தமிழகத்தின் கண்ணாடி

23 Aug 2019
0 mins ago
1 / 12
இளங்கன்று பயமறியாது: கட்டுமஸ்தான உடல் அமைப்புள்ள இளைஞர் கூட துாக்க அஞ்சும் இளவட்டக் கல்லை அசைத்து பார்க்கும் சிறுவனின் தைரியம். இடம் .காரைக்குடி அருகே கோவிலூர் .
4 mins ago
2 / 12
உறியடி விழா : விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் ஸ்ரீலட்சுமி நரசிம்மப் பெருமாள் கோவிலில் கிருஷ்ணஜெயந்தி உறியடி விழா நடந்தது.
40 mins ago
3 / 12
கிருஷ்ணர் கண்காட்சி: கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு சென்னை ராயப்பேட்டையில் உள்ள கெளடியா மடத்தில் வைக்கப்பட்டுள்ள கிருஷ்ணர் கண்காட்சியை ஆர்வமுடன் பார்வையிட்ட பெண்கள்.
2 hrs ago
4 / 12
கோவை கொடிசியாவில் துவங்கிய தினமலர் ஸ்மார்ட் ஷாப்பர் எக்ஸ்போவில் இடம் பெற்ற புட்கோட் ஸ்டால்கள்.
3 hrs ago
5 / 12
திண்டுக்கல்லில் நடந்த முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்வு முகாமில் அமைச்சர் சீனிவாசன் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இடமிருந்து:கலெக்டர் விஜயலட்சுமி, முன்னாள் மேயர் மருதராஜ், எம்.எல்.ஏ.க்கள் பரமசிவம், தேன்மொழி.
6 hrs ago
6 / 12
கோவை கொடிசியாவில் துவங்கிய தினமலர் ஸ்மார்ட் ஷாப்பர் எக்ஸ்போவில் இடம் பெற்ற வண்ண மீன் கண்காட்சியை பார்த்து ரசிக்கும் குழந்தைகள்.
7 hrs ago
7 / 12
மத்திய உளவுத்துறை, தமிழக போலீசாருக்கு எச்சரிக்கை விடுத்ததை தொடர்ந்து விருத்தாசலம் சந்திப்பு ரயில் நிலையத்தில் போலீசார் குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயிலை சோதனையிட்டனர்.
7 hrs ago
8 / 12
கிருஷ்ணஜெயந்தியை முன்னிட்டு கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் விஸ்வ இந்துபரிஷத் சார்பில் குழந்தைகள் கிருஷ்ணர் வேடமிட்டு ஊர்வலமாக சென்றனர்.
8 hrs ago
9 / 12
ஷாப்பிங் திருவிழா !: தினமலர் ஸ்மார்ட் ஷாப்பர் எக்ஸ்போ கோவை கொடிசியாவில்இன்று துவங்கியது. அங்கு அமைக்கப்பட்டுள்ள விளையாட்டு அரங்கை மாவட்ட வருவாய் அலுவலர் ராமதுரைமுருகன் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார். அருகில் (இடமிருந்து) தினமலர் நாளிதழ் இணை இயக்குனர் லட்சுமிபதி ஆதிமூலம்.
9 hrs ago
10 / 12
சோதனை: பயங்கரவாதிகள் ஊடுருவியதாக வந்த தகவலை அடுத்து கோவை ரயில் நிலையத்தில் ரயில் பயணிகள் தீவிர சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்பட்டனர்.
9 hrs ago
11 / 12
கோவையில் பலத்த போலீஸ் வாகன சோதனையில் ஈடுபட்டனர். இடம்: சுந்தராபுரம்.
11 hrs ago
12 / 12
கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு விற்பனைக்கு வந்துள்ள கிருஷ்ணர் சிலைகளை ஆர்வமுடன் வாங்கும் பெண். இடம் : திருவான்மியூர் மார்கெட், சென்னை