தமிழகத்தின் கண்ணாடி

16 Oct 2019
14 mins ago
1 / 40
கொட்டும் மழையில் பிரச்சாரம் : விக்கிரவாண்டி சட்டசபை இடைத்தேர்தலை யொட்டி மாம்பழப்பட்டு கிராமத்தில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்செல்வனை ஆதரித்து சட்டசபை துணைசபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் கொட்டும் மழையி்ல் குடையுடன் பிரச்சாரம் செய்தார்.
20 mins ago
2 / 40
காத்திருந்த பறவைகள்: திண்டுக்கல் மாவட்டம் பழநி பாலாறு அணையில் இரைக்காக காத்திருந்த பறவைகள்.
1 hr ago
3 / 40
வெளிநாட்டு சுற்றுலா பயணிகள்: தமிழக சுற்றுலாத்துறை சார்பில், தமிழர்களின் கலாச்சாரத்தை அறிந்து கொள்ள செல்ப் டிரைவன் கார் டூர் அறிமுகப்படுத்தப்பட்டது. சென்னையில் இருந்து கோவை வழியாக கேரளா சென்ற வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கோவை, நீலகிரி மாவட்ட சுற்றுலா அலுவலர் அரவிந்குமார் கொடியசைத்து வழியனுப்பினார். இடம்: ரெசிடென்சி ஓட்டல், கோவை.
1 hr ago
4 / 40
பூங்கா நுழைவாயில் : வண்டலூர்- கேளம்பாக்கம் சாலையில் அமைந்துள்ள கடந்த ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட வனமரபியல் வளமர பூங்கா தற்போது பிரம்மாண்ட முறையில் மரங்களும் செடிகளும் வளர்ந்து காணப்படுகிறது. இதன் நுழைவாயில். இடம்: கொளப்பாக்கம்.
2 hrs ago
5 / 40
விழிப்புணர்வு பேரணி : புதுச்சேரி, காமராஜர் நகர் தொகுதி இடைத்தேர்தலையொட்டி தேர்தல்துறை சார்பில், 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு சைக்கிள் பேரணியை மாவட்ட தேர்தல் அதிகாரி அருண், மாணவர்களுடன் சைக்கிள் ஓட்டி துவக்கி வைத்தார்.
4 hrs ago
6 / 40
உலக உணவு தினத்தை முன்னிட்டு, ரெயின் ட்ராப்ஸ் அமைப்பின் சார்பில் இலவசமாக உணவு வழங்கப்பட்டது. இதில் பாடலாசிரியர் சினேகன் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு உணவு வழங்கினார். இடம் : கோயம்பேடு மார்க்கெட்,சென்னை
4 hrs ago
7 / 40
டெங்கு ஒழிப்பு மற்றும் தூய்மை பணிகளையடுத்து சேப்பாக்கம், வாலாஜா சாலையில் உள்ள ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரி வளாகங்களை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்ட மருத்துவ மாணவ மாணவியர்.
5 hrs ago
8 / 40
திருவள்ளூர் அரசு தலைமை மருத்துவமனையில் காய்ச்சல் வார்டுகளை ஆய்வு செய்து நோயாளிகளுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்து கேட்டறிந்த மக்கள் நலவாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை செயலாளர் டாக்டர் பீலா ராஜேஸ் உடன் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி மற்று பொது சுகாதாரத்துறை இயக்குனர் குழந்தைசாமி உள்ளனர்
6 hrs ago
9 / 40
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் மனவளக்கலை சார்பில் யோகாசனம் பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
6 hrs ago
10 / 40
தமிழகத்தின் முக்கிய மழை ஆதாரமான வடகிழக்கு பருவமழை துவங்கும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளதை அடுத்து சென்னை புறநகரில் உள்ள விவசாயிகள் தங்கள் நிலத்தை சீர்செய்து உழவிற்கு தயார் செய்கின்றனர். இடம்: மாடம்பாக்கம்.
6 hrs ago
11 / 40
சென்னை புறநகர்களில் சம்பா நடவுக்கு தயார் நிலையிலுள்ள நாற்றங்கால்.இடம்: மாடம்பாக்கம்.
6 hrs ago
12 / 40
திருவள்ளூர் அரசு தலைமை மருத்துவமனையில் காய்ச்சல் வார்டுகளை ஆய்வு செய்த மக்கள் நலவாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை செயலாளர் டாக்டர் பீலா ராஜேஸ்வரி
6 hrs ago
13 / 40
தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையகத்தின் கோட்ட அலுவலகம் தாம்பரத்தில் துவக்கப்பட்டது. இதில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கலந்துகொண்டு கணபதிஹோமம் நடத்தினர். இடம். தாம்பரம்.
6 hrs ago
14 / 40
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் சென்னையில் உள்ள நீச்சல் குளங்களில் பயிற்சி வகுப்புகள் துவங்கப்பட்டுள்ளன இதனையொட்டி வேளச்சேரி நீச்சல் குளத்தில் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட குழந்தைகள் மற்றும் பெரியவர்கள்.
6 hrs ago
15 / 40
வடகிழக்கு பருவமழை துவங்கும் நிலையில் சென்னை புறநகர் பகுதிகளில் லேசான மழை பெய்தது வாகன ஓட்டிகள் குடையுடன் செல்கின்றனர். இடம்: ஜிஎஸ்டி சாலை, பெருங்களத்தூர்
6 hrs ago
16 / 40
சென்னையில் பெய்த சாரல் மழையினால் பூந்தமல்லி நெடுஞ்சாலை பகுதியில் போக்குவரத்து நெரிசலில் சிக்கி ஊர்ந்து சென்ற வாகன ஓட்டிகள்.இடம்.அமைந்தகரை
7 hrs ago
17 / 40
சென்னையில் பெய்த சாரல் மழைக்கே நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலையில்வாகன ஓட்டிகளுக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் உள்ள மரண பள்ளம்.
7 hrs ago
18 / 40
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருச்சி என்எஸ்பி ரோட்டில் மாநகர காவல் துறை சார்பில் காவல் கட்டுப்பாட்டு மையத்தை, மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் திறந்துவைத்து பார்வையிட்டார். அருகில், துணை ஆணையர்கள் மயில்வாகனன், நிஷா.
7 hrs ago
19 / 40
வடகிழக்கு பருவமழை தொடங்கியதை அடுத்து சென்னை அண்ணாநகர் பகுதியில் பெய்த சாரல் மழையில் குடையுடன் சென்ற வாகன ஓட்டிகள்.
7 hrs ago
20 / 40
தினமலர் மாணவர் பதிப்பான பட்டம் மற்றும் கோவை அமிர்தா விஷ்வ வித்யாபீடம் , லோட்டோ காப்பீ பைட் , சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி ஆகியோர் இணைந்து வழங்கும் பதில் சொல் : அமெரிக்கா செல் 2019 - 20 வினாடி வினா நிகழ்ச்சி குண்டூர் சுப்பையா பிள்ளை தி .நகர் ., மகளிர் மேல் நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது வெற்றி பெற்ற மாணவியருடன் ( இடமிருந்து வலம் ) ஆங்கில ஆசிரியர் ஞான சுந்தரி , தலைமை ஆசிரியர் முனைவர் ராஜலட்சுமி , முதுகலை ஆங்கில ஆசிரியர் வாசுகி உள்ளனர் : இடம்: தி. நகர்
7 hrs ago
21 / 40
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, திருச்சி என். எஸ்.பி., ரோட்டில் மாநகர காவல்துறை சார்பில், சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது.
7 hrs ago
22 / 40
சென்னை தி.நகர் பாண்டிபஜார் சாலையில் உள்ள மெட்ரோ குடிநீர் வாரிய அலுவலக மதில் சுவரில் சுவரொட்டிகளை தடுக்கும் விதமாக வரையப்பட்டுள்ள வண்ண ஓவியங்கள்
7 hrs ago
23 / 40
நீர் இணையம் மற்றும் எய்ம் தொண்டு நிறுவனம் சார்பில் நீர் மேலாண்மை- சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி கோவை புனித மைக்கேல் பள்ளியில் நடந்தது. இதில் மாணவிகள் கலந்து கொண்டு பேசினார்.
7 hrs ago
24 / 40
சென்னை அரும்பாக்கம் அரசு யோக இயற்கை மருத்துவ கல்லூரி மாணவிகள் அமைந்தகரை சிக்னலில் வாகன ஓட்டிகளுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கினர்.
7 hrs ago
25 / 40
புதுச்சேரி,முத்தியால்பேட்டை காந்தி வீதியில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் மழைநீர் சேகரிப்பு தொட்டிக்கு இணைப்பு பைப் அமைக்கும் பணியில் ஈடுபட்ட ஒப்பந்த தொழிலாளர்கள்.
7 hrs ago
26 / 40
தொடர் மழையால் திருப்பூர் சின்னக்காளிபாளையம் பகுதியில் அறுவடை செய்ய இருந்த நிலையில் கொத்தமல்லி அழுகியதால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.
8 hrs ago
27 / 40
புதுச்சேரி, பாப்ஸ்கோ ஊழியர்களுக்கு 26 மாத சம்பளத்தை வழங்க கோரி குடிமைப்பொருள் வழங்கல் துறை அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்களை போலீசார் கைது செய்து குண்டுகட்டாக வேனில் ஏற்றி சென்றனர்.
8 hrs ago
28 / 40
நாங்குநேரி இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி ஆர்.மனோகரனை ஆதரித்து, நாங்குநேரி ஒன்றியம் அம்பலம் ஊராட்சி பகுதிகளில், திமுக தலைவர் திண்ணைப் பிரசாரம் மேற்கொண்டார்.
8 hrs ago
29 / 40
வீரபாண்டிய கட்டபொம்மன் 220-வது நினைவு நாளை முன்னிட்டு, கயத்தாறில் உள்ள அவரது நினைவிடத்தில் ம.தி.மு.க., பொதுச் செயலாளர் வைகோ அஞ்சலி செலுத்தினார்.
8 hrs ago
30 / 40
ஊட்டியில், காவல்துறை சார்பாக காவலர் வீர வணக்க நாள் ஊர்வலம் நடந்தது.
8 hrs ago
31 / 40
ஊட்டி அரசு கலைக்கல்லூரியில், தூய்மை இந்தியா திட்டத்தில், எஸ்.ஏ.டி.பி., திட்ட இயக்குனர் சராயு துவக்கி வைத்தார், உடன் கல்லூரி முதல்வர் ஈஸ்வரமுர்த்தி மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டார்கள்.
8 hrs ago
32 / 40
ஊட்டி பர்ன்ஹில் சந்திப்பு பகுதிக்கு, தினமும் மேய வரும் காட்டெருமையால் , பொதுமக்களுக்கு அச்சம் ஏற்படுகிறது.
8 hrs ago
33 / 40
ஊட்டி அருகேவுள்ள குட்ஷெப்பர்டு பள்ளி, நிறுவனர் தின விழாவில் நடனமாடிய பள்ளி மாணவியர்கள்.
8 hrs ago
34 / 40
விழுப்புரம் நகராட்சி பெண்கள் பள்ளியில் நடந்த அறிவியல் கண்காட்சியை சி.இ.ஓ., முனுசாமி துவக்கி வைத்து பார்வையிட்டார்.
9 hrs ago
35 / 40
அதிகளவில் வண்டல் மண் ஏற்றி வந்த லாரி உடுமலை போடிபட்டி பஸ் ஸ்டாப் அருகே ரோட்டின் ஓரத்தில் சாய்ந்ததால் பொக்லைன் மூலம் மணலை அகற்றும் பணி நடந்தது.
12 hrs ago
36 / 40
சிசிடிவி கேமரா பொருத்துவதன் அவசியம் குறித்து சென்னை வண்ணாரப்பேட்டையில் உள்ள கடைகளில் துண்டு பிரசுரம் வழங்கி விழிப்புணர்வு நிகழ்ச்சியை வண்ணாரப்பேட்டை துணை ஆணையர் சுப்புலட்சுமி துவக்கி வைத்தார். உடன் உதவி ஆணையர் முத்துக்குமார், ஆய்வாளர்கள் .
14 hrs ago
37 / 40
நினைவு கேடயம்: புதுச்சேரி நைனார் மண்டபம் ஆசீர்வதிக்கப்பட்ட அன்னை தெரசா மாதிரி மேல்நிலைப்பள்ளியில் தினமலர் பட்டம் மாணவர் இதழ் மற்றும் கோவை அமிர்தா விஸ்வ வித்யா பீடம் கல்வி நிறுவனத்துடன் இணைந்து நடத்திய வினாடி-வினா போட்டியில் முதலிடம் பிடித்த மாணவர்களுக்கு தினமலர் நினைவு கேடயம், மெடல் மற்றும் சான்றிதழும் மற்ற இடங்களை பிடித்த மாணவர்களுக்கு மெடல் மற்றும் சான்றிதழ்களை பள்ளி முதல்வர் அந்தோணிசாமி வழங்கினார். அருகில் ஆசிரியை கவியரசி.
15 hrs ago
38 / 40
தரம் பிரிக்கப்படும் வெங்காயம்:  திண்டுக்கல் மண்டியில் பெரிய வெங்காயத்தை தரம் பிரித்து மூடையிடும் பணி நடந்தது.
17 hrs ago
39 / 40
கூடைப்பந்துப் போட்டி: கோவை பிஷப் அப்பாசாமி கல்லூரியில் பாரதியார் பல்கலை உட்பட்ட கல்லூரி மாணவிகளுக்கான கூடைப்பந்து போட்டி நடந்தது.
18 hrs ago
40 / 40
சிசிடிவி கேமரா வைப்பதன் அவசியம் குறித்து சென்னை வண்ணாரப்பேட்டையில் உள்ள கடைகளில் துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்திய வண்ணாரப்பேட்டை துணை ஆணையர் சுப்புலட்சுமி. உடன் உதவி ஆணையர் முத்துக்குமார், ஆய்வாளர்கள் தேவேந்திர மற்றும் ரவி.