தமிழகத்தின் கண்ணாடி

20 Apr 2019
1 mins ago
1 / 7
சென்னை புறநகர் பகுதிகளில் தண்ணீர் பற்றாக்குறை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பெண்கள் பிளாஸ்டிக் குடங்களோடு தெருத்தெருவாக சென்று குடி தண்ணீர் எடுத்து வருகின்றனர். இடம் . பம்மல்
3 mins ago
2 / 7
இயல்பு நிலை திரும்பியது: தேர்தல் முடிந்த நிலையில், போக்குவரத்து போலீசார் மீண்டும் வாகனத் தணிக்கையை தீவிரப்படுத்தியுள்ளனர். இடம் : மேட்டுப்பாளையம்
9 mins ago
3 / 7
ஊட்டியில் , பெய்த கனமழைக்கு நகராட்சி மார்கெட் குளம் போல் மாறியது.
1 hr ago
4 / 7
கோடை வெயிலில் சென்னை மக்களை குளிர்விக்கும் விதமாக கோயம்பேடு மார்க்கெட்டில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள சாத்துக்குடி பழங்கள்.
2 hrs ago
5 / 7
சென்னை வள்ளுவர் கோட்டம் பொம்மை மற்றும் சிலைகள் செய்யும் தனியார் குடோனில் இரவு தீ விபத்தினால் ஏற்பட்ட புகையை அணைக்கும் தீயணைப்பு படையினர்.
5 hrs ago
6 / 7
திருவண்ணாமலை அய்யங்குளக்கரை மண்டபத்தின் முன் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வசதியாக வெயில் தாக்கத்திலிருந்து குறைக்க தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சியடித்தனர்.
9 hrs ago
7 / 7
சென்னை வள்ளுவர் கோட்டம் பகுதியில் நள்ளிரவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.