தமிழகத்தின் கண்ணாடி

17 Sep 2019
17 mins ago
1 / 40
குப்பைகள் போடும் இடத்தை சுத்தம் செய்து அவ்விடத்தில் கோலம் போட்டு விழிப்புணர்வு ஏற்படுத்திய மாநகராட்சியினர். இடம்: தெலுங்கு வீதி, கோவை
59 mins ago
2 / 40
புரட்டாசி மாதத்தை முன்னிட்டு திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் விற்பனையாகாமல் தேங்கியுள்ள பூக்கள்.
1 hr ago
3 / 40
ஊட்டி தாவரவியல் பூங்காவில், இரண்டாம் சீசனுக்காக தொட்டிகளிலுள்ள மலர்ந்த மலர் செடிகள் , சுற்றுலா பயணிகள் பார்வைக்காக நாளை முதல் வளாகத்தில் அடுக்கப்படுகிறது.
1 hr ago
4 / 40
ஊட்டி தாவரவியல் பூங்காவில், இரண்டாம் சீசனுக்காக தொட்டிகளிலுள்ள மலர்ந்த டேலியா மலர்கள்.
1 hr ago
5 / 40
புதுச்சேரி தலைமை காவல் துறை அலுவலகம் எதிரே நோ பார்க்கிங்கில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரை போக்குவரத்து போலீசார் கிரேன் மூலம் தூக்கி அப்புறப்படுத்தினர்.
1 hr ago
6 / 40
விருத்தாசலம் அரசு ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் பல்லாக்கு சேமிப்பு கிடங்கை எம்எல்ஏ கலைச்செல்வன் ஆய்வு செய்தார்
1 hr ago
7 / 40
பாரதியார் பல்கலை சி மண்டலத்திற்கு உட்பட்ட அனைத்து கல்லூரிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டிகள் கோவை மலுமிச்சம்பட்டி எஸ்.என்.எம்.வி., கலை அறிவியல் கல்லூரியில் நடந்தது. இதில் அங்கப்பா கல்லூரி அணியும், ரத்தினம் கல்லூரி அணியும் மோதின.
1 hr ago
8 / 40
பிரதமர் மோடி பிறந்த நாளை முன்னிட்டு அனகாபுத்தூர் இயற்கை நார் நெசவாளர்கள் குழுமம் சார்பில் மோடியின் உருவப்படத்தை மூங்கில் நார் கொண்ட புடவையில் ஓவியம் வரைந்து மோடிக்கு அனுப்புவதற்காக தயார் நிலையில் இருக்கிறது. இடம்: அனகாபுத்தூர்.
1 hr ago
9 / 40
திருப்பூர் சி.ஐ.ஐ., சார்பில் ஓட்டல் மேபெரியில் கருத்தரங்கம் நடந்தது. அதில் கோவை ரூட்ஸ் நிறுவன இயக்குனர் கவிதாசன் பேசினார். அருகில் , திருப்பூர் சி.ஐ.ஐ., திருப்பூர் கிளை தணைதலைவர் பாலன், எம்ஏ எப்ஓஐ ஸ்ரேடஜிக் நிறுவன இயக்குனர் லதா, சி.ஐ.ஐ., முன்னாள் தலைவர் வெங்கடேஷ், அனுகிரகா பேஷன்ஸ் பொதுமேலாளர் மோகன்.
1 hr ago
10 / 40
அனைத்து சமய நிறுவன நிலங்களில் குடியிருப்போருக்கு, இடத்தை சொந்தமாக்க கோரி, திருப்பூர் இந்து சமய அறநிலையத்துறை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
1 hr ago
11 / 40
திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு, அனுமதியின்றி திமுக உள்ளிட்ட கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்ய முயற்சி செய்தனர். அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய போலீசார்.
1 hr ago
12 / 40
செல்பி வித் வாக்குவாதம்: திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு, அனுமதியின்றி திமுக உள்ளிட்ட கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்ய முயற்சி செய்தனர். அவர்களுக்கும் போலீசாருக்கும் வாக்குவாதம் நடந்தது. வாக்குவாதத்துடன் செல்பி எடுத்த கட்சி தொண்டர்.
1 hr ago
13 / 40
கோவை குனியமுத்தூர் ஸ்ரீ கிருஷ்ணா கல்லூரியில் நடந்த ஜோன் -சி கால்பந்து போட்டியில், நேரு கல்லூரி அணியும், வி.எல்.பி., கல்லூரி அணியும் மோதின.
1 hr ago
14 / 40
திருப்பூர் காஜாபட்டன் உரிமையாளர் சங்க மகாசபை கூட்டம், லட்சுமி நகர் பி.பி., மகாலில் நடந்தது. அதில் பங்கேற்றவர்கள்.
1 hr ago
15 / 40
கோவை அரசு மருத்துவமனைக்கு வரும் புற நோயாளிகள் மற்றும் அங்கு வருவோர்களுக்காக, ஸ்ரீதேவி டெக்ஸ்டைல்ஸ் நிறுவனம் சார்பில் உணவு வழங்கப்படுகிறது. இதை வாங்க வரிசையில் நிற்கும் பொதுமக்கள்.
1 hr ago
16 / 40
சரக்கு வாகனத்தில் ஆட்களை ஏற்றி செல்வது திருப்பூரில் அதிகரித்து வருகிறது. அசம்பாவிதங்கள் நடந்த பின்பு போலீசார் நடவடிக்கை எடுக்காமல், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
1 hr ago
17 / 40
பெருங்குடி - வேளச்சேரி இணைப்பு பாலம் கட்டும் பணி மந்தகதியில் நடந்து வருகிறது.
1 hr ago
18 / 40
சிட்லபாக்கத்தில் மின்சாரம் தாக்கி ஒருவர் இறந்ததற்கு காரணமான மின்கம்பம் சாய்ந்து கிடக்கிறது. இடம்: கல்யாணசுந்தரம் தெரு, சிட்லபாக்கம்.
1 hr ago
19 / 40
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த சாலை கிராமத்தில் நடந்த சத்துணவு மாத விழாவில் பள்ளி குழந்தைகள் மற்றும் பொதுமக்களின் விழிப்புணர்வு பேரணியை மாசிலாமணி எம்எல்ஏ தூக்கி வைத்தார்.
1 hr ago
20 / 40
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நகராட்சியில் பொதுமக்களின் விழிப்புணர்வுக்காக மூலிகைத்தோட்டம் தயாராகிவருகிறது.
1 hr ago
21 / 40
பிளாஸ்டிக் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு வேளச்சேரி ரயில்வே அதிகாரிகள் மற்றும் ரயில்வே காவல்துறையினர் ரயில் நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளில் பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
1 hr ago
22 / 40
பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நகர பாஜ.,சார்பில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
1 hr ago
23 / 40
வேளச்சேரி ரயில் நிலையத்தில் இருசக்கர வாகனம் நிறுத்தும் இடம் மேற்கூரையின்றி காணப்படுகிறது. இதனால் வாகனங்கள் வெயிலிலும், மழையிலும் சேதமடைகின்றன.
1 hr ago
24 / 40
கோவை ஆர்எஸ் புரம் டிபி ரோட்டில் குடிநீர் குழாய் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது
1 hr ago
25 / 40
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் முழுவதும் தூர்வாரப்பட்ட ராஜாங்குளத்தில், ஆக்கிரமித்துள்ள தாமரை கொடிகளை அப்புறப்படுத்தும் பணியை கமிஷனர் ஸ்ரீபிரகாஷ் ஆய்வு நடத்தினார்.
1 hr ago
26 / 40
கோவை ஆர்எஸ் புரம் பகுதியிலுள்ள ஓலா கால் டாக்ஸி நிறுவனத்தில் முற்றுகையிட்ட ஆட்டோ ஓட்டுனர்கள்
1 hr ago
27 / 40
கோவை ப்ரூக்ஃபீல்ட்ஸ் ரோட்டில் இரவு வைக்கப்பட்டுள்ள விளம்பர பேனர்களை போலீசார் அகற்றினர்
1 hr ago
28 / 40
மெகா சைஸ் பேனர்கள் ஆங்காங்கே ஆபத்தான வகையில் வைக்கப்பட்டுள்ளன . இடம்: பூந்தமல்லி சாலை வானகரம் அருகே.
1 hr ago
29 / 40
தெற்கு ரயில்வே சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பிரசாரம் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடந்தது. இதில் கூடுதல் பொது மேலாளர் மிஸ்ரா மற்றும் சென்னை ரயில்வே கோட்ட மேலாளர் மகேஷ் கலந்துகொண்டு ரயில்நிலையத்தில் உள்ள ஓட்டல்களில் பிளாஸ்டிக் பயண்பாடுகள் குறித்து ஆய்வு செய்தனர்.
1 hr ago
30 / 40
விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில் எதிரில் ஆக்கிரமைப்பு அகற்றும் பணி உதவி ஆணையர் பரணிதரன் தலைமையில் நடந்தது
1 hr ago
31 / 40
சென்னை மேற்கு சைதாப்பேட்டை மசூதி தெரு பேருந்து நிறுத்த நிழற்குடையை ஆக்கிரமித்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்கள்.
1 hr ago
32 / 40
உலக நோயாளிகள் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு, சென்னை ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் நோயாளிகளுக்கு வழங்கும் சிகிச்சை குறித்த உறுதிமொழி பிரசாரம் நடந்தது. கண்காணிப்பாளர் நாராயணசுவாமி தலைமையில் நடந்த இந்த உறுதிமொழி பிரசாரத்தில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் கலந்துகொண்டனர்.
2 hrs ago
33 / 40
புதுச்சேரியில் இருந்து கடலூருக்கு ஆட்டோவில் சாராயம் கடத்தி வந்தவரை போலீசார் கைது செய்து சாராயம் மற்றும் ஆட்டோவை பறிமுதல் செய்தனர்.
2 hrs ago
34 / 40
பிரேசிலில் நடந்த துப்பாக்கி சுடும் போட்டியில் தங்கம் வென்ற இளவேனிலுக்கு கடலூரில் செங்குந்தர் மகாஜன சங்கத்தின் சார்பில் பாராட்டு விழா நடந்தது.
2 hrs ago
35 / 40
கடலூர் அரசு பெரியார் கலைக் கல்லூரியில் கோரிக்கையை வலியுறுத்தி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
2 hrs ago
36 / 40
கடலூரில் பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாளையொட்டி பா.ஜ.க. சார்பில் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
2 hrs ago
37 / 40
உணவுக்காக சாலைகளிலும் வீடுகளையும் தேடிச் செல்லும் அரசு வழங்கிய இலவச கறவை மாடுகள். இடம்: கல்யாணசுந்தரம் தெரு, சிட்லபாக்கம்.
5 hrs ago
38 / 40
விதை எடுப்பதற்காக விடப்பட்டுள்ள வெங்காய செடிகளில் பூக்கள் பூத்துள்ளன. இடம்: உடுமலை பெரியகோட்டை
5 hrs ago
39 / 40
புதுச்சேரி பி.எஸ்.என்.எல்., அலுவலக வளாகத்தில் உள்ள வாடிக்கையாளர் சேவை மையத்தை வைத்திலிங்கம் எம்பி பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். அருகில் பொது மேலாளர் ஜெயக்குமார் ஜெயவேலு.
5 hrs ago
40 / 40
புதுச்சேரி, அரசு கல்வி அமைச்சரின் நல்லாசியர் விருது பெற்ற முனைவர் ஜெயசீலனுக்கு என்.கே.சி.அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்த பாராட்டு விழாவில் துணை முதல்வர் ரேணுகா நினைவு பரிசு வழங்கினார். அருகில் தலைமையாசிரியர் தனபால்.