தமிழகத்தின் கண்ணாடி

03 Jun 2020
47 mins ago
1 / 40
எங்கே சமூக இடைவெளி ..: கோவை காந்திபுரத்தில் உள்ள செல்போன் ஸ்பேர் பொருட்கள் விற்கும் கடைகளில் சமூக இடைவெளியின்றி கூட்டமாக குவிந்து நிற்கும் மக்கள்.
1 hr ago
2 / 40
சொந்த ஊரான ஜார்கண்ட் மாநிலத்திற்கு செல்ல திண்டுக்கல் ரயில் நிலையத்தில் காத்திருந்த  மாணவர்கள்.
1 hr ago
3 / 40
புதுச்சேரியில் வெளிமாநில தொழிலாளர்களை சொந்த ஊருக்கு திருப்பி அனுப்புவதற்கான ஆய்வுக் கூட்டம் கலெக்டர் அருண் தலைமையில் நடந்தது
1 hr ago
4 / 40
உடுமலை மடத்துகுளத்திலிருந்து கோவை செல்லும் அரசு பஸ்ஸில் சமூக இடைவெளி இல்லாமல் பயணம் செய்யும் பயணிகள் .
1 hr ago
5 / 40
புதுச்சேரி மீன் மார்க்கெட்டில் முக கவசம் அணியாமல் வந்தவர்களை போலீசார் அபராதம் விதித்து எச்சரித்து அனுப்பி வைத்தனர்
1 hr ago
6 / 40
புதுச்சேரி பெரிய மார்க்கெட்டில் காய்கறி கடை விற்பனை தொடங்கியது நகராட்சி ஊழியர்கள் பொது மக்களுக்கு அறிவுரை வழங்கினார்கள்
3 hrs ago
7 / 40
கள்ளக்குறிச்சி பஸ் ஸ்டாண்டில் சேலம் பஸ்கள் நிறுத்தும் இடத்தில் பயணிகள் அமர இருக்கைகள் இல்லாததால் பஸ்சுக்காக கால்கடுக்க காத்திருக்கும் பயணிகள்.
3 hrs ago
8 / 40
திருப்பூர், பெரிச்சிபாளையம் ரோட்டில் மின்கம்பத்தில் ஆட்கள் தேவை அட்டை தொங்க விடப்பட்டுள்ளது.
3 hrs ago
9 / 40
கள்ளக்குறிச்சி பருத்தி சந்தை ஊரடங்கு காரணமாக கடந்த 11 வாரமாக இயங்காமல் உள்ளதால் வெறிச்சோடி காணப்பட்டது.
3 hrs ago
10 / 40
பக்கிங்காம் கால்வாயில் மலைபோல் குவிந்து கிடக்கும் குப்பைகள் மற்றும் இறைச்சி கழிவுகள் இதனால் அப்பகுதியில் தொற்று பரவும் அபாயம் உள்ளது.இடம் : பாண்டியன் சாலை, நீலாங்கரை
3 hrs ago
11 / 40
திருப்பூரில் இருந்து சிறப்பு ரயில் ஒடிசா மாநிலத்திற்கு இயக்கப்பட்டது. அதில் பயணம் செய்ய நஞ்சப்பா பள்ளிக்கு வந்த வடமாநில தொழிலாளர்கள்.
3 hrs ago
12 / 40
திருப்பூர் எங் இந்தியா சார்பில் ஸ்மார்ட் குப்பை தொட்டி மாநகராட்சிக்கு வழங்கப்பட்டது.
3 hrs ago
13 / 40
திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள குடிநீர் ஆர்.ஓ., மெஷின் செயல்படாமல் உள்ளது. இதனால் அலுவலகம் வரும் பொதுமக்கள் தண்ணீர் விலைக்கு வாங்கும் நிலை உள்ளது.
3 hrs ago
14 / 40
மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து கள்ளக்குறிச்சிக்கு வந்த 11 பேருக்கு கள்ளக்குறிச்சி நகராட்சி மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை நடந்தது.
3 hrs ago
15 / 40
பொள்ளாச்சி கோட்டூர் ரோடு நகராட்சி பெண்கள் மேல் நிலை பள்ளி, கொரோனா சிறப்பு வார்டாக உள்ளது.
3 hrs ago
16 / 40
நீண்ட நாட்களுக்கு பிறகு தாம்பரம் வட்டாட்சியர் அலுவலகத்தின் இ சேவை மையம் மையத்திற்கு பொதுமக்கள் வந்திருந்து காத்திருந்தனர்.
3 hrs ago
17 / 40
பொள்ளாச்சி மீன்கரை ரோடு மக்கள், வீட்டு மனை பட்டா வழங்க கோரி, சப்-கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்தனர்.
3 hrs ago
18 / 40
அண்ணன் தங்கை பாசத்திற்கு இதுவே சாட்சி... இடம்: திருப்பூர், கோவில்வழி.
3 hrs ago
19 / 40
பொள்ளாச்சி பாரதியார் பல்கலை கலை மற்றும் அறிவியல் கல்லூரி கட்டடம் கட்டும் பணி தீவிரமாக நடக்கிறது.
3 hrs ago
20 / 40
வழக்குகளை விசாரிக்க கோவை கோர்ட்டில் வைக்கப்பட்டுள்ள பெட்டியில் வழக்கு சம்பந்தமான மனுக்கள் பெறப்பட்டன.
3 hrs ago
21 / 40
கோவை டிவிஎஸ் நகரில் உள்ள பெட்ரோல் பங்கில் வாடிக்கையாளர்கள் பெட்ரோல் தரத்தை ஆய்வு செய்தபிறகு வாகன ஓட்டிகளுக்கு பெட்ரோல் வழங்கப்படுகிறது.
3 hrs ago
22 / 40
புதுச்சேரி பஸ் நிலையம் இயங்கத் தொடங்கியது.
3 hrs ago
23 / 40
புதுச்சேரி பெரிய மார்க்கெட்டை நகராட்சி ஆணையர் சிவக்குமார் ஆய்வு மேற்கொண்டார்.
3 hrs ago
24 / 40
கொரோனா தொற்றால் சென்னை மேற்கு மாம்பலம் பிருந்தாவன் சாலை மூடப்பட்டுள்ளது.
3 hrs ago
25 / 40
சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள மாநகராட்சி பள்ளியில் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் பாடம் நடத்தப்படுகிறது.
3 hrs ago
26 / 40
எழும்பூர் அரசு அருங்காட்சியகம் அருகே பூத்துக் குலுங்கும் வண்ண பூக்கள் அவ்வழியே நடைபாதையில் செல்லும் பாதசாரிகளுக்கு நிழலைத் தருவதோடு கண்ணுக்கு குளிர்ச்சியாக காட்சி அளிக்கின்றன.
3 hrs ago
27 / 40
விழுப்புரம் மாவட்டம் உடற்பயிற்சி நிலையங்களின் உரிமையாளர்கள் உடற்பயிற்சிக் கூடங்களை திறக்க அனுமதிக்க கோரி கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்தனர்.
3 hrs ago
28 / 40
புதுச்சேரியில் கொரோனா ஊரடங்கு உத்தரவை அடுத்து பெரிய மார்க்கெட்டை எஸ். பி. மாறன், உள்ளாட்சித்துறை இயக்குனர மலர் கண்ணன், புதுச்சேரி நகராட்சி ஆணையர் சிவகுமார் ஆகியோர் ஆய்வு நடத்தினர்.
3 hrs ago
29 / 40
விழுப்புரம் நேருஜி ரோட்டில் நோ பார்க்கிங்கில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களை போக்குவரத்து போலீசார் பறிமுதல் செய்து வாகனத்தில் ஏற்றிச் சென்றனர்.
3 hrs ago
30 / 40
கோவை காவலர் பயிற்சி மைதான காவலர்களுக்கு கொரோனா தடுப்பு ஹோமியோபதி மாத்திரைகள் வழங்கப்பட்டன. இதை டாக்டர் மதிவாணன் வழங்க, காவலர் பயிற்சி பள்ளி துணைத் தலைவர் டிஎஸ்பி தென்னரசு பெற்றுக்கொண்டார்.
3 hrs ago
31 / 40
சென்னை சாலிகிராமத்தில் உள்ள தனியார் கல்லூரியில் புதிதாக துவக்கப்பட்ட, கொரோனா சிகிச்சை சித்தா மையத்தை, கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார். உடன் சித்த மருத்துவர் வீரபாபு...
3 hrs ago
32 / 40
சென்னையில் கொரோனா தொற்று அதிகமாகி வரும் நிலையில், இரு சக்கர வாகனத்தில் டபுல்ஸ் சென்றவர்களை மடக்கிப் பிடித்து அபராதம் விதித்த போலீசார்...இடம் : விருகம்பாக்கம், ஆற்காடு சாலை...
3 hrs ago
33 / 40
கோவை வடக்கு தாலுகா அலுவலகத்தில் இ சேவை மையத்தில் சமூக இடைவெளி இல்லாமல் வரிசையில் நின்ற பொதுமக்கள்.
3 hrs ago
34 / 40
கோவையிலிருந்து ரயிலில் செல்லும் பயணிகளை தீவிர சோதனைக்கு பின்பு அனுப்பி வைக்கப்பட்டது.
3 hrs ago
35 / 40
சென்னை வில்லிவாக்கம் சிட்கோ நகரில் புதிதாக கட்டப்பட்டுள்ள மாநகராட்சி பூங்காவில் வண்ணமயமான ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன...
3 hrs ago
36 / 40
ஆணுக்கு சரி சமமாக ஸ்டார்ட் ஆகாத லாரியை தள்ளும் பெண்கள். இடம்: கோவை, சிங்கநல்லுார்
3 hrs ago
37 / 40
சென்னை வில்லிவாக்கம் சிட்கோ நகரில் புதிதாக கட்டப்பட்டுள்ள மாநகராட்சி பூங்கா..
3 hrs ago
38 / 40
திருப்பூர் பழைய பஸ்ஸ்டாண்ட் ஸ்மார்ட்சிட்டி திட்டத்தில் புதுபிக்கும் பணி நடந்து வருகிறது. கட்டட இடிபாடுகளுக்கு நடுவே பஸ்களை நிறுத்துவதால், பொதுமக்கள் சிரமப்படுகின்றனர்.
3 hrs ago
39 / 40
சமூக இடைவெளியின்றி காய்கறி வாங்கும் பொதுமக்கள் . இடம்: கோவை, பெரியார் நகர்
3 hrs ago
40 / 40
திருப்பூர் பழையபஸ்ஸ்டாண்ட்டை, ஸ்மார்ட்சிட்டி திட்டத்தில் புதுபிக்கும் பணி நடந்து வருகிறது. கட்டட இடிபாடிகளுக்கு நடுவே பஸ்களை நிறுத்துவதால், பொதுமக்கள் நிற்பதற்கு இடமின்றி சிரமப்படுகின்றனர்.
Advertisement