தமிழகத்தின் கண்ணாடி

17 Aug 2019
7 hrs ago
1 / 30
ரம்மியமான காட்சி: கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் தனியார் நிறுவன கண்காட்சியில் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு மழை நீரில் ரம்மியமாக காட்சி அளித்தது.
7 hrs ago
2 / 30
தெப்ப உற்சவம்: புதுச்சேரி வீராம்பட்டினம் செங்கழுநீர் அம்மன் கோவில் தெப்ப உற்சவம் நடந்தது.
8 hrs ago
3 / 30
ப்ரோ கபடி போட்டி: சென்னை ப்ரோ கபடி போட்டி துவங்கியது இதில் இரண்டாவது ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ் மற்றும் தபாங் டெல்லி அணிகள் மோதிக்கொண்டன இறுதியில் இரு அணிகளும் சமமான புள்ளியில் போட்டியை சமன் செய்தது. இதில் எதிர் அணி வீரரை பிடிக்க முயலும் பெங்கால் அணி வீரர்கள்.இடம் : நேரு உள்விளையாட்டு அரங்கம், சென்னை
9 hrs ago
4 / 30
புதுச்சேரி முதலியார் பேட்டை சேர்ந்த மூதாட்டி குப்பம்மாள் தனது 102வது பிறந்த நாளை தனது மகன், மகள், பேரன், பேத்திகள், மற்றும் உறவினர்கள் உதவியுடன் கேக் வெட்டி கொண்டாடினார்.
10 hrs ago
5 / 30
சிறப்பு அலங்காரம்: ராகவேந்திர ஸ்வாமிகளின் 348வது பிருந்தாவன பிரவேச தினத்தை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்த ராகவேந்திர சுவாமிகள்.இடம்: திருவல்லிக்கேணி, சென்னை.
11 hrs ago
6 / 30
வரவேற்பு: காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததை வரவேற்று சட்ட உரிமைகள் குழுவின் பொதுச்செயலாளர் ராஜலட்சுமி மந்தா தலைமையில் கன்னியாகுமரி - காஷ்மீர் வாகன யாத்திரையின்போது விழுப்புரத்தில் சமூக ஆர்வலர்கள் வரவேற்பு அளித்தனர்.
11 hrs ago
7 / 30
ஜெம் மருத்துவமனையின், பல்வகை உடல் உறுப்புகள் மாற்று சிகிச்சை மையத்தை தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் துவக்கி வைத்தார்... உடன் (இடமிருந்து வலம்) ஜெம் மருத்துவமனையின் தலைமை நிர்வாக அதிகாரி அசோகன், இயக்குனர் செந்தில் நாதன், தலைவர் சி.பழனிவேலு மற்றும் தாய்வான் நாட்டின் மருத்துவப் பல்கலையின் பேராசிரியர் யோ மிங் வு... இடம் : கிண்டி ,சென்னை...
12 hrs ago
8 / 30
கோவை மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள சாய்பாபா கோவில் வளாகத்தில் நடந்த விழாவில் ஆன்மிக சொற்பொழிவு நடத்த வந்த ஸ்ரீ சத்யசாய் மத்திய அறக்கட்டளை அறங்காவலர் ரத்னாகரை பக்தர்கள் வரவேற்றனர்.
13 hrs ago
9 / 30
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, பிரதிஷ்டை செய்வதற்காக, இந்து முன்னணி சார்பில், திருப்பூர் மாவட்டம் அழகுமலை பகுதியில் விநாயகர் சிலைகள் செய்யும் பணி ஜரூராக நடந்து வருகிறது.
14 hrs ago
10 / 30
சிவகங்கை இந்திரா நகர் நாகாத்தம்மன் கோயில் பூச்சொரிதல் விழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் நடந்தது.
14 hrs ago
11 / 30
சென்னையில் பெய்த திடீர் மழையால் வடபழனி 100 அடி சாலையில் தேங்கிய மழைநீர்.
15 hrs ago
12 / 30
சென்னையில் காலை பெய்த மழையால் கையில் குடையுடன் பஸ் நிலையத்தில் காத்திருக்கும் பொதுமக்கள். இடம் : திருவான்மியூர், சென்னை.
16 hrs ago
13 / 30
திருப்பூர் வடக்கு குறுமையம் சார்பில் பூப்பந்து போட்டி சின்னசாமியம்மாள் பள்ளியில் நடந்தது. இதில் நைருதி பள்ளி மற்றும் வித்யமந்திரி பள்ளி அணிகள் விளையாடினர்.
16 hrs ago
14 / 30
குளுமை சூழல்: புதுச்சேரியில் மிதமான மழை பெய்ததால் குளுமையான சூழ்நிலை நிலவியது கடற்கரைக்கு வந்த சுற்றுலா பயணிகள் குடை பிடித்தபடியே சென்றனர்.
17 hrs ago
15 / 30
ஊட்டி நகராச்சி மார்கெட்டில், வெளியூர் மார்கெட்டிற்கு அனுப்ப பீட்ருட் தரம் பிரிக்கப்படுகிறது.
17 hrs ago
16 / 30
ஊட்டி தாவரவியல் பூங்காவிற்கு, மழையிலும் வண்ண குடைகளுடன் வந்த சுற்றுலா பயணிகள்.
17 hrs ago
17 / 30
புதுச்சேரி பணியாளர் கூட்டுறவு கடன் சங்க 11 இயக்குனருக்கான தேர்தல் வேட்புமனுத் தாக்கல் துவங்கியது தேர்தல் அதிகாரி மோகன்ராஜ்யிடம் சுகாதாரப் பணியாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
17 hrs ago
18 / 30
சென்னையில் பெய்த மழையினால் சாலையில் தேங்கிய மழைநீரில் சீறிப்பாய்ந்து செல்லும் வாகன ஓட்டி. இடம்:காமராஜர் சாலை.
17 hrs ago
19 / 30
கோவை காளப்பட்டியில் உள்ள லிவோ ஸ்போர்ட்ஸ் கிளப்பில் டென்னிஸ் போட்டி நடந்தது.
17 hrs ago
20 / 30
மெரினா கடற்கரை சர்வீஸ் சாலையில் தேங்கிய மழை நீரை வாலியை கொண்டு வெளியேற்றும் பணியில் ஈடுபட்டுள்ள மாநகராட்சி ஊழியர்கள்.
17 hrs ago
21 / 30
புதுச்சேரி தெற்கு திமுக இலக்கிய அணி சார்பில் நடந்த பாரதிதாசன் பாடல்கள் ஒப்புவித்தல் போட்டியை மாநில அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ துவக்கி வைத்து பார்வையிட்டார் .அருகில் முன்னாள் எம்எல்ஏ அனிபால் கென்னடி.
17 hrs ago
22 / 30
புதுச்சேரி நேரு யுவகேந்திரா சார்பில் திப்பு ராயப்பேட்டையில் நடந்த இளையோர் பாராளுமன்றத்தினை அன்பழகன் எம்.எல்.ஏ துவக்கி வைத்து பேசினார். அருகில் மாவட்ட இளையோர் ஒருங்கிணைப்பாளர் தெய்வசிகாமணி.
17 hrs ago
23 / 30
திருப்பூர் பார்க் ரோட்டில் உள்ள குரு ராகவேந்திர கோவிலில் ஆராதனை மகஹாத்ஸ்வ விழா நடந்தது.
17 hrs ago
24 / 30
கள்ளக்குறிச்சியில், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் அங்கன்வாடி பணியாளருக்கான திறன் வளர்ப்பு பயிற்சி முகாம் நடந்தது. இதில், தமிழ்நாடு குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய மாநில உறுப்பினர் ஷீலா ஜெயந்தி பேசினார். அருகில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் கெஜலட்சுமி.
19 hrs ago
25 / 30
நேற்று இரவு பெய்த கனமழையால் விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் ரயில்வே தரை பாலத்தில் தேங்கிய மழைநீரில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன.
19 hrs ago
26 / 30
இது கடல் அல்ல : நேற்று இரவு பெய்த கன மழையால் விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் மழைநீர் தேங்கியதில் வாகனங்கள் செல்லும் போது கடல் அலைகள் போல் எழும்பியது.
21 hrs ago
27 / 30
கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு சென்னை அண்ணா சாலையில் உள்ள பூம்புகாரில், வைக்கப்பட்டுள்ள கிருஷ்ண தரிசனம் என்னும் கண்காட்சியில் இடம்பெற்றுள்ள கிருஷ்ணர் சிலையை பார்க்கும் சிறுமி...
21 hrs ago
28 / 30
பொள்ளாச்சிக்கு வந்த அத்திவரதர் : பொள்ளாச்சி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் பக்தர்களுக்கு அருள்பாலித்த அத்திவரதர் பெருமாள்.
1 day ago
29 / 30
பசுமைக்கு திரும்பிய மரங்களும், மகிழ வைக்கும் பாதைகளுமாய் இந்த ஆனைகட்டி அகளி ரோடு .
1 day ago
30 / 30
திண்டுக்கல் தாடிக்கொம்பு சவுந்தரராஜப் பெருமாள் கோயில் ஆடித் திருவிழாவை முன்னிட்டு பலூன் விற்பனை களை கட்டியது.