தமிழகத்தின் கண்ணாடி

22 Apr 2019
8 mins ago
1 / 37
விண்ணப்பம் விநியோகம்: காயிதே மில்லத் மகளிர் கல்லூரியில் மாணவிகள் சேர்க்கைக்கான விண்ணப்பம் வாங்க வரிசையில் காத்திருக்கும் மாணவிகள். இடம்: சென்னை, அண்ணாசாலை.
1 hr ago
2 / 37
கொண்டாட்டம்...திண்டாட்டம்: கோடை வெயிலின் கொண்டாட்டம்.. பொதுமக்கள் திண்டாட்டம். இடம் விழுப்புரம், திண்டிவனம் நேரு வீதி.
2 hrs ago
3 / 37
வெறிச்சோடிய அலுவலகம் : பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெறாததால் வெறிச்சோடி காணப்படுகிறது.
3 hrs ago
4 / 37
தண்ணீர் தொட்டியில் போஸ்டர்கள் ஒட்டப்படுவதை தவிர்க்க தேசியக்கொடி வர்ணம் பூசப்பட்டுள்ளது.இடம்: கண்ணம்மாபேட்டை, சென்னை.
3 hrs ago
5 / 37
போரூர் ஸ்ரீ ராமச்சந்திரா உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் 29 வது பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இந்திய மருந்துகள் கண்காணிப்பு ஜெனரல் டாக்டர் ஈஸ்வர்ரெட்டி மாணவ, மாணவிகளுக்கு பட்டம் வழங்கினார். உடன் ஸ்ரீ ராமச்சந்திரா பல்கலை வேந்தர் வெங்கடாசலம் உள்ளார். இடம் : போரூர்.
3 hrs ago
6 / 37
டூ வீலர் டாக்சிக்கு தடை விதிக்க கோரி நேற்று கோவை கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்த ஆட்டோ டிரைவர்கள்.
3 hrs ago
7 / 37
தொட்டில் உறவு மரத்தடியில் மட்டும் ...கோடை விடுமுறையில் பாட்டி வீட்டுக்கு போய் இது போல ஊஞ்சலாடும் சுகமே சுகம் தான். இடம்: கோவை, சொக்கம்புகார்
3 hrs ago
8 / 37
வெளி வாகனங்களை அதிகளவு கோவை கலெக்டர் அலுவலகத்தில் நிறுத்துவதால் உள்ளே அதிகாரிகள் வாகனங்கள் நிறுத்தவே இடமில்லாமல போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
4 hrs ago
9 / 37
திண்டுக்கல் - தாடிக்கொம்பு ரோட்டில் பூத்துள்ள கொன்றை பூக்கள்.
4 hrs ago
10 / 37
திண்டுக்கல்-பழநி ரோட்டில் மரத்தில் இருந்து பறிக்கப்பட்ட புளியம் பழங்களை சேகரிக்கும் பெண்கள்.
4 hrs ago
11 / 37
கோவை காளப்பட்டியில் உள்ள என் ஜி பி கல்லூரியில் மாணவர்களுக்கான விளையாட்டு தேர்வு நடந்தது. இதில் கூடைப்பந்து போட்டியில் திறமையை காட்டிய மாணவர்கள்.
5 hrs ago
12 / 37
கோவை அரசு கலைக் கல்லூரி விண்ணப்பங்கள் வாங்க திரண்ட மாணவ, மாணவிகள்.
5 hrs ago
13 / 37
கோவை காளப்பட்டியில் உள்ள என் ஜி பி கல்லூரியில் மாணவர்களுக்கான விளையாட்டு தேர்வு நடந்தது,இதில் கபடி போட்டியில் திறமையை காட்டிய மாணவர்கள்
5 hrs ago
14 / 37
ஆனந்த குளியல்: கோடை வெயிலை தணிக்கும் வகையில் திண்டுக்கல் நீச்சல் குளத்தில் குளித்து மகிழ்ந்த சிறுவர்கள்.
5 hrs ago
15 / 37
வெயிலுக்கு இதமாக தண்ணீரில் நீந்தி சென்ற பறவைகள். இடம்:திண்டுக்கல் இராமையன்பட்டிகுளம்.
5 hrs ago
16 / 37
கோடைகாலம் துவங்கும் முன்பே சென்னையில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் பொதுமக்களுக்கு, தண்ணீரின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சுவர்களில் வரையப்பட்டுள்ள ஓவியம்.இடம்: தி.நகர், சென்னை.
5 hrs ago
17 / 37
கோடை வெயிலும் குறையல, தண்ணீர் குடமும் விக்கலை என்ன கொடும சார் ; என்கிறாரோ இவர் ?. இடம் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம்.
5 hrs ago
18 / 37
மழைநீர் கால்வாய் அமைப்பதற்காக தோண்டப்பட்ட குழியால் புதிதாக அமைக்கப்பட்ட பேருந்து நிறுத்தம் முற்றிலும் சாய்ந்துள்ளது, பயணிகள் வெயிலில் தவிக்கின்றனர்.இடம் : பாலாஜி நகர், வேளச்சேரி,சென்னை.
5 hrs ago
19 / 37
திருப்பூர் எல் ஆர் ஜி அரசு மகளிர் கல்லூரி 2019ஆம் கல்வி ஆண்டிற்கான சேர்க்கை விண்ணப்பங்கள் வழங்கப்படுகிறது திருப்பூர் தென்னம்பாளையம் மாநகராட்சி பள்ளியில் விண்ணப்பம் வாங்க்கிய மாணவிகள் அங்கேயே பூர்த்தி செய்து திருப்பி கொடுக்க வரிசையில் காத்திருந்தனர்.
5 hrs ago
20 / 37
பிஏபி வாய்க்காலில் தண்ணீர் திறந்து விடாததை கண்டித்தது, திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு கொடுத்த விவசாயிகள்
5 hrs ago
21 / 37
ஒய்.எம்.சி.ஏ மெட்ராஸ் மற்றும் சென்னை மாவட்ட கேரம் சங்கம் சார்பில், நடந்த மாவட்ட அளவிலான கேரம் போட்டியில் பங்கேற்ற வீரர்கள்.... இடம் : ராயப்பேட்டை, சென்னை...
5 hrs ago
22 / 37
39 பவுன் நகை திருட்டு நடந்த வீட்டில் போலீசார் விசாரித்தனர். இடம் .உடுமலை அன்சாரி வீதி
5 hrs ago
23 / 37
இலங்கை சர்ச்சில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தையொட்டி புதுச்சேரி மிஷன் வீதியில் உள்ள ஜென்மராக்கினி மாதா பேராலயத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது
5 hrs ago
24 / 37
ஊட்டி படகு இல்லத்திற்கு, எராளமான சுற்றுலா பயணிகள் வந்தனர்.
5 hrs ago
25 / 37
வாக்கு எண்ணும் மையத்தில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை சென்னை காவல்துறை கமிஷனர் விஸ்வநாதன் நேற்று பார்வையிட்டார்.இடம் : அண்ணா பல்கலைக்கழகம், கிண்டி
5 hrs ago
26 / 37
ஒய்.எம்.சி.ஏ மெட்ராஸ் மற்றும் சென்னை மாவட்ட கேரம் சங்கம் சார்பில், நடந்த மாவட்ட அளவிலான கேரம் போட்டியில் பங்கேற்ற வீராங்கனைகள். இடம் : ராயப்பேட்டை, சென்னை.
6 hrs ago
27 / 37
ஊட்டி மற்றும் சுற்று வட்டாரங்களில், தினமும் கனமழை பெய்வதால், குந்தா அணையில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
8 hrs ago
28 / 37
பல்லாவரம் நகராட்சிக்குட்பட்ட நியூ காலனி கக்கலனஞ்சாவடி பகுதியில் உள்ள பொதுமக்கள் குடிநீர் கேட்டு நகராட்சி அலுவலக வளாகத்தில் அமர்ந்து போராட்டம் நடத்தினர் .
9 hrs ago
29 / 37
உடுமலை, போடிபட்டி பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில் கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்ட பக்தர்கள் .
9 hrs ago
30 / 37
உலக புவி தினத்தையொட்டி கோவை தினமலர் நாளிதழ் சுந்தராபுரம் அலுவலகத்தில் தினமலர் நாளிதழ், கோவை குளங்கள் பாதுகாப்பு இயக்கம் இணைந்து அப்பகுதி மக்களுக்கு இலவச மூலிகைச் செடிகள் வழங்கினர்.
9 hrs ago
31 / 37
உடுமலை போடிபட்டி பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில் கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்ட பக்தர்கள் .
10 hrs ago
32 / 37
லோக்சபா தேர்தல் மற்றும் தொடர் விடுமுறைக்கு சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் ஒட்டு மொத்தமாக நேற்று சென்னை திரும்பியதால், பெருங்களத்தூரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
10 hrs ago
33 / 37
ஆம்னி பஸ்சில் சென்னக்கு வந்தவர்கள் பெருங்களத்தூரிலேயே இறக்கிவிடப்பட்டனர். அங்கிருந்து சென்னை நகர் செல்ல மாநகர பேருந்து இல்லாததால் காத்திருந்த மக்கள்.
10 hrs ago
34 / 37
திருப்பூர், கொங்கணகிரி கந்தபெருமான் கோவில் கும்பாபிஷேகத்தில் சிவாச்சாரியர்கள் கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றினர் 
10 hrs ago
35 / 37
திருப்பூர், கொங்கணகிரி கந்தபெருமான் கோவில் கும்பாபிஷேகத்தில் கலந்துகொண்ட பக்தர்களின் ஒருபகுதியினர்.
18 hrs ago
36 / 37
மலை போல தர்பூசணி: கோடை வெயிலுக்கு இதம் தரும் தர்பூசணி பழங்கள் புதுச்சேரியில் பல இடங்களில் மலை போல குவிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.
18 hrs ago
37 / 37
திருவிளக்கு பூஜை: விழுப்புரம் மகாராஜபுரம் பாண்டியதேவர் ஹவுஸிங் போர்டு வளாகத்தில் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை நடந்தது.