தமிழகத்தின் கண்ணாடி

15 Sep 2019
50 mins ago
1 / 27
கடந்து சென்ற வாகனங்கள்: சென்னையில் கருமேகத்துடன் கொட்டிய மழையை பொருட்படுத்தாமல் சென்ற வாகனங்கள். இடம்: மீனம்பாக்கம்.
2 hrs ago
2 / 27
புதுச்சேரி தமிழ்ச் சங்கத்தில் நடந்த உலகக் கவிஞர்கள் சங்கம் நடத்தும் கவியரங்கம் மற்றும் பரிசளிப்பு விழாவில் சிறந்த கவிதைக்கு ஜெயபால் எம்எல்ஏ பரிசுகளை வழங்கினார். அருகில் தமிழ் சங்கத் தலைவர் முத்து.
3 hrs ago
3 / 27
கோவையில் காந்திபூங்கா புதுப்பிக்கப்பட்டுள்ளதை செல்பி எடுத்து ரசித்த மக்கள்.
5 hrs ago
4 / 27
சென்னை விமான நிலையம் அருகே தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில் செடிகள் நடும் பணி நடக்கிறது. இடம்: மீனம்பாக்கம்.
5 hrs ago
5 / 27
கோவை ஆவாரம்பாளையத்தில் உள்ள ராமகிருஷ்ணா கல்லூரியில், கிரிக்கெட் மைதானம் துவக்க விழா நடந்தது.
5 hrs ago
6 / 27
உலக வனவிலங்கு வார விழா வருவதை முன்னிட்டு நடத்தப்பட்ட ஓவியப் போட்டியில் கலந்து கொண்டு ஓவியங்களை வரையும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள். இடம்: சிறுவர் பூங்கா,கிண்டி
6 hrs ago
7 / 27
சென்னை ரோட்டரி கிளப் ஆப் மெட்ராஸ் சார்பில் டெர்ரி பாக்ஸ் ரன் என்னும் புற்றுநோய் விழிப்புணர்வு மாரத்தான் நடந்தது, இதில் ஆர்வமுடன் கலந்து கொண்ட பொதுமக்கள். இடம் : எலியட்ஸ் கடற்கரை, பெசன்ட்நகர்.
7 hrs ago
8 / 27
தே.மு.தி.க., கட்சி சார்பில், திருப்பூரில் முப்பெரு விழா நடக்கிறது. இதற்காக காங்கேயம் ரோட்டில் கட்சியினர் வைத்துள்ள பிரமாண்ட பேனர் மற்றும் கொடிகள்.
7 hrs ago
9 / 27
புதுச்சேரி தொழிலாளர் துறையில் நடந்த வேலை வாய்ப்பு முகாமை வேலைவாய்ப்பு துறை அதிகாரி சித்ரா துவக்கி வைத்து பார்வையிட்டார்.
8 hrs ago
10 / 27
கோவை போத்தனூர் பகுதியில் ரயில் தண்டவாளத்தை கடக்கும் கழிவுநீர்க் குழாயை ராட்சச கிரேன் மூலம் அப்புறப்படுத்தும் பணி நடந்தது.
9 hrs ago
11 / 27
புதுச்சேரி நலவழிதுறை சார்பில் சண்டே மார்க்கெட்டில் நடந்த ரத்தசோகை விழிப்புணர்வு முகாமை சுகாதாரத்துறை இயக்குனர் மோகன் குமார் துவக்கி வைத்து பார்வையிட்டார். அருகில் குடும்ப நலத்துறை துணை இயக்குனர் அல்லிராணி.
9 hrs ago
12 / 27
புதுச்சேரி கடற்கரை சாலையில் மேகமூட்டமாக காணப்பட்டது
9 hrs ago
13 / 27
நவராத்திரியொட்டி, விருத்தாசலம் செராமிக் தொழிற்சாலையில் களிமண்ணால் செய்யப்பட்ட பொம்மைகள் விற்பனைக்கு வந்துள்ளது.
9 hrs ago
14 / 27
கோவையில் மழை பொழிந்தது
10 hrs ago
15 / 27
நவராத்திரியொட்டி, விருத்தாசலம் செராமிக் தொழிற்சாலையில் களிமண்ணால் செய்யப்பட்ட பொம்மைகள் விற்பனைக்கு வந்துள்ளது.
10 hrs ago
16 / 27
அண்ணாதுரை பிறந்த தினத்தை முன்னிட்டு சென்னையில் உள்ள அவரது சிலைக்கு கீழ் வைக்கப்பட்ட படத்திற்கு முதல்வர் இபிஎஸ், துணை முதல்வர் ஓபிஎஸ் உள்ளிட்ட அமைச்சர்கள் மரியாதை செலுத்தினர்.
10 hrs ago
17 / 27
திருவண்ணாமலையில் நடக்கவிருக்கும் திமுக முப்பெரும் விழாவில் கலந்துகொள்ள, திமுக தலைவர் ஸ்டாலின் சென்னையிலிருந்து திண்டிவனம் வழியாக சென்றார். ஒலக்கூரில் ஸ்டாலினுக்கு சீதாபதி சொக்கலிங்கம் எம்எல்ஏ., தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
12 hrs ago
18 / 27
சென்னை பிராட்வே பழைய பஸ் நிலையத்தில் ஆக்கிரமித்திருந்த குடிசைகளை மாநகராட்சியினர் அதிரடியாக அகற்றினர்.
13 hrs ago
19 / 27
புதுச்சேரி கவர்னர் மாளிகையில் காவிரி கூக்குரலை வலியுறுத்தி சத்குரு ஜக்கி வாசுதேவ் மரக்கன்று நட்டார். அருகில் கவர்னர் கிரண்பேடி. முன்னதாக அவர் கோவையில் இருந்து பைக்கில் பேரணியாக வந்தார்.
16 hrs ago
20 / 27
கோவை சிங்காநல்லூர் உழவர் சந்தையில் ஒய்ஸ் மென் கிளப் ஆஃப் கோயம்பத்தூர் சார்பில் வாடிக்கையாளர்களுக்கு விதைப்பந்துகளை ஜெயா மகேஷ் உடல் சிகிச்சை மைய நிறுவனர் ஜெயா மகேஷ் மற்றும் லிக்யுடிடெனன்ட் மண்டல இயக்குநர் மண்டலம் பாலமுருகன் ஆகியோர் வழங்கினார்.
16 hrs ago
21 / 27
கோவை சிங்காநல்லூர் உழவர் சந்தையில் ஒய்ஸ் மென் கிளப் ஆஃப் கோயம்பத்தூர் சார்பில் வாடிக்கையாளர்களுக்கு விதைப்பந்து வழங்கப்பட்டது.
17 hrs ago
22 / 27
ஜல்சக்தி அபியான் நிகழ்ச்சி: பொள்ளாச்சி மகாலிங்கம் பொறியியல் கல்லூரியில் நடந்த ஜல்சக்தி அபியான் நிகழ்ச்சியில், புதுடில்லி மத்திய அரசு மேற்பார்வை அலுவலர் பி.கே.சிங் பேசினார்.
18 hrs ago
23 / 27
திட்டம் குறித்த மாநாடு: இந்திய கல்வி மேம்பாட்டு அமைப்பு சார்பில், இந்திய உயர் கல்வித் துறையில் அனைத்து தடைகளையும் தாண்டிய புதிய கண்டுபிடிப்புகளுக்கான திட்டம் குறித்த மாநாடு சென்னை நந்தனத்தில் உள்ள தனியார் ஓட்டலில் நேற்று நடந்தது.இதில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித் குத்துவிளக்கு ஏற்றி மாநாட்டை துவக்கி வைத்தார் உடன் இடமிருந்து வலம் அகில இந்திய தொழில்நுட்ப கல்வி குழும தலைவர் அணில் தத்தாத்ரேய சகஸ்ரபுதே, உயர் கல்வித் துறை முதன்மைச் செயலர் மங்கத் ராம் சர்மா, இந்திய கல்வி மேம்பாட்டு அமைப்பின் துணைத்தலைவர் மலர்விழி, இந்திய கல்வி மேம்பாட்டு அமைப்பின் பொருளாளர் பிரசாந்த் பல்லா, மற்றும் இந்திய கல்வி மேம்பாட்டு அமைப்பின் தலைவர் விஸ்வநாதன்.
20 hrs ago
24 / 27
கருத்தரங்கம்: விழுப்புரத்தில் தேசிய இயற்கை விவசாய மையம் மற்றும் தமிழ்நாடு அரசு வேளாண்மை துறை சார்பில் இயற்கை விவசாயம் குறித்து விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.
22 hrs ago
25 / 27
ஆலோசனை கூட்டம்: திண்டுக்கல்லில் குடிநீர் சீரான முறையில் வழங்குவதை குறித்து அமைச்சர் சீனிவாசன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.
23 hrs ago
26 / 27
கனமழை: கோவை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக மேகங்கள் திரண்டு கனமழை பெய்து வருகிறது இடம் உக்கடம்
1 day ago
27 / 27
குறைதீர் கூட்டம்: போக்குவரத்து காவல்துறை சார்பில் பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நேற்று நடந்தது.இதில் சென்னை போக்குவரத்து இணை கமிஷனர் எழிலரசன், மற்றும் போக்குவரத்து துணை கமிஷனர் பெரோஸ் கான் அப்துல்லா ஆகியோர் பொதுமக்களிடையே குறைகளை கேட்டறிந்தனர். இடம்: ராஜரத்தினம் மைதானம், எழும்பூர், சென்னை.