தமிழகத்தின் கண்ணாடி

24 May 2019
2 hrs ago
1 / 36
தற்காப்பு பயிற்சி முகாமை டி.ஜி.பி. சுந்தரிநந்தா துவக்கி வைத்தார். அருகில் டி.ஐ.ஜி. ஈஸ்வர் சிங், எஸ்.பி அபூர்வ குப்தா. இடம்: புதுச்சேரி கடற்கரை
5 hrs ago
2 / 36
கோவை அரசு கலைக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடந்தது.இதில் பங்கேற்ற விளையாட்டு துறை மாணவ, மாணவியர்
5 hrs ago
3 / 36
புதுச்சேரி, லோக்சபா தேர்தலில் காங்., சார்பில் வெற்றி பெற்ற முன்னாள் சபாநாயகர் வைத்திலிங்கத்திற்கு அமைச்சர் நமச்சிவாயம் முதல்வர் நாராயணசாமி ஆகியோர் மலர்ச்செண்டு கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர் .அருகில் காங்.,மேலிட பார்வையாளர் சஞ்சய் தத்.
5 hrs ago
4 / 36
மழையை எதிர்பார்த்து மரங்கள் : சுட்டெரிக்கும் கோடை வெயிலில் சாலை ஓரத்தில் உள்ள புளிய மரங்கள் இலையுதிர்ந்து காணப்படுகிறது. இடம்: விருதாச்சலம் சேலம் பைபாஸ் பரவலூர்
5 hrs ago
5 / 36
சென்னை ஆழ்வார்பேட்டை டி.டி.கே., சாலையில் மெட்ரோ ரயில் சுரங்கப்பாதை அமைப்பதற்கான மண் பரிசோதனை நடைபெறுகிறது.
5 hrs ago
6 / 36
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில்களின் வருகை மற்றும் புறப்பாடு ஆகியவற்றை பயணிகள் தெரிந்து கொள்வதற்காக வைக்கப்பட்டுள்ள ஆர்மர் தொலைக்காட்சி.
5 hrs ago
7 / 36
தினமலர் செய்தி எதிரொலியாக விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நெடுஞ்சாலையில் சாலை பிரிவுக்காக பிரதிபலிப்பு பெயிண்ட் அடிக்கப்படுகிறது.
5 hrs ago
8 / 36
கானல் நீர்: அக்னி வெயிலை முன்னிட்டு நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே உள்ளது. விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் சர்வீஸ் சாலையில் தோன்றியுள்ள கானல் நீர்.
5 hrs ago
9 / 36
கோவை அரசு கலைக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடந்தது. இதில் பங்கேற்ற மாற்றுத்திறனாளிகள் பிரிவு தேசிய மாணவர் படை பிரிவு மற்றும் ராணுவ வீரர் குடும்ப பிரிவு மாணவ, மாணவியர்
5 hrs ago
10 / 36
லோக்சபா தேர்தல் ஓட்டு எண்ணும் பணிகள் முடிந்த நிலையில் ஓட்டுபதிவு இயந்திரங்கள் திருப்பூர் நல்லூர் மண்டல அலுவலகத்தில் தூப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது.
5 hrs ago
11 / 36
திருப்பூர் காசிவிஸ்நாதர் கோவிலில் நந்தி சிலைக்கு நாகலிங்க பூ படைக்கப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது.
5 hrs ago
12 / 36
ஆண்டிபட்டி சட்டசபை இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற தி.மு.க. வேட்பாளர் மகாராஜனுக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் கண்ணகி சான்றிதழ் வழங்கினார், அருகில் தி.மு.க. மாவட்ட பொறுப்பாளர் கம்பம் ராமகிருஷ்ணன்.
5 hrs ago
13 / 36
தி.மு.க., வெற்றி பெற்றதையடுத்து கோவை கோர்ட் வளாகத்தில் இனிப்பு வழங்கிக் கொண்டாடிய அக்கட்சி வழக்கறிஞர்கள்.
5 hrs ago
14 / 36
கோடை விடுமுறை முடிந்து, பள்ளிகள் திறக்க உள்ள நிலையில், தங்கள் குழந்தைகளுக்கு தேவையான பொருட்களை வாங்கும் பெற்றோர். இடம் : புரசைவாக்கம்,சென்னை.
5 hrs ago
15 / 36
கோடை விடுமுறை முடிந்து, பள்ளிகள் திறக்க உள்ள நிலையில், தங்கள் குழந்தைகளுக்கு தேவையான பொருட்களை வாங்கும் பெற்றோர். இடம் : புரசைவாக்கம்,சென்னை.
5 hrs ago
16 / 36
விழுப்புரத்தில் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக கிடங்கில் இருந்து பள்ளிகளுக்கு பாடப்புத்தகங்கள் பிரித்து அனுப்பும் பணிகள் நடக்கிறது.
5 hrs ago
17 / 36
ஊட்டி லாரான்ஸ் பள்ளி, நிறுவனர் தினவிழாவில், மாணவ, மாணவியரின் குதிரை சாகச நிகழ்ச்சி நடந்தது.
5 hrs ago
18 / 36
கோவை திருமலையம்பாளையம் இன்ஜினியரிங் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் நடந்த 9வது பட்டமளிப்பு விழாவில் தேசிய தர நிர்ணய கழகத்தின் தலைவர் அகர்வால் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார், அருகே இடமிருந்து கல்லூரியின் செயலாளர் கிருஷ்ணகுமார் நிர்வாக அறங்காவலர் கிருஷ்ணதாஸ் உள்ளிட்டோர் .
5 hrs ago
19 / 36
சேவையும் தேவையும் முடிந்தது..! இனி அடுத்த தேர்தலுக்கு இரண்டு ஆண்டுகள் கழித்து சந்திப்போம்... கோவை தடாகம் ரோட்டில் ஜி.சி.டியில் வைக்கப்பட்டிருந்த வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வெளியில் எடுத்துச் செல்லப்பட்டது
5 hrs ago
20 / 36
புதுச்சேரி லோக்சபா தேர்தல் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெற்ற வைத்திலிங்கம், வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்
5 hrs ago
21 / 36
ராமநாதபுரம் மாவட்டம் உப்பூர் அருகே மோர்பண்ணை ரணபத்திரகாளியம்மன் கோயில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு நடந்த பாய்மரப்படகு போட்டியில் காற்றை கிழித்துக்கொண்டு செல்லும் பாய்மர படகுகள்.
5 hrs ago
22 / 36
புதுச்சேரி லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்ற வைத்திலிங்கத்திடம், வெற்றி பெற்றதற்கான சான்றிதழை கலெக்டர் அருண் வழங்கினார்
5 hrs ago
23 / 36
கோவை உக்கடம் பெரியகுளம் பின்புறமுள்ள தடுப்பணை இடிக்கப்பட்டுள்ளது.
5 hrs ago
24 / 36
திண்டுக்கல் அருகே ஏ.வெள்ளோடு பகுதியில் பூத்துள்ள மஞ்சள் செவ்வந்தி பூக்கள்.
5 hrs ago
25 / 36
வண்டலூர் உயிரியல் பூங்காவில் நுழைவு கட்டணம் கடந்த வாரம் 50% உயர்ந்துவிட்டதால் பார்வையாளர்கள் வருகை மிகவும் குறைந்து விட்டது .
7 hrs ago
26 / 36
மஞ்சள் நீராட்டு விழா: கோவை தடாகம் ரோட்டிலுள்ள ஸ்ரீ சக்தி முத்து மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா நடந்தது,இதில் மஞ்சள் நீராட்டு விழாவில் ஆனந்தமாய் கொண்டாடிய பக்தர்கள்.
7 hrs ago
27 / 36
பூந்தமல்லி சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற தி மு க வேட்பாளர் கிருஷ்ணசாமிக்கு தேர்தல் அதிகாரி ரத்னா எம் எல் ஏ பதவிக்கான சான்றிதழ் வழங்கினார்.
8 hrs ago
28 / 36
சென்னை ஆழ்வார்பேட்டை டி.டி.கே., சாலையில் மெட்ரோ ரயில் சுரங்கப்பாதை அமைப்பதற்கான மண் பரிசோதனை நடைபெறுகிறது.
8 hrs ago
29 / 36
புதுச்சேரி, லோக்சபா தேர்தலில் காங்., சார்பில் வெற்றி பெற்ற முன்னாள் சபாநாயகர் வைத்திலிங்கம் வெற்றி சான்றிதழை பெற்று கொண்டு கட்சி அலுவலகத்திற்கு ஜீப்பில் ஊர்வலமாக வந்தார் அருகில் காங், மேலிட பார்வையாளர் சஞ்சய்தத் முதல்வர் நாராயணசாமி.
10 hrs ago
30 / 36
பூந்தமல்லி சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் கிருஷ்ணசாமிக்கு ஆதரவாளர்கள் மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
13 hrs ago
31 / 36
கடலூர் லோக்சபா தொகுதியில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் ரமேஷுக்கு தேர்தல் அதிகாரி கலெக்டர் அன்புசெல்வன் எம்.பி.,பதவிக்கான சான்றிதழ் வழங்கினார்.
18 hrs ago
32 / 36
கடலூர் லோக்சபா தொகுதியில் அரசியல்வாதிகளை ஆட்டி வைத்து பல பேரை ஆட்டம் போட வைத்து ஓட்டு எண்ணிக்கை முடிந்ததும் இறுதியில் அடங்கிப்போன ஓட்டுப்பெட்டி.
20 hrs ago
33 / 36
திருப்பூர், லோக்சபா தொகுதி தேர்தலில் வெற்றி பெற்ற கம்யூ., கட்சி வேட்பாளர் சுப்பராயனுக்கு தேர்தல் நடத்தும் அலுவலர் பழனிசாமி சான்றிதழ் வழங்கினார்.
20 hrs ago
34 / 36
அருள் பாலிப்பு : புதுச்சேரி காந்தி வீதி ஸ்ரீ வரதராஜப் பெருமாள் கோவில் 33 ஆம் ஆண்டு பிரம்மோற்ஸவ விழாவில், ஸ்ரீ வரதராஜப் பெருமாள் ஸ்ரீதேவி பூதேவியுடன் கண்ணாடி அறையில் ஊஞ்சல் உற்ஸவத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
21 hrs ago
35 / 36
லோக்சபா தேர்தலில், காங்கிரஸ் கட்சி சார்பில், திருச்சியில் போட்டியிட்ட வேட்பாளர் திருநாவுக்கரசு வெற்றி பெற்றார். வெற்றி பெற்றதற்கான சான்றிதழை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், கலெக்டருமான சிவராசு வழங்கினார். அருகில், திமுக முன்னாள் அமைச்சர் நேரு.
21 hrs ago
36 / 36
கோவை தொகுதியில் வெற்றி பெற்ற மாக்.கம்யூ., வேட்பாளர் நடராஜனுக்கு, கலெக்டர் ராசாமணி சான்றிதழ் வழங்கினார். அருகில் மத்திய தேர்தல் பார்வையாளர் ரேணு ஜெயபால் உள்ளார்.