தமிழகத்தின் கண்ணாடி

19 Aug 2019
51 mins ago
1 / 16
பழங்கால நாணயம் : கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் தனியார் நிறுவன ஊழியர் சேகரித்து வைத்துள்ள பழங்கால நாணயங்கள்.
2 hrs ago
2 / 16
கலெக்டரிடம் மனு : விழுப்புரம் அடுத்த செஞ்சியில் இருந்து கலெக்டர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்த மக்கள்.
3 hrs ago
3 / 16
உயரம் தாண்டும் போட்டி: மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் பள்ளி கல்வித்துறை சார்பில் நடந்த விளையாட்டில் பெண்களுக்கான உயரம் தாண்டும் போட்டியில் பங்கேற்ற மாணவி.
4 hrs ago
4 / 16
கிராம மக்கள் மனு : ஊட்டி கலெக்டர் அலுவலகத்திற்கு, பில்லிகம்பை கிராம மக்கள் டாஸ்மாக் அகற்றக்கோரி மனு அளிக்க வந்தனர்.
5 hrs ago
5 / 16
உலக புகைப்பட தினத்தை முன்னிட்டு சென்னை அரும்பாக்கம் வைஷ்ணவா கல்லூரி காட்சி தொடர்பியல் துறை சார்பில் நடந்த புகைப்பட கண்காட்சியில் இடம்பெற்றுள்ள புகைப்படங்களை ஆர்வமுடன் பார்வையிட்ட மாணவர்கள்.
6 hrs ago
6 / 16
சேலம் மாவட்டம் பெரியசோரகை பகுதியில் தமிழக அரசின் சிறப்பு குறைதீர்க்கும் கூட்டத்தில் முதல்வர் இபிஎஸ் மனுக்களை பெற்றார்.
7 hrs ago
7 / 16
சென்னை வில்லிவாக்கம் பாலியம்மன் கோவிலில் நடந்த தீமிதி திருவிழாவில் தீ மிதித்த பக்தர்கள்.
8 hrs ago
8 / 16
ஸ்மார் சிட்டி திட்டத்தில் செயல்படுத்தபடும் திட்டங்கள் குறித்து அனைத்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தக்கோரி, அனைத்து கட்சி நிர்வாகிகள் திருப்பூர் மாநகராட்சி கமிஷனரிடம் மனு கொடுத்தனர்.
8 hrs ago
9 / 16
ஊட்டி அரசு கலைக்கல்லூரியில் , உலக யானைகள் தின நிகழ்ச்சியில், வினாடி வினா போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு, பரிசு அளித்த முதுமலை புலிகள் காப்பக இயக்குனர் கவுசல் (வலமிருந்து முன்றாவது) உடன் கல்லூரி முதல்வர் ஈஸ்வரமுர்த்தி கலந்துகொண்டார்.
8 hrs ago
10 / 16
பணிமனையில் இருந்து பீச் ரயில் நிலையம் வழியாக வேளச்சேரி செல்லவிருந்த ரயிலின் இரண்டு பெட்டிகள் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டது. சம்பவ இடத்தை ஆய்வு செய்த அதிகாரிகள்.
10 hrs ago
11 / 16
அமராவதி அணையில் திறந்து விடப்பட்ட தண்ணீர் கரூர் மாவட்ட எல்லையான சின்னதாராபுரம் ஒத்த மாந்துறை அணையை தாண்டி ஆர்ப்பரித்து வந்தது.
11 hrs ago
12 / 16
மகா சங்கடஹர சதூர்த்தியை முன்னிட்டு உடுமலை பிரசன்ன விநாயகர் கோவிலில் 108 வலம்புரி சங்குகள் அபிஷேகத்திற்காக அலங்காரம் செய்து வைக்கப்பட்டிருந்தன.
14 hrs ago
13 / 16
புதுச்சேரி சமஸ்கிருத பாரதி சார்பில் லாஸ்பேட்டை விவேகானந்தா மேல்நிலைப் பள்ளியில் நடந்த சமஸ்கிருத தின விழாவில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, அரவிந்தர் ஆசிரமம் சமஸ்கிருத ஆசிரியர் சம்மணாந்த மிஸ்ரா சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார். அருகில் சென்னை சமஸ்கிருத பாரதி பால பாரதி திட்ட பொறுப்பாளர் விஜி மாதா.
18 hrs ago
14 / 16
பால் விலை உயர்வால் கோவை சுந்தராபுரம் பகுதியில் டீ விலை உயர்த்தப்பட்டுள்ளது.
20 hrs ago
15 / 16
கபாடி போட்டி : ப்ரோ கபாடி போட்டி இரண்டாவது ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் மற்றும் புநேரி பல்தான்ஸ் அணி மோதின. இதில் தாகூர் பிடியில் இருந்து தப்பிய புனேரி பல்தான்ஸ் அணி வீரர்.
21 hrs ago
16 / 16
நினைவு பரிசு : புதுச்சேரி சன் வே ஓட்டலில் இந்திய மருத்துவ சங்கம் புதுச்சேரி கிளை சார்பில் நடந்த மருத்துவ கருத்தரங்கில் பேசிய டாக்டர்கள் சேகர், கண்ணன் , பாலமுரளி ஆகியோருக்கு டாக்டர் சீனிவாசன் நினைவு பரிசு வழங்கினார்.