தமிழகத்தின் கண்ணாடி

19 Jun 2021
1hours ago
1 / 7
கரூர் வைஸ்யா வங்கி சார்பில் வழங்கப்பட்ட 10 ஆம்புலன்ஸ் வாகனங்களை, மக்கள் பயன்பாட்டிற்காக, முதல்வர் ஸ்டாலின் கொடியசைத்து துவக்கி வைத்தார். அருகில் அமைச்சர்கள் செந்தில் பாலாஜி,சுப்பிரமணியன், சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன், கரூர் வைஸ்யா வங்கியின் மண்டல மேலாளர்கள் கிருஷ்ணன், கணேசன் மற்றும் வங்கியின் பொது மேலாளர் சுதாகர். இடம்: தலைமைச் செயலகம், சென்னை
1hours ago
2 / 7
விரைவில் அரசு பேரூந்துகள் இயக்கப்பட உள்ள நிலையில் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள்.
1hours ago
3 / 7
சென்னை யானைக்கவுனி பகுதியில் கட்டப்பட்டு வரும் குடிசை மாற்று வாரிய கட்டடத்தை ஊரகத் தொழில் அமைச்சர் அன்பரசன் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டனர்.
2hours ago
4 / 7
கொரோனா பேரிடர் காலத்தில் கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் சிறப்பாக பணியாற்றியதற்கு இளைஞர் காங்கிரஸ் மாநில ஒருங்கிணைப்பாளர் ஹரிஹரசுதன் ஊழியர்களை கௌரவப்படுத்தி உணவு வழங்கினார்.
3hours ago
5 / 7
பயம் காட்டும் குட்டீஸ்: கோவை வ.உ.சி., உயிரியல் பூங்காவில் முதலை புதிதாக ஈன்றிய குட்டிகள்.
5hours ago
6 / 7
காலநிலை மாற்றத்தால் மயில் தோகை விரித்தாடுது கண்கொள்ளா காட்சியாக உள்ளது, அதுவும் ஆண் மயிலும் பெண் மயில்களும் சேர்ந்து இருப்பது இன்னும் பேரழகாய் உள்ளது. இடம் - கோவை சிவில் ஏரோட்ரோம் ரோடு.
6hours ago
7 / 7
விருதுநகரில் விற்பனைக்கு குவித்து வைக்கப்பட்டுள்ள கிர்ணி பழங்கள்.
Advertisement