தமிழகத்தின் கண்ணாடி

25 Aug 2019
1 hr ago
1 / 14
பயிலரங்கம்: ரீச் பவுண்டேசன் சார்பில் தமிழ் கல்வெட்டுகள் தொடர்பான, பயிலரங்கம் மற்றும் பயிற்சி வகுப்புகள், சென்னை தி.நகர், ராமகிருஷ்ணா பள்ளியில் துவங்கியது.
2 hrs ago
2 / 14
பயோமைனிங் இயந்திரம்: பல்லாவரம் ஏரியில் உள்ள குப்பைக்கிடங்கில் குவிந்துள்ள குப்பைகளை தரம் பிரித்து மறுசுழற்சி செய்ய பயோமைனிங் இயந்திரத்தை பொருத்துவதற்கு மண்அள்ளும் இயந்திரம் மூலம் பெரிய ஜல்லடை போன்ற இயந்திரத்தை எடுத்துச் செல்கின்றனர். இடம்: சென்னை, பல்லாவரம்.
4 hrs ago
3 / 14
பட்டமளிப்பு விழா: விழுப்புரம் சபா அகாடமி சார்பில் நடந்த பட்டமளிப்பு விழாவில் மாணவ மாணவிகளுக்கு பட்டம் மற்றும் சான்றிதழை தமிழ்நாடு தக்ஷின் பாரத் ஹிந்தி பிரச்சார சபை செயற்குழு உறுப்பினர் உமாசுதன் வழங்கினார். அருகில் தாளாளர் பிரீத்தா கனகசபாபதி.
5 hrs ago
4 / 14
போலீஸ் தேர்வு : ராமநாதபுரம் செய்யதம்மாள் பொறியியல் கல்லூரியில் இரண்டாம்நிலை போலீஸ் பணிக்கான எழுத்துத்தேர்வை எஸ்.பி..ஓம்பிரகாஷ் மீனா பார்வையிட்டார்.
6 hrs ago
5 / 14
ரேக்ளா போட்டி: உடுமலை அய்யம்பாளையம்புதூரில் நLந்த ரேக்ளா போட்டியில் 200 மீட்டர் எல்லை கோட்டை தாண்டும் காளைகள்.
6 hrs ago
6 / 14
வாய்ஸ் அமைப்பின் சார்பில், மாற்றுத்திறனாளிகளுக்கான வேலை வாய்ப்பு முகாம் சென்னை லயோலா கல்லூரியில் நடந்தது. இதில் கலந்து கொள்ள வந்த மாற்றுத்திறனாளிகள்.இடம்: நுங்கம்பாக்கம்.
9 hrs ago
7 / 14
கடலூர் வண்டிப்பாளையம் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தின் சார்பில் மழை வேண்டி கஞ்சி கலயம் ஏந்தி பெண்கள் ஊர்வலமாக வந்தனர்.
10 hrs ago
8 / 14
மெட்ராஸ் இன் ஹெரிடேட் என்ற அமைப்பு சார்பில் சென்னை அண்ணாசாலையில் உள்ள பாரம்பரிய கட்டடங்கள் குறித்து தெரிந்து கொள்ளும் வகையில் தமிழ் வாக் என்ற நிகழ்ச்சி நடந்தது.
11 hrs ago
9 / 14
திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் இரண்டாம்நிலை காவலர்களுக்கான எழுத்துத் தேர்வு நடந்தது. இதில், ஆர்வத்துடன் பங்கேற்று தேர்வெழுதிய இளைஞர்கள்.
13 hrs ago
10 / 14
பாதுகாப்பு : கோவையில் பயங்கரவாதிகளின் அச்சுறுத்தலை அடுத்து தேவாலயங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இடம்; சிரியன் சர்ச்.
14 hrs ago
11 / 14
ராமநாதபுரம் செய்யதம்மாள் பொறியியல் கல்லூரியில் போலீஸ் தேர்வு எழுத வந்தவர்களின் பெற்றோர்கள் தேர்வு மையத்தின் வெளியில் காத்திருந்தனர்.
14 hrs ago
12 / 14
சென்னை மாநகராட்சி சார்பில், ரேஸ் ஜீரோ டு வேஸ்ட் எனும் தலைப்பில் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடந்தது... இதில் பங்கேற்ற சென்னை மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ் மற்றும் பொதுமக்கள்...
17 hrs ago
13 / 14
கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு திருப்பூர் ராயபுரம், கிருஷ்ணர் கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த கிருஷ்ணர்
22 hrs ago
14 / 14
மெட்ராஸ் பிலிம் சொசைட்டியின் 62 ஆம் ஆண்டு விழா மயிலாப்பூரில் நடந்தது.இதில் பின்னணி பாடகி பி. சுசிலா விற்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கிய மெட்ராஸ் பிலிம் சொசைட்டி தலைவர் நல்லி குப்புசாமி. அருகில் இடமிருந்து தினமணி ஆசிரியர் வைத்தியநாதன் , திரைப்பட ஒளிப்பதிவாளர் ஆர். டி ராஜசேகர்,திரைப்பட இயக்குனர் ராஜீவ் மேனன், மெட்ராஸ் பிலிம் சொசைட்டியின் செயல் துணைத் தலைவர் மெய் ரூஸ்வெல்ட், பொது செயலாளர் சுபாஷ் சந்திரன் மற்றும் திரைப்பட இசையமைப்பாளர் சித்தார்த் விபின்.
Advertisement