தமிழகத்தின் கண்ணாடி

20 May 2019
4 mins ago
1 / 15
தேர் திருவிழா: திருப்பூர் விஸ்வேஸ்வரர் மற்றும் வீரராகவப்பெருமாள் கோயில் வைகாசி விசாக தேர் திருவிழாவை ஒட்டி பரிவேட்டை நிகழ்ச்சி நடந்தது. அதில் குதிரை வாகனத்தில் வீதி உலா வந்த ஈஸ்வரன் மற்றும் பெருமாள்.
1 hr ago
2 / 15
இசை நிகழ்ச்சி: சென்னை வடபழநி ஆண்டவர் கோயில் வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு வீரமணி ராஜு, அபிஷேக் வீரமணி ராஜு குழுவினரின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது
1 hr ago
3 / 15
புதுச்சேரி வாக்கு எண்ணும் அறையை கலெக்டர் அருண் ஆய்வு செய்தார்
1 hr ago
4 / 15
புஷ்ப யாகம்: விழுப்புரம் வைகுண்டவாசப் பெருமாள் கோவிலில் சித்திரை பிரம்மோற்சவத்தையொட்டி இரவு விடையாற்றி உற்சவத்தில் யாகம் மற்றும் உதிரிப்பூக்கள் மூலம் புஷ்ப யாகம் நடந்தது.
2 hrs ago
5 / 15
பாடிபில்டிங் போட்டி : சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்த யூஜோ கிளாசிக் 2019 பாடி பில்டிங் போட்டியில் பங்கேற்ற பெண்கள். இடம்: வேப்பேரி.
2 hrs ago
6 / 15
நினைவு ஜோதி: கர்நாடகாவில் இருந்து புதுச்சேரி கொண்டு வரப்பட்ட முன்னாள் பிரதமர் ராஜீவ் நினைவுஜோதியை புதுச்சேரி கடற்கரையில் முதல்வர் நாராயணசாமி வரவேற்றார்.
4 hrs ago
7 / 15
அரிதான தண்ணீர்...: கோடை காலத்தில் தண்ணீர் கிடைப்பதே அரிது என தேங்கிய தண்ணீரில் தாகம் தீர்த்த கால்நடைகள். இடம்: தேனி கலெக்டர் அலுவலக திட்ட சாலை .
4 hrs ago
8 / 15
தரிசனம்: ஞானபுரீ ஸ்ரீமங்கள மாருதி கோவிலுக்கு வந்த ஸ்ரீ ஐகத்குரு பதரிசங்கராச்சாரியார் சமஸ்தான சகடபுரம் ஸ்ரீவித்யாபீடம் ஸ்ரீவித்யா அபினவ ஸ்ரீ ஸ்ரீ க்ருஷ்ணாநந்த தீர்த்த மகா சுவாமிகள் ஆஞ்சநேயர் சன்னதியில் தரிசனம் செய்தார். அருகில் சகடபுரம் மடத்தின் ஸ்ரீ காரியம் சந்திரமெளலீஸ்வரர் ரமணி அண்ணா, அறங்காவலர் ஜெகன் .
7 hrs ago
9 / 15
ஊட்டி தாவரவியல் பூங்கா, மலர் கண்காட்சியை காண எராளமான சுற்றுலா பயணிகள் வந்தனர்.
8 hrs ago
10 / 15
சென்னை அருகே பம்மல் நகராட்சிக்குட்பட்ட எச்.எல். காலனியில் உள்ள சென்னை குடிநீர் பகிர்மான நிலையத்தில் குடிநீர் பிடிக்க நூற்றுக்கனக்கான குடங்கள் வரிசையில் வைக்கப்பட்டிருந்தன. இடம் : பம்மல்.
9 hrs ago
11 / 15
போலீஸ் கமிஷனர் உத்தரவையடுத்து போக்குவரத்து சாலைகளை ஆக்கிரமித்து பல நாட்களாக நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்ட வண்ணாரப்பேட்டை போக்குவரத்து போலீசார். இடம்- ராயபுரம் கல்லறை சாலை.
10 hrs ago
12 / 15
நடிகர் கமலஹாசனை கண்டித்து புதுச்சேரி, பா.ஜ.,மாநில இளைஞரணி தலைவர் மவுலிதேவன் தலைமையில் சாரம் அவ்வை திடலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
12 hrs ago
13 / 15
திருப்பூர் பழைய பேருந்து நிலையத்தில் 24 மணி நேரமும் டாஸ்மாக் கடை செயல்படுவதாக கூறி அவற்றை மூட வலியுறுத்தி நடுரோட்டில் பெட்ரோல் கேனுடன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட சமூக ஆர்வலர்.
14 hrs ago
14 / 15
புதுச்சேரி கருவடிக்குப்பம் வேதாஸ்ரம குருகுல கோமாதா கோயிலில் சங்கர ஜெயந்தி விழாவை முன்னிட்டு சாமிகளின் பட ஊர்வலம் நடந்தது.
21 hrs ago
15 / 15
கோடை நிறைவுவிழா: புதுச்சேரி கலை பண்பாட்டுத்துறை, தஞ்சை தென்னக பன்பாட்டு மையம் சார்பில் கடற்கரை காந்தி திடலில் நடந்த கோடை விழா நிறைவு விழாவில் கூத்து கலைஞர்களின் நிகழ்ச்சி நடந்தது.