 17
புதுச்சேரி, கதிர்காமத்தில் உள்ள இந்திரா காந்தி அரசு மருத்துவ கல்லூரி மாணவிகள் விடுதி ஏ பிளாக்கில், புகுந்த 8 அடி நீள சாரைப்பாம்பை வனத்துறை ஊழியர் வாழுமுனி லாவகமாக பிடித்தார்.
4 hrs ago
8 / 17
பாதசாரிகள் மேல் விழுந்து விபத்து ஏற்படுவதற்கு முன் சிக்னல் கம்பம் அகற்றப்படுமா? இடம்:ஒயிட்ஸ் சாலை, ராயப்பேட்டை.
4 hrs ago
9 / 17
ஊட்டி அரசு கலைக்கல்லூரியில், சேர்க்கைக்கான படிவம் வாங்க காத்திருக்கும் மாணவிகள்.
4 hrs ago
10 / 17
உடுமலையில் பெய்த மழை, காற்றிற்கு சாய்ந்துள்ள கரும்பு பயிர்கள்.
5 hrs ago
11 / 17
புதுச்சேரி, பள்ளிக் கல்வி இயக்ககத்தின் ஜவகர் சிறுவர் இல்லத்தின் கோடை வகுப்புகளில் சேருவதற்கான விண்ணப்பங்களை பால்பவன் தலைமையாசிரியர் பாஸ்கர் ராசு மாணவர்களுக்கு வழங்கினார்.
6 hrs ago
12 / 17
சித்திரை திருவிழாவை முன்னிட்டு கோவை தண்டுமாரியம்மன் கோவிலில் பக்தர்கள் தீசட்டி மற்றும் கரகம் ஏந்தி நேர்த்திகடன் செலுத்தினர்.
7 hrs ago
13 / 17
சித்திரை திருவிழாவை முன்னிட்டு கோவை தண்டுமாரியம்மன் கோவிலில் பக்தர்கள் தீசட்டி ஏந்தி நேர்த்திகடன் செலுத்தினர்.
11 hrs ago
14 / 17
இலங்கை குண்டுவெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். இடம் : பெசன்ட் நகர், சென்னை
11 hrs ago
15 / 17
கோவை அவிநாசி ரோடு தண்டுமாரியம்மன் கோவிலில் சித்திரை பெருந்திருவிழாவையொட்டி அம்மனுக்கு நடந்த திருக்கல்யாணத்தில் உரல் இடித்த பெண்கள்.
14 hrs ago
16 / 17
சிறப்பு அலங்காரம்: முதலியார்பேட்டை வன்னிய பெருமாள் கோவில் பிரம்மோற்ஸவ விழாவில் உற்சவர் வன்னிய பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவியுடன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
14 hrs ago
17 / 17
பூத்துக் குலுங்கும் பூ: திண்டுக்கல் அருகே தாடிக்கொம்பு பகுதியில்  பூத்துள்ள மாம்பூக்கள்.