தமிழகத்தின் கண்ணாடி

17 Oct 2019
26 mins ago
1 / 17
பூமியை குளிர்விக்க மதியம் 2 மணியளவில் திண்டுக்கல்லில் திரண்டு வந்த மேக கூட்டங்கள். இடம்: பழநி ரோடு .
39 mins ago
2 / 17
பதில்சொல்! நாசா செல்! : விழுப்புரம் சரஸ்வதி மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் நடந்த தினமலர் பட்டம் மாணவர் இதழின் வினாடி வினா போட்டியில் கலந்து கொண்ட மாணவ கூட்டத்தின் ஒரு பகுதி.
1 hr ago
3 / 17
சென்னையில் காலை பெய்த மழையால் ஓ.எம்.ஆர் சாலையில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டது, இதனால் நெரிசலில் சிக்கி தவிக்கும் வாகனங்கள். இடம்: தரமணி.
1 hr ago
4 / 17
கோவை பிஷப் அப்பாசாமி கல்லூரியில் நடந்த பாரதியார் பல்கலைக்கு உட்பட்ட கல்லூரிகளுக்கான பெண்கள் கூடைப்பந்து போட்டியில் இரண்டாம் இடம் பெற்ற பி எஸ் ஜி ஆர் கிருஷ்ணம்மாள் கல்லூரி அணியினர்.
2 hrs ago
5 / 17
சென்னையில், காலை பெய்த மழையில், குடைகளை பிடித்தவாறு சென்ற பொதுமக்கள்.இடம்: சென்ட்ரல், சென்னை.
2 hrs ago
6 / 17
வடகிழக்கு பருவமழை துவங்கியதால் கள்ளக்குறிச்சி அடுத்த கச்சராபாளையம் கோமுகி அணை கீழ்பகுதியில் குறுவை சாகுபடி நடவு செய்யும் பணி நடக்கிறது.
2 hrs ago
7 / 17
ஊட்டி தாவரவியல் பூங்காவில், இரண்டாம் சீசனுக்கு காட்சிக்கு வைக்கப்பட்ட மலர் தொட்டி செடிக்குகள் , தொடர் மழையால் பூக்கள் அழுகுவதால் கண்ணாடி மாளிகைக்கு மாற்றப்படுகிறது.
2 hrs ago
8 / 17
கள்ளக்குறிச்சி அடுத்த கச்சராபாளையம் கோமுகி அணை 38 அடி நிரம்பியுள்ளது.
3 hrs ago
9 / 17
தினமலர் நாளிதழ் மற்றும் பூஸ்ட் கேம்ப் இணைந்து நடத்திய பள்ளி மாணவர்களுக்கான கிரிக்கெட் விளையாட்டு தேர்வு கோவை சரவணம்பட்டியில் உள்ள இங்கிலீஷ் வில்லோ கிரிகெட் அகடமியில் நடந்தது இதில் பங்கேற்ற மாணவர்கள்.
4 hrs ago
10 / 17
தமிழ்நாடு வானிலை அறிவிப்புப்படி இன்று காலையில் இருந்து மழை பெய்ய துவங்கியது. இடம்: விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம்.
4 hrs ago
11 / 17
பருவமழையையடுத்து சென்னையில் தொடர்ந்து பெய்து வரும் மழைக்கு குடையுடன் பொதுமக்கள். இடம்- அவ்வை சண்முகம் சாலை, ராயப்பேட்டை.
4 hrs ago
12 / 17
வண்டில போனாலும் விபத்து.., நடந்து போனாலும் விபத்து.., அதனால மழையில் நடந்து கொண்டே தலைக்கவசம் போட்டுக்கிறேன் என்கிறாரோ!... இடம்: விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம்.
4 hrs ago
13 / 17
திருப்பூர், நஞ்சப்பா ஆண்கள் பள்ளியில் மாவட்ட அளவிலான கால்பந்து போட்டியில் பொங்கலூர் பி.வி.கே.என் அணியும் தாராபுரம் அரசு பள்ளி அணியும் மோதியது.
10 hrs ago
14 / 17
கடலூர் அரசு தலைமை மருத்துவமனை டெங்கு வார்டில், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
14 hrs ago
15 / 17
சாம்பியன் பட்டம்: மதுரையில் நடந்த மாநில போலீஸ் தடகளப்போட்டியில் ஒட்டு மொத்த சாம்பியன் பட்டம் வென்ற சென்னை அணிக்கு தென்மண்டல ஐ.ஜி., சண்முக ராஜேஸ்வரன் கேடயம் வழங்கினார்.
15 hrs ago
16 / 17
வானவில்: வடகிழக்கு பருவமழை பெய்ய துவங்கிய நிலையில்  வானவில் பார்ப்பதற்கு ரம்மியமாக இருந்தது. இடம்: திருப்பூர், நொய்யல் ஆறு.
16 hrs ago
17 / 17
சோதனை : ஆந்திராவில் உள்ள கல்கி பகவான் ஆசிரமத்திற்கு தொடர்புடைய சென்னையில் உள்ள அலுவலகத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு வருமான வரித்துறை சோதனை நடந்தது. இடம் : ஆயிரம் விளக்கு, சென்னை