தமிழகத்தின் கண்ணாடி

16 Oct 2019
4 mins ago
1 / 23
வடகிழக்கு பருவமழை தொடங்கியதை அடுத்து சென்னை அண்ணாநகர் பகுதியில் பெய்த சாரல் மழையில் குடையுடன் சென்ற வாகன ஓட்டிகள்.
5 mins ago
2 / 23
தினமலர் மாணவர் பதிப்பான பட்டம் மற்றும் கோவை அமிர்தா விஷ்வ வித்யாபீடம் , லோட்டோ காப்பீ பைட் , சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி ஆகியோர் இணைந்து வழங்கும் பதில் சொல் : அமெரிக்கா செல் 2019 - 20 வினாடி வினா நிகழ்ச்சி குண்டூர் சுப்பையா பிள்ளை தி .நகர் ., மகளிர் மேல் நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது வெற்றி பெற்ற மாணவியருடன் ( இடமிருந்து வலம் ) ஆங்கில ஆசிரியர் ஞான சுந்தரி , தலைமை ஆசிரியர் முனைவர் ராஜலட்சுமி , முதுகலை ஆங்கில ஆசிரியர் வாசுகி உள்ளனர் : இடம்: தி. நகர்
6 mins ago
3 / 23
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, திருச்சி என். எஸ்.பி., ரோட்டில் மாநகர காவல்துறை சார்பில், சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது.
10 mins ago
4 / 23
சென்னை தி.நகர் பாண்டிபஜார் சாலையில் உள்ள மெட்ரோ குடிநீர் வாரிய அலுவலக மதில் சுவரில் சுவரொட்டிகளை தடுக்கும் விதமாக வரையப்பட்டுள்ள வண்ண ஓவியங்கள்
14 mins ago
5 / 23
நீர் இணையம் மற்றும் எய்ம் தொண்டு நிறுவனம் சார்பில் நீர் மேலாண்மை- சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி கோவை புனித மைக்கேல் பள்ளியில் நடந்தது. இதில் மாணவிகள் கலந்து கொண்டு பேசினார்.
48 mins ago
6 / 23
சென்னை அரும்பாக்கம் அரசு யோக இயற்கை மருத்துவ கல்லூரி மாணவிகள் அமைந்தகரை சிக்னலில் வாகன ஓட்டிகளுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கினர்.
53 mins ago
7 / 23
புதுச்சேரி,முத்தியால்பேட்டை காந்தி வீதியில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் மழைநீர் சேகரிப்பு தொட்டிக்கு இணைப்பு பைப் அமைக்கும் பணியில் ஈடுபட்ட ஒப்பந்த தொழிலாளர்கள்.
53 mins ago
8 / 23
தொடர் மழையால் திருப்பூர் சின்னக்காளிபாளையம் பகுதியில் அறுவடை செய்ய இருந்த நிலையில் கொத்தமல்லி அழுகியதால் விவாசாயிகள் கவலை அடைந்தனர்.
54 mins ago
9 / 23
சென்னை அரும்பாக்கம் அரசு யோக இயற்கை மருத்துவ கல்லூரி மாணவிகள் அமைந்தகரை சிக்னலில் வாகன ஓட்டிகளுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கினர்.
55 mins ago
10 / 23
புதுச்சேரி, பாப்ஸ்கோ ஊழியர்களுக்கு 26 மாத சம்பளத்தை வழங்க கோரி குடிமைப்பொருள் வழங்கல் துறை அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்களை போலீசார் கைது செய்து குண்டுகட்டாக வேனில் ஏற்றி சென்றனர்.
57 mins ago
11 / 23
நாங்குநேரி இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி ஆர்.மனோகரனை ஆதரித்து, நாங்குநேரி ஒன்றியம் அம்பலம் ஊராட்சி பகுதிகளில், திமுக தலைவர் திண்ணைப் பிரசாரம் மேற்கொண்டார்.
58 mins ago
12 / 23
வீரபாண்டிய கட்டபொம்மன் 220-வது நினைவு நாளை முன்னிட்டு, கயத்தாறில் உள்ள அவரது நினைவிடத்தில் ம.தி.மு.க., பொதுச் செயலாளர் வைகோ அஞ்சலி செலுத்தினார்.
1 hr ago
13 / 23
ஊட்டியில், காவல்துறை சார்பாக காவலர் வீர வணக்கம் நாள் ஊர்வலம் நடந்தது.
1 hr ago
14 / 23
ஊட்டி அரசு கலைக்கல்லூரியில், தூய்மை இந்தியா திட்டத்தில், எஸ்.ஏ.டி.பி., திட்ட இயக்குனர் சராயு துவக்கி வைத்தார், உடன் கல்லூரி முதல்வர் ஈஸ்வரமுர்த்தி மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டார்கள்.
1 hr ago
15 / 23
ஊட்டி பர்ன்ஹில் சந்திப்பு பகுதிக்கு, தினமும் மேய வரும் காட்டெருமையால் , பொதுமக்களுக்கு அச்சம்.
1 hr ago
16 / 23
ஊட்டி அருகேவுள்ள குட்ஷெப்பர்டு பள்ளி, நிறுவனர் தின விழாவில் நடனமாடிய பள்ளி மாணவியர்கள்.
1 hr ago
17 / 23
விழுப்புரம் நகராட்சி பெண்கள் பள்ளியில் நடந்த அறிவியல் கண்காட்சியை சி.இ.ஓ., முனுசாமி துவக்கி வைத்து பார்வையிட்டார்.
2 hrs ago
18 / 23
அதிகளவில் வண்டல் மண் ஏற்றி வந்த லாரி உடுமலை போடிபட்டி பஸ் ஸ்டாப் அருகே ரோட்டின் ஓரத்தில் சாய்ந்ததால் பொக்லைன் மூலம் மணலை அகற்றும் பணி நடந்தது.
5 hrs ago
19 / 23
சிசிடிவி கேமரா வைப்பதன் அவசியம் குறித்து சென்னை வண்ணாரப்பேட்டையில் உள்ள கடைகளில் துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்திய வண்ணாரப்பேட்டை துணை ஆணையர் சுப்புலட்சுமி. உடன் உதவி ஆணையர் முத்துக்குமார், ஆய்வாளர்கள் .
7 hrs ago
20 / 23
நினைவு கேடயம்: புதுச்சேரி நைனார் மண்டபம் ஆசீர்வதிக்கப்பட்ட அன்னை தெரசா மாதிரி மேல்நிலைப்பள்ளியில் தினமலர் பட்டம் மாணவர் இதழ் மற்றும் கோவை அமிர்தா விஸ்வ வித்யா பீடம் கல்வி நிறுவனத்துடன் இணைந்து நடத்திய வினாடி-வினா போட்டியில் முதலிடம் பிடித்த மாணவர்களுக்கு தினமலர் நினைவு கேடயம், மெடல் மற்றும் சான்றிதழும் மற்ற இடங்களை பிடித்த மாணவர்களுக்கு மெடல் மற்றும் சான்றிதழ்களை பள்ளி முதல்வர் அந்தோணிசாமி வழங்கினார். அருகில் ஆசிரியை கவியரசி.
8 hrs ago
21 / 23
தரம் பிரிக்கப்படும் வெங்காயம்:  திண்டுக்கல் மண்டியில் பெரிய வெங்காயத்தை தரம் பிரித்து மூடையிடும் பணி நடந்தது.
10 hrs ago
22 / 23
கூடைப்பந்துப் போட்டி: கோவை பிஷப் அப்பாசாமி கல்லூரியில் பாரதியார் பல்கலை உட்பட்ட கல்லூரி மாணவிகளுக்கான கூடைப்பந்து போட்டி நடந்தது.
11 hrs ago
23 / 23
சிசிடிவி கேமரா வைப்பதன் அவசியம் குறித்து சென்னை வண்ணாரப்பேட்டையில் உள்ள கடைகளில் துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்திய வண்ணாரப்பேட்டை துணை ஆணையர் சுப்புலட்சுமி. உடன் உதவி ஆணையர் முத்துக்குமார், ஆய்வாளர்கள் தேவேந்திர மற்றும் ரவி.