தமிழகத்தின் கண்ணாடி

04 Jun 2020
10 hrs ago
1 / 40
திருச்செந்துார் முருகன்கோயிலில் வைகாசி விசாகத்தன்று ஆயிரக்கணக்கான மக்கள் கடலில்நீராடி வழிபடுவார்கள். பக்தர்கள் அனுமதிக்கப்படாததால் கடற்கரைவெறிச்சோடி காணப்பட்டது. (உள்படம்)கோயிலுக்கு செல்லும் ரோட்டில் நின்றபடி வணங்கிச்சென்றனர்.
11 hrs ago
2 / 40
சாரல் மழையில் நனைந்தது கோவை . இடம்: மருதமலை ரோடு .
12 hrs ago
3 / 40
தூணிலும் இருப்பார்; துரும்பிலும் இருப்பார்: வைகாசி விசாகத்தை முன்னிட்டு, விரதம் இருந்த பக்தர்கள், திருப்பரங்குன்றம் கோவில் நடை சாத்தப்பட்டதால், கோவில் தூணில் உள்ள பாலசுப்ரமணியம் சிலைக்கு பால் அபிஷேகம் செய்தனர்.
12 hrs ago
4 / 40
வைகாசி விசாகத்தை முன்னிட்டு, திருப்பரங்குன்றம் கோவிலில் உற்சவர் சண்முகருக்கு பால் அபிஷேகம் நடந்தது. அபிஷேகத்திற்கு பின்னர் மலர் அலங்காரத்தில் வள்ளி தெய்வானையுடன் காட்சியளித்த சண்முகர்.
12 hrs ago
5 / 40
தினமலர் எதிரொலி: சிவகங்கை பஸ் ஸ்டாண்டில் பயணிகள், அனைத்து விதமான பாதுகாப்புடன் பஸ்சில் ஏறினார்கள்.
12 hrs ago
6 / 40
சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் விதிகளை மீறி டூவிலரில் முக கவசம் அணியாமல் மூன்று நபர்களாக செல்கிறார்கள். இடம்: சிவகங்கை காந்தி வீதி.
12 hrs ago
7 / 40
திண்டுக்கல் கலெக்டர் அலுவலக வளாகத்தில் அரசு ஊழியர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
12 hrs ago
8 / 40
முதலமைச்சர் வழங்கி துவங்கியது வைத்த இருசக்கர வாகனத்தின் மூலம் கிருமி நாசினி தெளிக்கும் பணியை வியாசர்பாடி பக்தவச்சலம் காலனி பகுதியில் சிறப்பாக செயல்படுத்திய தீயணைப்பு வீரர்கள்.
12 hrs ago
9 / 40
அதிகபடியான கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் திணறும் அரசு பஸ் நடத்துனர். இடம்: கோவை, உக்கடம்.
12 hrs ago
10 / 40
ஊட்டி தாவரவியல் பூங்கா, குடியிருப்பு பகுதியில் பிடிபட்ட சிறுத்தைக்கு , கால்நடை மருத்துவமனையில் தொடர் சிகிச்சைக்கு பிறகு வண்டலூர் மிருககாட்சிக்கு மேல் சிகிச்சைக்கு கொண்டு செல்லப்படுகிறது.
12 hrs ago
11 / 40
கோவை மாவட்ட உடற்பயிற்சி மைய உரிமையார்கள் சங்கம் சார்பில், மூடப்பட்டிருக்கும் உடற்பயிற்சி மையங்களை திறக்க கோரி கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
12 hrs ago
12 / 40
கோவை தியாகி குமரன் மார்க்கெட்டில் அனைத்து கடைகளையும் திறக்க வழியுறுத்தி மூன்றாம் நாளாக மூடி வைத்துள்ளனர்.
12 hrs ago
13 / 40
விவசாயம் என்றும் தழைக்க வேண்டும் இம்மண்ணில் என நெல் கதிர்களை பிரிக்கும் பணியில் விவசாயிகள். இடம்: கோவை வேடபட்டி ரோடு .
12 hrs ago
14 / 40
இது புல்வெளி அல்ல... : குளிர்காலத்தில் அல்லி மலரை பூத்துக்குலுங்கும் இந்த கோவை நகராஜபுரம் குளம் வெயில் காலம் வந்தவுடன் செழிப்புற்று வறண்டு போய் விடுகிறது.
12 hrs ago
15 / 40
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் ரேஷன் கடைகளில் கபசுர குடிநீர் பாக்கெட் ரூபாய் 22 க்கு விற்கப்படுகிறது.
12 hrs ago
16 / 40
பார்வையற்றோருக்கு தெரியும் இடைவெளி பார்வையுள்ளோருக்கு ஏன் தெரியவில்லை. இடம்: கோவை, கலெக்டர் அலுவலகம்.
13 hrs ago
17 / 40
சாரல் மழையில் நனைந்தது கோவை . இடம்: மருதமலை ரோடு .
13 hrs ago
18 / 40
திருப்பூர், அதியமான் வீதியில் சேவாபாரதி சார்பில் கொரோனா தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்ள சிறு,குறு வியாபாரிகளுக்கு சானிடைசர், முக்கவசம் உள்ளிட்ட மருத்துவ பொருள் வழங்கப்பட்டது.
13 hrs ago
19 / 40
தினமலர் அறிமுகப்படுத்திய நமக்கு நாமே திட்டத்தின் மூலமாக சுத்தம் செய்து தூர்வாரப்பட்ட தற்போதைய நிமிலிச்சேரி ஏரியின் தோற்றம் இடம்: நெமிலிச்சேரி, குரோம்பேட்டை.
14 hrs ago
20 / 40
வைகாசி விசாகத்தின் போது பக்தர்கள் கூட்டம் நிறைந்து இருக்கும் சென்னை வடபழனி முருகன் கோவில் இந்தாண்டு கொரோனா தொற்றால் வெறிச்சோடி காணப்பட்டது.
14 hrs ago
21 / 40
ஊட்டி அருகே கல்லட்டி வனபகுதியில், 1970 ஆண்டு பணியின் போது இறந்த வன ஊழியர்க்காக வைக்கப்பட்டுள்ள நினைவு தூண்.
14 hrs ago
22 / 40
ஊட்டி தாவரவியல் பூங்காவில், பராமரிப்பு பணிகள் நடந்து வருகிறது.
14 hrs ago
23 / 40
வைகாசி விசாகத்தையொட்டி உடுமலை பிரசன்ன விநாயகர் கோவிலில் சுவாமி சுப்பிரமணியர் வள்ளி, தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
14 hrs ago
24 / 40
ஊரடங்கு காரணமாக வெறிச்சோடிய நிலையில் காணப்பட்ட சென்னை சாலைகளில் நீண்ட நாட்களுக்கு பிறகு வாகன நெரிசலுடன் காணப்படும் தரமணி டைடல் பார்க் சிக்னல்.
14 hrs ago
25 / 40
வைகாசி விசாகத்தின் போது பக்தர்கள் கூட்டம் நிறைந்து இருக்கும் சென்னை வடபழனி முருகன் கோவில் இந்தாண்டு வெறிச்சோடி காணப்பட்டது.
14 hrs ago
26 / 40
புதுச்சேரி அனைத்து பஞ்சாலை தொழிற்சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அமைச்சரிடம் மனு அளித்தனர்.
14 hrs ago
27 / 40
சுய உதவிக் குழுக்களில் பெறப்பட்ட கடன்களை அரசு தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தி, சீ.மலையாண்டி பட்டனம் மக்கள், பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்தனர்.
14 hrs ago
28 / 40
பொள்ளாச்சி தெற்கு ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய குழு கூட்டம் நடந்தது.
14 hrs ago
29 / 40
புதுச்சேரியில் இருந்து மேற்கு வங்கம் செல்லும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கான சிறப்பு ரயில் இன்று இரவு செல்ல உள்ள நிலையில் அதில் செல்லக்கூடிய பயணிகளுக்கு பதிவு செய்யப்பட்டது.
14 hrs ago
30 / 40
உடுமலை தாலுகா அலுவலகம் முன்பு விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் நிவாரணம் கேட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.
14 hrs ago
31 / 40
இதுவே தொடரட்டும்: : பொள்ளாச்சி பஸ் ஸ்டாண்டில், கோவை செல்லும் பயணிகள் வரிசையாக நிறுத்தப்பட்டு ஒவ்வொருவராக பஸ்சில் ஏற அனுமதிக்கப்பட்டனர்.
14 hrs ago
32 / 40
விருத்தாசலம் வயலூர் ஏரியில் நடைபெறும் குடிமராமத்து பணியை பொதுப்பணித்துறை சென்னை மண்டல தலைமைப் பொறியாளர் அசோகன் ஆய்வு செய்தார்.
14 hrs ago
33 / 40
புதுச்சேரி பழைய பஸ் நிலையம் அருகே உள்ள உழவர் சந்தை மக்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது.
14 hrs ago
34 / 40
சிவகங்கை அருகே இலுப்பங்குடி பகுதியில் மழையை நம்பி உழவு பணியை துவங்கியது
14 hrs ago
35 / 40
தொழிலாளர் சட்டங்களை திருத்தும் மத்திய அரசை கண்டித்து, எயுஎம்எல் சார்பில்,. திருப்பூர் குமரன் சிலை முன்பு ஆர்பாட்டம் நடந்தது.
14 hrs ago
36 / 40
கோவை குளங்களில் புதுவரவுகள்... : கோவை குளங்களில் புது வரவாக வந்துள்ள வாத்துக் குஞ்சுகள் தன் உடன்பிறப்புகள் உடன் உற்சாகமாய் துள்ளி விளையாடும் காட்சி. இடம்: கிருஷ்ணாம்பதி குளம்.
14 hrs ago
37 / 40
உடுமலை ஏரிப்பாளையம் நகராட்சி வளாக சுற்று சுவர் வர்ணம் அடிக்கப்பட்டு திருக்குறள் வாசகம் எழுதும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
14 hrs ago
38 / 40
அத்திகடவு திட்டத்தில் குழாய் பதிக்கும் பணிக்காக அவிநாசி அருகே துழுக்கமுத்தூரில் குழி தோண்டும் பணிகள் நடந்து வருகிறது.
14 hrs ago
39 / 40
விருத்தாசலத்தில் விற்கப்படும் கேரளா மாநிலம் எர்ணாகுளம் மாவட்ட அண்ணாச்சி பழங்களை மக்கள் ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர்.
14 hrs ago
40 / 40
விருத்தாசலத்தில் விற்கப்படும் ஆந்திர மாநில பச்சை வாழைப்பழங்களை மக்கள் ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர்.