தமிழகத்தின் கண்ணாடி

25 Jun 2019
26 mins ago
1 / 20
மத்திய ஜவுளித்துறை கைவினை ஆணைய அதிகாரிகள் அனகாபுத்தூர் கைத்தறி நெசவாளர்களுக்கு ஆலோசனை வழங்கினார்கள். இடம் : அனகாபுத்தூர்.
36 mins ago
2 / 20
மாணவர் சேர்க்கை ஆணை: மாற்றுத்திறனாளிகளுக்கான என்ஜினீயரிங் கலந்தாய்வு துவங்கியது,இதில் உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் கலந்து கொண்டு மாணவர் சேர்க்கை ஆணையை வழங்கினார்.இடம்: மத்திய பாலிடெக்னிக் கல்லூரி, தரமணி.
2 hrs ago
3 / 20
பா.ஜ., தலைவர் மனு: ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீடு திட்டத்தை புதுச்சேரியில் அமல்படுத்த கோரி பா.ஜ., தலைவர் சுவாமிநாதன் எம்.ஏல்.ஏ., துணைதலைவர் செல்வம், அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ்விடம் மனு அளித்தனர்.
2 hrs ago
4 / 20
தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு சவுந்திரராஜ பெருமாள் கோயிலில்  ஸ்ரீஸ்வர்ண ஆகர்ஷண பைரவரை காண திரண்ட பக்தர்கள்.
2 hrs ago
5 / 20
மதுரவாயல் டாக்டர் எம்.ஜி.ஆர்., பல்கலை கழகம் அருகே கூவம் ஆற்றில் கழிவு நீரில் படர்ந்துள்ள ஆகாயத்தாமரை.
2 hrs ago
6 / 20
கோவை டாடாபாத்திலுள்ள மின் வாரிய அலுவலகத்தில் நேற்று கோவை மண்டல அளவிலான போட்டிகளில் பங்கேற்பதற்கான தகுதி சுற்று வாலிபால் போட்டிகள் நடந்தன. இதில், தங்களது அசாத்திய திறனை வெளிப்படுத்திய வீரர்கள்.
2 hrs ago
7 / 20
புகையிலை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு கோவை ரயில் நிலையத்தில் விழிப்புணர்வு நாடகம் நிகழ்த்திய மாணவிகள் .
2 hrs ago
8 / 20
சுருக்குவலை தடை பிரச்னை தொடர்பான புதுச்சேரி சட்டசபை கமிட்டி ஹாலில் மீனவப் பிரதிநிதிகளுடன் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் ஆலோசனை நடத்தினார்.
3 hrs ago
9 / 20
காலை நேரத்தில் ஜிஎஸ்டி சாலையில் கனரக வாகனங்கள் மற்றும் ஆட்டோக்கள் நிறுத்துவதால் போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கின்றன . இடம்: இரும்புலியூர், தாம்பரம்.
4 hrs ago
10 / 20
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் தன் தள்ளாத வயதிலும் தண்ணீர் சேமித்து வைக்கும் மூதாட்டி. இடம் : நக்கீரர் நகர், தேனாம்பேட்டை.
4 hrs ago
11 / 20
மத்திய ஜவுளித்துறை கைவினை ஆணைய அதிகாரிகள் அனகாபுத்தூர் கைத்தறி நெசவாளர்களுக்கு ஆலோசனை வழங்கினர். இடம் : அனகாபுத்தூர்.
5 hrs ago
12 / 20
விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் தமிழ்நாடு உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாக துறை சார்பில் இலவச பால் கலப்பட பரிசோதனை முகாமை கலெக்டர் சுப்பிரமணியன் துவக்கி வைத்து பார்வையிட்டார்.
6 hrs ago
13 / 20
மனித கடத்தல் தடுப்பு குழு குறித்த கருத்தரங்கம், திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியில் நடந்தது. அதில் நடந்த கிராமிய கலை நிகழ்ச்சி.
7 hrs ago
14 / 20
மதுரையில் நடந்த விவசாயிகள குறை கேட்கும் கூட்டத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட விவசாயிகள் .
8 hrs ago
15 / 20
குடிநீர் பிரச்னையை தீர்க்க கோரி உடுமலை பெதப்பம்பட்டியில் தி.மு.க.சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடந்தது.
9 hrs ago
16 / 20
புதுச்சேரி, சோலை நகர் அருகில் மர்மமான முறையில் இறந்து கிடந்த ஆண் மயிலை ஆய்வுக்காக கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு வந்த வனத்துறை ஊழியர்கள்.1
11 hrs ago
17 / 20
புதுச்சேரியில் குடிநீர் அவசியத்தை வலியுறுத்தி பள்ளிக் குழந்தைகள் விழிப்புணர்வு ஏற்படுத்த வரைந்த கரிக்கட்டை ஓவியங்கள்.
11 hrs ago
18 / 20
புதுச்சேரி கடலூர் சாலை அரியாங்குப்பம் காவல் நிலையம் அருகில் இரவு மீன்களை ஏற்றிச் சென்ற மினி லோடு கேரியர் விபத்துக்குள்ளாகி மீன்கள் சாலையில் சிதறிக் கிடந்தன அதனை அள்ளிச் செல்லும் பொதுமக்கள்.
17 hrs ago
19 / 20
குடிநீர் பிரச்னையை தீர்த்து நடவடிக்கை எடுக்கும்படி காஞ்சி வடக்கு மாவட்டம் சார்பாக தாம்பரத்தில் கண்டன ஆர்பாட்டம் நடந்தது.
17 hrs ago
20 / 20
புதுச்சேரி ஜெயராம் ஓட்டலில் நடந்த கண்ணதாசனின் 92வது பிறந்தநாள் விழாவில் சபாநாயகர் சிவக்கொழுந்து, தமிழ் பணியை பாராட்டும் விதமாக 4 பேருக்கு விருதுகளை வழங்கினார் அருகில் எம் எல் ஏ வெங்கடேசன்.
Advertisement