தமிழகத்தின் கண்ணாடி

20 Jan 2019
9 hrs ago
1 / 40
ரத ஊர்வலம் : 10வது இந்து ஆன்மிக கண்காட்சியை முன்னிட்டு விவேகானந்தர் ரத ஊர்வலம் மயிலாப்பூரில் துவங்கியது.
10 hrs ago
2 / 40
புதுச்சேரி அடுத்த விழுப்புரம் மாவட்டம் இரும்பை ஸ்ரீ பால திரிபுரசுந்தரி அம்பாள் ஆலய கும்பாபிஷேக 6 வது ஆண்டு விழாவை முன்னிட்டு மூல மந்திர ஜபம் ஹோமம் நடந்தது.
10 hrs ago
3 / 40
திருக்கல்யாணம்: தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பழநி பெரியநாயகியம்மன் கோயிலில் திருக்கல்யாணம் நடந்தது. மணக்கோலத்தில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி, தெய்வானை.
10 hrs ago
4 / 40
அறிவியல் கண்காட்சி: பெத்தி செமினார் பள்ளியில் நடந்த அறிவியல் கண்காட்சியில் கலந்துகொண்ட மாணவர்களுக்கு முதல்வர் நாராயணசாமி பரிசு வழங்கி பாராட்டினார் பள்ளியின் முதல்வர் பாஸ்கர்ராஜ் கலந்து கொண்டார்.
10 hrs ago
5 / 40
தேரோட்டம் : தைபூசத்தை முன்னிட்டு திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் தேரோட்டம் நடந்தது.
11 hrs ago
6 / 40
திருவண்ணாமலையில் தை மாத பவுர்ணமியையொட்டி கிரிவலம் செல்லும் பக்தர்கள் கூட்டத்தின் ஒரு பகுதி.
11 hrs ago
7 / 40
திருச்சியில் நடந்த பாதுகாப்புத்துறை தொழிற்சாலை உள்கட்டமைப்பு திட்டங்கள் துவக்க விழாவில், கொடிசியாவின் பாதுகாப்புத் துறை உபகரணங்கள் கண்டுபிடிப்பு மையத்தை, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் துவக்கி வைத்து, அங்கீகார சான்று வழங்கினார்.
12 hrs ago
8 / 40
பா.ஜ., கூட்டம் : திருப்பூரில் நடந்த விழாவில், பா.ஜ., மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் பேசினார். அருகில் கட்சி நிர்வாகிகள்.
12 hrs ago
9 / 40
பதிப்பகத்திற்கு விருது: சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ .மைதானத்தில் நடந்த புத்தக கண்காட்சியின் கடைசி நாளில், 25ஆண்டுகளை கடந்த நக்கீரன் பதிப்பகம் உள்ளிட்ட பதிப்பகங்களுக்கு விருது வழங்கப்பட்டன.
12 hrs ago
10 / 40
சிறப்பு அலங்காரத்தில் அம்மன் : சென்னை மாங்காடு காமாட்சி அம்மன் கோவிலில், தைப்பூச விழாவை முன்னிட்டு தெப்பத்தில் அருள்மிகு காமாட்சி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார். இடம்: மாங்காடு.
12 hrs ago
11 / 40
ஜோதி ஊர்வலம் : கடலூர் மாவட்டம் வடலூர் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையை 148வது தைப்பூச விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. முன்னதாக கோவில் நிர்வாகிகள் மற்றும் வள்ளலார் பக்தர்கள் சீர்வரிசையுடன் ஜோதியை ஊர்வலமாக எடுத்து சென்றனர்.
12 hrs ago
12 / 40
பறவை காவடி : தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பழநி முருகன் கோயிலுக்கு பறவை காவடி எடுத்து வந்த திண்டுக்கல் மாவட்டம் செங்குறிச்சியை சேர்ந்த பக்தர்.
12 hrs ago
13 / 40
ஓவியப்போட்டி : கோவை ஜி.டி.மெட்ரிக் பள்ளியில் ஆனைகட்டி சலீம்அலி பறவைகள் ஆராய்ச்சி மையம் சார்பில் நடந்த பள்ளி மாணவர்களுக்கான ஓவியப் போட்டியில் பங்கேற்ற மாணவர்கள்.
12 hrs ago
14 / 40
அமைச்சர் வாழ்த்து : தமிழக பள்ளி கல்வித்துறை சார்பில் அரசு பள்ளிகளை சேர்ந்த 50 மாணவர்கள் பின்லாந்து நாட்டிற்கு கல்வி சுற்றுலா அனுப்பப்பட்டனர். அவர்களை அமைச்சர் செங்கோட்டையன் வாழ்த்தினார்.இடம் : அண்ணா நூற்றாண்டு நூலகம், கோட்டூர்புரம், சென்னை
12 hrs ago
15 / 40
ஊர் திரும்பல்: பொங்கல் விடுமுறை முடிந்து ஊருக்கு திரும்பிய தொழிலாளர்கள் கூட்டம் திருப்பூர் ரயில்வே ஸ்டேசனில் அலைமோதியது.
13 hrs ago
16 / 40
பிரார்த்தனை கூட்டம்: இயேசு அழைக்கிறார் அமைப்பு சார்பில் அரசு பொதுத்தேர்வு மற்றும் ஆண்டு இறுதி தேர்வு எழுத இருக்கும் மாணவ மாணவியருக்கான சிறப்பு பிரார்த்தனை கூட்டம் நேற்று சென்னையில் நடந்தது.இதில் கலந்து கொண்ட பள்ளி மாணவியர்.இடம் : எம்.சி.சி பள்ளி, சேத்துப்பட்டு.
14 hrs ago
17 / 40
சீறி பாய்ந்தது : புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் நடந்த ஜல்லிக்கட்டில் சீறி பாய்ந்த காளை.
14 hrs ago
18 / 40
பயணங்கள் தொடரும் : பொங்கல் பண்டிகையையொட்டி தொடர் விடுமுறை முடிந்து மீண்டும் பணிபுரியும் பகுதிக்கு செல்ல விழுப்புரம் பஸ்நிலையத்தில் முண்டியடித்துக் கொண்டு சென்னை பஸ்சில் ஏறும் பயணிகள்.
16 hrs ago
19 / 40
தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பழநிக்கு பஞ்சாமிர்தம் தயாரிக்க பல்வேறு பகுதியில் இருந்து டன் கணக்கில் வந்துள்ள மலை வாழைப்பழங்கள்.
16 hrs ago
20 / 40
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் சொர்ணகாளிஸ்வரர் கோயிலில் தைப்பூசத்திருவிழா முன்னிட்டு தேரோட்டம் நடைபெற்றது.
16 hrs ago
21 / 40
கடலூர் பழைய கலெக்டர் அலுவலகம் எதிரில் இந்தியன் வங்கி ஊழியர்கள் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
16 hrs ago
22 / 40
சென்னை சைதாப்பேட்டை காரணீஸ்வரர் கோவிலில் தெப்ப திருவிழா நடைபெற உள்ளதை முன்னிட்டு, கோவில் குளத்தில் தெப்பம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
17 hrs ago
23 / 40
தைப்பூசம் : தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பழநியில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.
17 hrs ago
24 / 40
ஜல்லிகட்டு மாடு: குடியரசு தினத்தை முன்னிட்டு கிருஷ்ணா நகர் குடியிருப்போர் நலச் சங்கம் சார்பில் கோலப் போட்டியில் பெண்கள் ஜல்லிக்கட்டு மாடு போல வண்ண கோலம் போட்டனர். இடம் : தாம்பரம் மேற்கு.
18 hrs ago
25 / 40
மார்கழி மாதம் முடிந்தும் சென்னையில் பனிப்பொழிவு அதிகரித்து காணப்படுகிறது.இடம்: சென்னை துறைமுகம்.
18 hrs ago
26 / 40
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் நடந்த ஜல்லிக்கட்டு திருவிழாவை துவக்கி வைக்க வந்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை வரவேற்கும் விதமாக நடனமாடிய தேவராட்டம் கலைஞர்கள்.
19 hrs ago
27 / 40
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் நடந்த ஜல்லிக்கட்டு திருவிழாவை துவக்கி வைக்க வந்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வளர்க்கும் கொம்பன் காளைகளை பிடித்து ஜல்லிகட்டை துவக்கி வைத்தார்.
20 hrs ago
28 / 40
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் நடந்த ஜல்லிக்கட்டு திருவிழாவில், துள்ளி வந்த காளையை அடக்கிய மாடுபிடி வீரர்.
20 hrs ago
29 / 40
ஜல்லிக்கட்டு திருவிழா: புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் நடந்த ஜல்லிக்கட்டு திருவிழாவில், துள்ளி வந்த காளையை அடக்கிய மாடுபிடி வீரர்.
21 hrs ago
30 / 40
தேரோட்டம் : சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் சொர்ணகாளிஸ்வரர் கோயில் தைப்பூசத்திருவிழா முன்னிட்டு தேரோட்டம் நடைபெற்றது.
22 hrs ago
31 / 40
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் ஜல்லிக்கட்டு துவங்கும் முன்னதாக, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மாடுபிடி வீரர்கள் காளைகளை துன்புறுத்த மாட்டோம் என உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.
1 day ago
32 / 40
கோவை ஆவாரம்பாளையம் கோ இண்டியா வளாகத்தில், ஜி தோக்கு காய் கராத்தே -தோ இந்தியா வீரர்களுக்கு  பிளாக் பெல்ட் விருது வழங்கும் விழா நடந்தது.
1 day ago
33 / 40
கோவை நேரு ஸ்டேடியத்தில் ஆர்தோ ஒன் மருத்துவமனை மற்றும் சென்னை எப்.சி கால்பந்து அணி சார்பில், கால்பந்து வீரர்களுக்கு காயமின்றி விளையாடுவது குறித்து உடற்பயிற்சி மற்றும் கால்பந்து பயிற்சி நடத்தினர்.
1 day ago
34 / 40
கோவை நேரு ஸ்டேடியத்தில் ஆர்தோ ஒன் மருத்துவமனை மற்றும் சென்னை எப்.சி கால்பந்து அணி சார்பில், கால்பந்து வீரர்களுக்கு காயமின்றி விளையாடுவது குறித்து உடற்பயிற்சி மற்றும் கால்பந்து பயிற்சி நடத்தினர்.
1 day ago
35 / 40
சென்னை நந்தனத்தில் நடந்து வரும் 42வது புத்தக திருவிழாவில், புத்தகங்களை பார்க்கும் ஆர்வலர்கள்.
1 day ago
36 / 40
தைப்பூச திருவிழாவை முன்னிட்டு  பழநி முருகன் கோயிலுக்கு  காவடிகளுடன் பாதயாத்திரை சென்ற பக்தர்கள். இடம்: பழநி-திண்டுக்கல் ரோடு விருப்பாட்சி மேடு.
1 day ago
37 / 40
விழிப்புணர்வு நாடகம் : காவல்துறை மதுவிலக்கு அமலாக்க பிரிவு சார்பில் மதுவிலக்கு பற்றிய விழிப்புணர்வு நாடகம் சென்னை லயோலா கல்லூரி மாணவர்களால் நடத்தப்பட்டது.இடம் : திருவான்மியூர் பேருந்து நிலையம், சென்னை
1 day ago
38 / 40
சாதனையாளர் விருது: கோவை பீளமேட்டில் உள்ள பி.எஸ்.ஜி.ஆர் கிருஷ்ணம்மாள் கல்லூரியின் நிறுவனர் தினவிழா நடந்தது,இதில் வாழ்நாள் சாதனையாளர் விருது சென்னை கவின்கேர் நிர்வாக இயக்குனர் ரங்கநாதனுக்கு பெங்களூரு மணிபால் குளோபல் கல்வி சேவை சேர்மன் மோகன்தாஸ் பை வழங்கினார்.
1 day ago
39 / 40
வறண்ட ஆறு : விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த மணலூர்பேட்டை தென்பெண்ணையாற்றில் நடந்த தீர்த்தவாரி நிகழ்ச்சியில் அங்கு இருந்த குடிநீர் தொட்டி தண்ணீரில் நீராடிய பக்தர்கள்.
1 day ago
40 / 40
சிலை திறப்புவிழா : கடலூர் அடுத்த ராமாபுரத்தில் முன்னாள் முதல்வர் காமராஜர் நடிகர் சிவாஜி கணேசன் சிலைகளை புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி திறந்து வைத்தார்.