தமிழகத்தின் கண்ணாடி

18 Jul 2019
4 mins ago
1 / 19
தனியார் பள்ளிக்கு இணையாக சென்னை மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் வண்ண ஓவியங்களை தீட்டி அசத்தியுள்ளனர். இடம்; காசிமேடு, சென்னை.
44 mins ago
2 / 19
ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி சார்பில் மாற்றுத்திறனுடைய மாணவர்களுக்கான இலவச மருத்துவ முகாம் விழுப்புரம் நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் நடந்தது. கலெக்டர் சுப்பிரமணியன் துவக்கி வைத்தார்.
59 mins ago
3 / 19
மழை தண்ணீர் செல்லும் உடுமலை தங்கம்மாள் ஓடையை ஜே.சி.பி. இயந்திரம் மூலம் தூர் வாரும் பணி நடக்கிறது.
1 hr ago
4 / 19
குஜராத்தில் இருந்து, திருப்பூருக்கு விற்பனைக்கு வந்துள்ள குழந்தைகள் ஊஞ்சல், 600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இடம்: பல்லடம் ரோடு, திருப்பூர்.
1 hr ago
5 / 19
ஊட்டி தாவரவியல் பூங்காவில், புல்தரை பராமரிப்பு பணி நடந்து வருகிறது.
1 hr ago
6 / 19
ஊட்டி B1 காவல் நிலையத்தை, தனியார் நிதி நிறுவன ஊழியரை , தாக்கியவர்களை கைது செய்யக்கோரி முற்றுகையிட்ட இளைஞர்கள்.
1 hr ago
7 / 19
ஊட்டி மார்கெட் பகுதியில், சாலையில் நிறுத்தப்பட்ட வாகனங்களுக்கு போலீசார் லாக் போட்டனர்.
1 hr ago
8 / 19
ஆதார் இசேவை மையங்கள் திருப்பூர் நகருக்குள் குறைவாகவே உள்ளதால், பொது மக்கள் நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருக்கின்றனர். இதற்கு தீர்வு காண மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
2 hrs ago
9 / 19
தஞ்சை விமானப் படை தளத்தில் 20 வது ஆண்டு கார்கில் போரின் நினைவு தினத்தை முன்னிட்டு, சரங் ஹெலிகாப்டர் சாகச நிகழ்ச்சி நடந்தது
2 hrs ago
10 / 19
கோவை நேரு ஸ்டேடியம் எதிரேயுள்ள கூடைபந்து கோர்ட்டில் நடந்து வரும் போட்டியில் மோதிய யுனைடெட் மற்றும் வெஸ்ட் ஜோன் அணியினர்.
3 hrs ago
11 / 19
சென்னையில் பரவலாக மழை பெய்ய துவங்கியதால் விற்பனைக்கு குவிந்துள்ள வண்ண குடைகள். இடம் : கோட்டூர்புரம்.
3 hrs ago
12 / 19
சட்டசபை கூட்டத்திற்கு வருகை தந்த தமிழக துணை முதல்வர் ஒ.பி.எஸ்.இடம் : தலைமை செயலகம், சென்னை
3 hrs ago
13 / 19
சட்டசபை கூட்டத்தை பார்வையிட வந்த காஞ்சிபுரம் அரசு பள்ளி மாணவர்கள்.இடம் : தலைமை செயலகம்.
3 hrs ago
14 / 19
சட்டசபை கூட்டத்திற்கு வருகை தந்த தி.மு.க தலைவர் ஸ்டாலின்.இடம் : தலைமை செயலகம்
5 hrs ago
15 / 19
மதுரையில் கோச்சடை மெயின் ரோட்டில் குடிதண்ணீர் உடைந்து தண்ணீர் அருணச்சலம் தெரு வரை வெள்ளம் போல் ஓடியது.
5 hrs ago
16 / 19
மதுரை, கோச்சைடை ரோட்டில் குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் ஆறாக ஓடுகிறது.
6 hrs ago
17 / 19
பருவத்தே பயிர் செய் என்பதற்கிணங்க மானாவாரி நிலங்களில் கோடை உழவு செய்து ஆடிப்பட்டத்தில் விதைப்பதற்காக மழையை எதிர்நோக்கி காத்திருக்கும் விளை நிலங்கள். இடம்: மதுரை, உசிலம்பட்டி அருகே அல்லிகுண்டம்
6 hrs ago
18 / 19
வீசும் ஆடிக்காற்றில் கடல் அலைபோல சீறிப்பாய்ந்து ஆர்ப்பரித்து வரும் தண்ணீரின் ரம்யமான காட்சி. இடம்: தேனி மீறுசமுத்திரம் கண்மாய்.
14 hrs ago
19 / 19
மின்மோட்டார் மூலம் நீரேற்றம்: சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய தாம்பரம் அருகே உள்ள எருமையூர் கல்குவாரியில் இருந்து ராட்சச மிதக்கும் மின்மோட்டார் மூலம் நீரேற்றும் வேலை நடைபெற்று வருகிறது. இடம்: எருமையூர் கல்குவாரி.
Advertisement