தமிழகத்தின் கண்ணாடி

21 Sep 2020
1hours ago
1 / 12
சென்னை தலைமை செயலகத்தில் 3,501 அம்மா நகரும் ரேஷன் கடைகளை முதல்வர் இ.பி.எஸ்., கொடியசைத்து துவங்கி வைத்தார். உடன் துணை முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள்.
1hours ago
2 / 12
உடுமலை அமராவதி அணை நிரம்பி ஷட்டர் வழியாக வெளியேறும் உபரி நீர் முன்பு உள்ள பாலத்தில் அமர்ந்து மொபைல் போன் மூலம் செல்பி எடுக்கும் சுற்றுலா பயணிகள்.
1hours ago
3 / 12
கோவை மாவட்டம், பொள்ளாச்சி அடுத்த டாப்சிலிப் கோழிகமுத்தியில் வனத்துறை சார்பில், நடந்த யானைகள் முகாமிற்கு வந்த கும்கி யானை கல்பனா வயது மூப்பு காரணமாக இறந்தது.
2hours ago
4 / 12
துர்கா பூஜையை முன்னிட்டு வடமாநிலத்தவர்கள் வழிபடுவதற்காக தயார் செய்யப்படும் துர்கா சிலைகள்.இடம்: வால்டாக்ஸ் சாலை, சென்னை.
3hours ago
5 / 12
சிங்கப்பூரில் நடந்த அறிவியல் சார்ந்த போட்டியில் பதக்கம் பெற்ற சென்னை மாநகராட்சி பள்ளி மாணவன் மைக்கேல் ஜான்சன் , பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனை சந்தித்து வாழ்த்துக்களை பெற்றார்.
4hours ago
6 / 12
ஊட்டி பிங்கர்போஸ்ட் அருகேவுள்ள, ஆர்.சி., காலனியில் மோசமாகவுள்ள சாலைகளை செப்பனிட அப்பகுதி மக்கள் புகார் அளித்தனர்.
5hours ago
7 / 12
கிழக்கு தாம்பரம் ஜெயகோபால் பள்ளியில் பிளஸ்2 மாணவர்களுக்கான உடனடி தேர்வு எழுத வந்த மாணவர்களுக்கு கிருமி நாசினி மற்றும் உடல்வெப்பம் பரிசோதனை செய்யப்பட்டன.
6hours ago
8 / 12
சென்னை அண்ணா பல்கலை., பெயர் மாற்றுவதை கண்டித்து, பல்கலை., வளாகத்தில் பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் கருப்பு பேட்ச் அணிந்து உள்ளிருப்பு போராட்டம் செய்தனர். இடம்: அண்ணா பல்கலை, கிண்டி.
6hours ago
9 / 12
பா.ஜ., மீனவ அணி செங்கல்பட்டு மாவட்ட தலைவர் மல்லை சிவா குடும்பத்தினருக்கு பா.ஜ., தலைவர் ஆறுதல் கூறி, நிவாரணமாக ரூ. 2 லட்சம் வழங்கினார். உடன் மாநிலத் தலைவர் சதீஷ்குமார் , உமாபதி.
7hours ago
10 / 12
போலீஸ் இ ஐ ஆப் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கோவை தடாகம் ரோட்டில் வாகன ஓட்டிகளிடம் விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கிய போக்குவரத்து போலீசார்.
15hours ago
11 / 12
சென்னை அண்ணா சாலையில் உள்ள சுரங்க நடைபாதையில் மெட்ரோ நிர்வாகம் சார்பில் சீரமைப்பு பணிகள் முடிந்து பொதுமக்கள் பயன்பாட்டுக்காக திறக்கப்பட்டுள்ளது.
15hours ago
12 / 12
மலைமீது தவழ்ந்து செல்லும் வெண்மேகங்கள். இடம் .உடுமலை மானுப்பட்டி.
Advertisement