தமிழகத்தின் கண்ணாடி

22 Oct 2019
16 mins ago
1 / 30
கூட்டம் குறைவு: பருவ மழை தீவிரமடைந்து ஆங்காங்கே விட்டு விட்டு பெய்து வருவதால் பண்டிகை கால சாப்பிங் கூட்டம் சற்று குறைவாகவே கானப்பட்டது இடம் : கோவை பெரிய கடைவீதி.
2 hrs ago
2 / 30
துள்ளிக்குதித்த டால்பின்: சென்னை பட்டினம்பாக்கம் கடற்கரை அருகே கூட்டமாக நீந்தி வந்த டால்பின் மீன் ஒன்று மட்டும் துள்ளி குதித்து நீந்தி சென்றது .இடம் : பட்டினம்பாக்கம்
3 hrs ago
3 / 30
வினாடி வினா: புதுச்சேரி முத்தியால்பேட்டை சூர்யா இன்டர்நேஷனல் மேல்நிலைப் பள்ளியில் நடந்த தினமலர் பட்டம் மாணவர் இதழ் மற்றும் கோவை அமிர்தா விஸ்வ வித்யா பீடம் கல்வி நிறுவனத்துடன் இணைந்து நடத்திய வினாடி-வினா போட்டியில் முதலிடம் பிடித்த மாணவர்களுக்கு தினமலர் நினைவு கேடயம், மெடல் மற்றும் சான்றிதழும் மற்ற இடங்களை பிடித்த மாணவர்களுக்கு மெடல் மற்றும் சான்றிதழ்களை பள்ளி முதல்வர் இராதா பாய், தலைமை ஆசிரியை பெரியநாயகி வழங்கினர்.
4 hrs ago
4 / 30
முத்தாலம்மன்கோயில் விழா: திண்டுக்கல் மாவட்டம் அகரம் முத்தாலம்மன்கோயில் திருவிழாவில் சொருகுபட்டை விமானத்தில் பூஞ்சோலைக்கு பக்தர்கள் வெள்ளத்தில் எழுந்தருளிய அம்மன்.
5 hrs ago
5 / 30
தினமலர் மற்றும் உதயம் வேஷ்டி சர்ட்டுகள் நிறுவனம் இணைந்து நடத்திய மொபைல் பரிசுப் போட்டியில் வெற்றிபெற்ற (இடமிருந்து) அத்வைத், அகில், ஜெயந்தன், புருஷோத்தமன், பிரித்தீஸ் ஆகியோருக்கு உதயம் வேஷ்டிகள் நிறுவனத்தின் வணிக மேலாளர் கோகுல்தாஸ் பரிசுகளை வழங்கினார்.
5 hrs ago
6 / 30
புதுச்சேரி அரசு நல்வழி துறையின் ஊட்டச்சத்து பிரிவின் சார்பில் குயவர்பாளையம் நகர ஆரம்ப சுகாதார நிலையம் மூலம் உலக அயோடின் குறைபாடு தினத்தை முன்னிட்டு அயோடின் சத்துக்கள் நிறைந்த உணவுப் பொருட்கள் கொண்டு விழிப்புணர்வு பேரணி நடந்தது.
5 hrs ago
7 / 30
ஊட்டி மின்வாரிய அலுவலகம் முன்பு, மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பினர், தாங்கள் கோரிக்கைகளை வலியூறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
5 hrs ago
8 / 30
மனநலம் குறித்த விழிப்புணர்வு ஊர்வலத்தில் பங்கேற்ற கல்லூரி மாணவிகள். இடம்: திருப்பூர்
5 hrs ago
9 / 30
ஊட்டி சுற்றுவட்டாரத்தில் பெய்யும் கனமழைக்கு, கோடப்பமந்து கால்வாய் முலம் தண்ணீரில் அதிக குப்பைகள் படகு இல்ல ஏரியில் சேரும் குப்பைகளை அகற்றும் ஊழியர்கள்.
5 hrs ago
10 / 30
சென்னையில் எப்போதும் மக்கள் கூட்டம் நிறைந்து காணப்படும், மெரினா கடற்கரை தற்போது பெய்யும் மழை காரணமாக வெறிச்சோடி காணப்படுகிறது.
5 hrs ago
11 / 30
கோவை புலியகுளம் புனித அந்தோணியர் உயர் நிலை பள்ளியின் தேசிய மாணவர் படை அமைப்பின் சார்பில் விபத்தில்லா தீபாவளி என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
6 hrs ago
12 / 30
விழுப்புரத்தில் உள்ள இந்தியன் வங்கி முன்பு, வங்கி அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
6 hrs ago
13 / 30
சிவகங்கை மாவட்டத்துக்கு பெரியாறு தண்ணீர் திறக்கக்கோரி சோழபுரத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட பாசன விவசாயிகளிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
7 hrs ago
14 / 30
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் மார்க்கெட் சாலை சேறும் சகதியுமாக காட்சி அளிப்பதால் வாகன ஓட்டிகள் வழுக்கி விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
7 hrs ago
15 / 30
தினமலர் நாளிதழ் மாணவர் பதிப்பான பட்டம் இதழ் மற்றும் கோவை அமிர்தா விஷ்வ வித்யாபீடம், லோட்டோ காப்பீ பைட், சென்னை இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜி ஆகியவை இணைந்து மணலி எஸ்.ஆர்.எப். வித்யாலயா பள்ளியில், பதில் சொல்: அமெரிக்கா செல்-20 என்ற வினாடி - வினா போட்டியை நடத்தின. இதில் வெற்றி பெற்ற மாணவ மாணவியருடன் (இடமிருந்து) நூலகர் சுகந்தி, கணினி ஆசிரியை முருக ரோகினி, முதல்வர் ஜெயந்தி மற்றும் அறிவியல் ஆசிரியை ரேவதி.
7 hrs ago
16 / 30
சென்னையில் எப்போதும் மக்கள் கூட்டம் நிறைந்து காணப்படும் மெரினா கடற்கரை, மழை காரணமாக வெறிச்சோடி காணப்படுகிறது.
7 hrs ago
17 / 30
புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தல் முடிந்துள்ள நிலையில் ஓட்டு எண்ணிக்கை மையத்தை கலெக்டர் அருண் ஆய்வு செய்தார். இடம்: லால்பேட்டை மோதிலால் நேரு பாலிடெக்னிக் வளாகம்.
7 hrs ago
18 / 30
விழுப்புரம் கமலா நகர் அரசு நிதி உதவி பெறும் ஆரம்பப் பள்ளியில் தீயணைப்பு துறை சார்பில் பாதுகாப்பான முறையில் பட்டாசு வெடிப்பது குறித்து மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
7 hrs ago
19 / 30
மலைகளின் இடையே தவழ்ந்து செல்லும் வெண்மேகக் கூட்டங்கள். இடம் .உடுமலை.
7 hrs ago
20 / 30
தீபாவளி பண்டிகையின் போது தீ காயம் ஏற்படுபவர்களுக்கான, 24 மணி நேர சிறப்பு சிகிச்சை வார்டு சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் துவக்கப்பட்டுள்ளது.
7 hrs ago
21 / 30
கோவை புளியகுளம் புனித அந்தோணியர் உயர் நிலை பள்ளியின் தேசிய மாணவர் படை அமைப்பின் சார்பில் விபத்தில்லா தீபாவளி என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
7 hrs ago
22 / 30
கள்ளக்குறிச்சி அடுத்த கல்வராயன் மலையில் தொடர் மழையால் கீழ் பரிகம் கிராமத்தில் விவசாய நிலங்கள் பச்சை பசேலென்று காட்சியளிக்கின்றன.
7 hrs ago
23 / 30
இரவு பெய்த கன மழையால், இராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் சின்னப்பாலம் பகுதியில் வீடுகளில் மழைநீர் புகுந்தது. கலெக்டர் வீரராகவ ராவ் பார்வையிட்டார்.
7 hrs ago
24 / 30
கள்ளக்குறிச்சி அடுத்த கச்சிராபாளையம் கல்வராயன் மலையில் தொடர் மழையால் பெரியார் நீர்வீழ்ச்சியில் மழை நீர் கொட்டுகிறது.
11 hrs ago
25 / 30
திண்டுக்கல் மாவட்டம் அகரம் முத்தாலம்மன் கோயில் திருவிழாவில்   அக்னி சட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்.
14 hrs ago
26 / 30
மழையால் பெரும் மேகமூட்டம் இருந்ததால் , குன்னூர் காட்டேரி அருகே அரசுபஸ் கவிழ்ந்தது. பயணிகள் 30 பேர் காயமின்றி தப்பினர்.
16 hrs ago
27 / 30
உடுமலையில் பெய்யும் மழைக்கு குடைபிடித்து செல்லும் பெண்.
16 hrs ago
28 / 30
கோவையில் கடந்த சில தினங்களாக பலத்த மழை பதிவாகி வந்த நிலையில், மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் மேகங்கள் ஆங்காங்கே சூழ்ந்து ரம்மியமாக காட்சி அளிக்கிறது. இடம்: குறிச்சி குளம்.
20 hrs ago
29 / 30
சாக்லெட் பட்டாசுகள்: பசுமையை காக்கும் பட்டாசுகள்.குழந்தைகளை கவரும் வகையில் சாக்லெட் பட்டாசுகள் கோவை விலாங்குறிச்சி ரோடு சேரன்மாநகர் அருகே தீபாவளியை முன்னிட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.
22 hrs ago
30 / 30
தமிழ் எழுத்துக்கள்: சென்னை நுங்கம்பாக்கம் டி.பி.ஐ., வளாகத்தில் சீரமைக்கப்பட்ட தமிழ்நாடு பாடநூல் கழக அலுவலக கட்டடத்தின் முகப்பு தோற்றத்தில் புதிதாக புத்தக வடிவில் தமிழ் எழுத்துக்கள் அமைக்கப்பட்டுள்ளது.