தமிழகத்தின் கண்ணாடி

15 Feb 2019
1 hr ago
1 / 22
கோயம்பேடு - தேனி செல்லும் தனியார் ஆம்னி பேருந்து பெருங்களத்தூர் மேம்பாலத்தின் மீது தீ பற்றி எரிந்த நிலையில் உள்ள பேருந்து. இடம்: பெருங்களத்தூர், தாம்பரம்
1 hr ago
2 / 22
தெப்ப திருவிழா : பூலோக வைகுண்டமான ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் மாசித் தெப்ப திருவிழா நடந்தது.  இதில், நம்பெருமாள் விமான பதக்கம், கிளி மாலை அணிந்து, தெப்பத்தில் எழுந்தருளி மூன்று முறை வலம் வந்து பக்தர்களுக்கு சேவை சாதித்தார். தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஸ்வாமி தரிசனம் செய்தனர்.
5 hrs ago
3 / 22
காஷ்மீரில் தீவிரவாதிகளால் வீரமரணமடைந்த சி.ஆர்.பி.எப் வீரரகளுக்காக திருப்பூர் குமரன் சிலை முன்பு அஞ்சலி செலுத்திய சிறுமியர்கள்.
7 hrs ago
4 / 22
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி பி.எஸ்.என்.எல்., அலுவலகம் முன் அனைத்து தொழிலாளர்கள் சார்பில், போராட்டம் நடந்தது.
7 hrs ago
5 / 22
திண்டுக்கல் பஸ் ஸ்டாண்டில் சாய் பாரத் கல்லூரி சார்பில் சாலை பாதுகாப்பு குறித்து மாணவர்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
8 hrs ago
6 / 22
ஊதிய உயர்வு, 4ஜி சேவை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பி.எஸ்.என்.எல். அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் ஊர்வலமாக சென்றனர். இடம்: புரசைவாக்கம்
9 hrs ago
7 / 22
புதுச்சேரி கவர்னர் மாளிகை எதிரில் தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுவரும் முதல்வர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்களிடம் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் அழகிரி சந்தித்துப் பேசினார்.
9 hrs ago
8 / 22
லாரியில் ஏற்றப்பட்ட சின்னத்தம்பி யானை முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டது. இடம்; உடுமலை, கண்ணாடிபுத்தூர்.
10 hrs ago
9 / 22
கடலூர் திருப்பாதிரிப்புலியூர் முத்தாலம்மன் கோவில் உற்சவ தேரோட்டம் விமரிசையாக நடந்தது.
11 hrs ago
10 / 22
தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் மற்றும் திருப்பூர் குமரன் கல்லூரி இணைந்து தூய்மை இந்தியா திட்ட விழிப்புணர்வு மகளிர் சங்கிலி நிகழ்ச்சி நடந்தது. அதில் பங்கேற்ற மாணவியர்.
12 hrs ago
11 / 22
கரூர் அரவக்குறிச்சி அருகே பூலாம்வலசு கிராமத்தில் சேவற்கட்டு போட்டி நடந்தது.
13 hrs ago
12 / 22
கோவை வேளாண் பல்கலையில் நடந்த இயந்திரங்கள் செயல் விளக்க கண்காட்சியை காண வந்த விவசாயிகள்.
14 hrs ago
13 / 22
திண்டுக்கல்லில் மது மற்றும் போதைப் பொருட்களுக்கு எதிராக மாணவர்கள் விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தினர்.
14 hrs ago
14 / 22
சின்னத்தம்பி யானைக்கு வனத்துறை டாக்டர்கள் மயக்க மருந்து ஊசி போட்டனர். இடம் .உடுமலை கண்ணாடிபுத்தூர் .
14 hrs ago
15 / 22
மாசித் திருவிழாவை முன்னிட்டு திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயிலில் அலகு குத்தி பூக்குழி இறங்கிய பக்தர்.
15 hrs ago
16 / 22
மயக்கஊசி செலுத்தப்பட்ட சின்னத்தம்பி யானையை விரட்டி செல்லும் கலீம். இடம் .உடுமலை கண்ணாடிபுத்தூர்
17 hrs ago
17 / 22
மூன்றாவது நாளாக புதுச்சேரி கவர்னர் மாளிகையில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வரும் முதல்வர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள்.
17 hrs ago
18 / 22
கும்கி யானை கலீம்மை நேர்க்கு நேர் பார்க்கும் சின்னத்தம்பி யானை. இடம் .உடுமலை கண்ணாடிபுத்தூர்
17 hrs ago
19 / 22
புதுச்சேரி கவர்னர் கிரண்பேடியை எதிர்த்து மூன்றாவது நாளாக முதல்வர் நாராயணசாமி போராட்டத்தைத் தொடர்ந்தார்
17 hrs ago
20 / 22
சின்னத்தம்பி யானையை பிடிக்க செல்லும் கும்கி யானைகள் கலீம், சுயம்பு. இடம் .உடுமலை கண்ணாடிபுத்தூர்
20 hrs ago
21 / 22
திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயில் மாசித்திருவிழாவை முன்னிட்டு மின் விளக்கு அலங்கார ரத ஊர்வலம் நடந்தது.
20 hrs ago
22 / 22
கோவை, ராவத்துார் அருகேவுள்ள தடுப்பனையில் ரசாயன கழிவுகளால் நொங்கும் நுறையுமாக பொங்கும் தண்ணீரை, ஆபத்தை உணராமல் குடிக்கும் ஆட்டுக்குட்டிகள்.