தமிழகத்தின் கண்ணாடி

21 Oct 2019
1 hr ago
1 / 18
புதுச்சேரி காமராஜ் நகர் இடைத் தேர்தலில் சாமி பிள்ளை தோட்டம் பகுதி ஓட்டு சாவடியில் ஓட்டு போட காத்திருந்த வாக்காளர்கள் .
1 hr ago
2 / 18
புதுச்சேரி காமராஜ் நகர் இடைத் தேர்தல் சாமி பிள்ளை தோட்டம் பகுதியில் ஓட்டு போட சென்ற வர்களுக்கு காங் கட்சியினர் வழங்கிய சாய் பாபா படம் கொண்ட டோக்கன் வழங்கப்பட்டதால் தேர்தல் அதிரடி படையினர் அவற்றை கைப்பற்றினர்.
1 hr ago
3 / 18
புதுச்சேரி காமராஜ் நகர் இடைத் தேர்தல் திருவள்ளுவர் நகர் வாக்கு சாவடியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
1 hr ago
4 / 18
குன்னூர் அருகே எடப்பள்ளி , கிராம சாலை மோசமாக உள்ளதால் மழை நாட்களில் குளம் போல் நீர் தேங்குகிறது.
1 hr ago
5 / 18
ஊட்டி போலீஸ் ஆயுதபடை வளாகத்தில் , போலீஸ் நினைவு நாளை முன்னிட்டு , பணியில் வீரமரணம் அடைந்தவர்களுக்கு போலீசார் மரியாதை செலுத்தினார்.
1 hr ago
6 / 18
கோவை பி.ஆர்.எஸ் மைதானத்தில் காவல்துறையினர் வீரவணக்க நாளையொட்டி மறைந்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தினர்.
2 hrs ago
7 / 18
சபரிமலையில் மாத பூஜை நடை திறக்கப்பட்டுள்ளது.நான்கு நாள் திறக்கப்பட்ட நடை செவ்வாய் கிழமையுடன் நிறைவு பெறுகிறது. மகரவிளக்கு மண்டல பூஜை காலங்களில் வருவதுபோல மாத பூஜைக்கும் பக்தர்கள் இருமுடி கட்டி அதிக அளவில் வருகை தந்திருந்தனர். சுவாமி ஐயப்பனைக் காண சன்னிதானத்தில் இருமுடி கட்டுடன் காத்திருந்த பக்தர்களில் ஒரு பகுதியினர்.
2 hrs ago
8 / 18
பணியின்போது உயிர்நீத்த காவலர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக வீரவணக்கநாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது. சென்னை டிஜிபி அலுவலகத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில் உயிர் நீத்த காவலர்கள் நினைவாக மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்திய காவல்துறை தலைவர் திரிபாதி.
2 hrs ago
9 / 18
சபரிமலையில் மாத பூஜை நடை திறக்கப்பட்டுள்ளது.நான்கு நாள் திறக்கப்பட்ட நடை செவ்வாய் கிழமையுடன் நிறைவு பெறுகிறது. மாத பூஜைக்காக சுவாமி ஐயப்பனின் சன்னிதான கதவுகள் திறக்கப்படுகிறது.
2 hrs ago
10 / 18
சபரிமலையில் மாத பூஜை நடை திறக்கப்பட்டுள்ளது.நான்கு நாள் திறக்கப்பட்ட நடை செவ்வாய் கிழமையுடன் நிறைவு பெறுகிறது. மகரவிளக்கு மண்டல பூஜை காலங்களில் வருவதுபோல மாத பூஜைக்கும் பக்தர்கள் இருமுடி கட்டி அதிக அளவில் வருகை தந்திருந்தனர் அவர்களில் ஒரு பகுதியினர் பம்பா நதியில் குளித்துவிட்டு பூஜைகளில் ஈடுபட்டிருந்தனர்.
2 hrs ago
11 / 18
சபரிமலையில் மாத பூஜை நடை திறக்கப்பட்டுள்ளது.நான்கு நாள் திறக்கப்பட்ட நடை செவ்வாய் கிழமையுடன் நிறைவு பெறுகிறது. மகரவிளக்கு மண்டல பூஜை காலங்களில் வருவதுபோல மாத பூஜைக்கும் பக்தர்கள் இருமுடி கட்டி அதிக அளவில் வருகை தந்திருந்தனர் அவர்களில் ஒரு பகுதியினர் பம்பா நதி குறுக்கே உள்ள பாலத்தை கடந்து செல்கின்றனர்.
3 hrs ago
12 / 18
கோவை நேரு ஸ்டேடியம் கூடைபந்து மைதானத்தில் நடந்த மாவட்ட அளவிலான பள்ளி மாணவர்களுக்கான கூடைபந்து போட்டியில், நேஷனல் மாடல் பள்ளி அணியும், சர்வேஜனா பள்ளி அணியும் மோதின.
4 hrs ago
13 / 18
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி இடைத்தேர்தல் ரெட்டியார்பட்டியில் வரிசையில் காத்திருந்து ஒட்டளித்த மக்கள்.
4 hrs ago
14 / 18
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு உடுமலை தினசரி சந்தையில் ஆடுகளை வாங்க வந்த வியாபாரிகள்.
6 hrs ago
15 / 18
பசுமையான மரங்களுக்கு இடையே பாறைகளில் வழிந்தோடும் சிற்றருவிகள் . இடம்: உடுமலை திருமூர்த்திமலை
6 hrs ago
16 / 18
டாக்டர் எம்ஜிஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் நிகர்நிலை பல்கலைகழகத்தின் 28- வது பட்டமளிப்பு விழா நேற்று வேலப்பன் சாவடியில் நடைபெற்றது. இதில் பல்கலைகழகத்தின் நிறுவனர்-வேந்தர் ஏ.சி. சண்முகம் தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமிக்கு கவுரவ டாக்டர் பட்டத்தை வழங்கினார், உடன் இடமிருந்து வலம், கௌரவ டாக்டர் பட்டம் பெற்ற வர்கள், கங்கா மருத்துவமனையின் தலைவர் மற்றும் இயக்குனர், எஸ். ராஜ சபாபதி, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு- செயலர் ஜி.சதீஷ் ரெட்டி, பல்கலைக்கழகத்தின் தலைவர் ஏ. சி. எஸ். அருண்குமார். இயக்குனர் மற்றும் இசையமைப்பாளர் ஹரிஷ் ஜெயராஜ், மற்றும் நடனம் மற்றும் திரைப்பட நடிகை ஷோபனா சந்திரகுமார். இடம்: வேலப்பன்சாவடி.
10 hrs ago
17 / 18
குண்டு எறிதல் போட்டி: கடலூர் அண்ணா விளையாட்டு அரங்கில் மாவட்ட அளவிலான குண்டு எறிதல் போட்டி நடந்தது.
11 hrs ago
18 / 18
கச்சேரி : கோவை ராம் நகர் ஐயப்பன் பூஜா சங்கத்தின் மனோரஞ்சிதம் இசை நிகழ்ச்சியில் மாண்டலின் ராஜேஷ் கச்சேரி நடந்தது