தமிழகத்தின் கண்ணாடி

13 Jul 2020
1day ago
1 / 21
கோவை கமிஷ்னர் அலுவலகத்தில் குற்றப்பிரிவில் ஒருவருக்கு கொரோனோ உறுதியானதால் பொதுமக்களுக்கு தடை விதித்து பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
1day ago
2 / 21
சமூக இடைவெளியை கடைபிடித்து இரையை பிடிக்க நீண்ட நேரமாய் காத்திருக்கிறதோ இந்த மீன்கொத்தி பறவைகள். இடம்: கோவை போத்தனூர்.
1day ago
3 / 21
விழுப்புரம் நகரில் உள்ள கடைகளில் சமூக இடைவெளி மற்றும் பாதுகாப்பு நடவடிக்கை பின்பற்றப்படுகிறதா என மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
1day ago
4 / 21
நிழற்குடை :பழநி-கொழுமம் ரோட்டில் தளிர் விட்ட மரங்கள் இருபுறமும் பசுமையாக காட்சியளிக்கிறது.
1day ago
5 / 21
சிவகங்கையில் நத்தம் செவ்வாழை பழங்கள் கிலோ 60 ரூபாய்க்கு விற்பனை ஆனது.
1day ago
6 / 21
விழுப்புரம் மாவட்டத்தில் காவல் துறையில் பணிபுரிபவர்களுக்கு மன அழுத்தத்தை போக்கும் விதமாக அவர்களது திருமண நாளையொட்டி காவலர்களுக்கு வாழ்த்து அட்டைகளை எஸ்பி ராதாகிருஷ்ணன் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
1day ago
7 / 21
அரசு பஸ்சுக்காக காத்திருந்த அரசு ஊழியர்கள் இடம். போஸ்ட் ஆபீஸ் பஸ் ஸ்டாப் கடலூர்.
1day ago
8 / 21
ஊட்டி சிறுவர் மன்றத்தில், போலீசாருக்கு பொது மக்களிடம் நடந்து கொள்ளும் முறை குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
1day ago
9 / 21
குன்றத்தூரில் உள்ள மின் நிலையத்தில் மின் கட்டணம் கட்டுவதற்க்கு வந்த பொதுமக்கள் சமூக இடைவெளி இல்லாமல் நெருக்கமாக நின்று கட்டணத்தை கட்டிவருகின்றனர் .இடம் :குன்றத்தூர்.
1day ago
10 / 21
புதுச்சேரி பெரியகடை போலீஸ் நிலையத்தை ஆய்வு மேற்கொண்ட எஸ்எஸ்பி., பிரதிக்ஷா போலீசாருக்கு அறிவுரை கூறி, ஹோமியோபதி மாத்திரை வழங்கினார். அருகில் எஸ்பி மாறன்.
1day ago
11 / 21
திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட, கீழகல்கண்டார் கோட்டை பகுதியில் விவசாய விளைநிலங்களை அழித்து கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
1day ago
12 / 21
கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு, அதிலிருந்து குணமடைந்து மீண்டும் பணிக்குத் திரும்பிய போலீசாருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கிய சென்னை போலீஸ் கமிஷனர். மகேஷ்குமார் அகர்வால். இடம்: வேப்பேரி.
1day ago
13 / 21
கொரோனா பாதிப்பை உணராமல் விருத்தாசலம் ஸ்டேட் பேங்க் வங்கி வளாகத்தில் சமூக இடைவெளி இன்றி குவிந்திருந்த வாடிக்கையாளர்கள்.
1day ago
14 / 21
திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட, கீழகல்கண்டார் கோட்டை பகுதியில் விவசாய விளைநிலங்களை அழித்து கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து, விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில ஈடுபட்டு வந்தனர். இதில், பங்கேற்ற விவசாயி ரவிக்குமார் உடலில் கத்தியால் கிழித்து கொண்டதால் பரப்பரப்பு ஏற்பட்டது.
1day ago
15 / 21
நீர்மட்டம் குறைந்து தூர் வராப்படாமல் மண்மேடாக நிறைந்து காணப்படும் உடுமலை திருமூர்த்திஅணை.
1day ago
16 / 21
திருப்பூர், பி.என் ரோட்டில் உள்ள யூனியன் பேங்கில் சமூக இடைவெளியின்றி மக்கள் கூட்டமாக காத்திருந்தனர்.
1day ago
17 / 21
நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அரசு மருத்துவமனையில், செவிலியர்கள் உட்பட ஊழியர்கள் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனையடுத்து மஞ்சூரில் வியாபாரிகள் சங்கத்தினர் மூன்று நாட்களுக்கு கடை, வணிக நிறுவனங்களை மூடியுள்ளனர்.
1day ago
18 / 21
சென்னை மடிப்பாக்கம் பகுதியில் அதிவேகமாக பரவி வரும் கொரோனா தொற்று காரணமாக, மாநகராட்சி சார்பில் மருத்துவ முகாம் நடைபெற்றது. இடம் : கோவிந்தசாமி நகர்.
1day ago
19 / 21
முழு ஊரடங்கையொட்டி கடலூர் மஞ்சக்குப்பம் மார்க்கெட் பகுதி வெறிச்சோடி காணப்பட்டது.
1day ago
20 / 21
முழு ஊரடங்கு அமலுக்கு வந்ததையொட்டி கடலூர் முதுநகர் மீன்பிடித் துறைமுகத்தில் படகுகள் நிறுத்தி வைக்கபட்டுள்ளது.
1day ago
21 / 21
காலை நேரங்களில் சுடும் வெயில், இரவில் ஜில்லென்ற காற்றுடன் மழைதுளி என மாறி மாறி வீசி வந்தாலும் சென்னை வாசிகளை மாலை நேரத்தில் வசியப்படுத்தும் வண்ண நிற கொஞ்ச வைக்கும் ரம்யமான ஆகாயம். இடம்- தண்டையார்பேட்டை.
Advertisement