தமிழகத்தின் கண்ணாடி

19 Nov 2019
40 mins ago
1 / 40
புதுச்சேரி லாஸ்பேட்டை சிவ சுப்பிரமணிய சுவாமி கோயிலில் உள்ள சிவ கால ஞான பைரவருக்கு ஏகதின லட்சார்ச்சனை விழா நடந்தது
2 hrs ago
2 / 40
கால்பந்து போட்டி: கோவை மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி சார்பில் அரசு பள்ளி மாணவிகளுக்கான கால்பந்து போட்டி கோவை பாரதியார் பல்கலை நடந்தது. இதில் அசோகபுரம் அரசுப் பள்ளியும், தொண்டாமுத்தூர் அரசு பள்ளியும் விளையாடின.
3 hrs ago
3 / 40
பழங்குடி நாதம்: பழங்குடியினர் ஆய்வு மையம், பழங்குடியினர் நலத்துறை மற்றும் தமிழ்நாடு அரசு இணைந்து நடத்திய பழங்குடி நாதம் எனும் கலைவிழா சென்னையில் நடந்தது. இதில் நடனம் ஆடிய பழங்குடியினர். இடம் : கலைவாணர் அரங்கம், சேப்பாக்கம்.
5 hrs ago
4 / 40
கடலூர் மாவட்டம் வடலூர் எஸ்.டி. ஈடன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் தினமலர் பட்டம் மாணவர் இதழ் மற்றும் கோவை அமிர்தா விஸ்வ வித்யாபீடம் கல்வி நிறுவனம் இணைந்து வினாடி வினா போட்டியை நடத்தின. போட்டியில் முதலிடம் பிடித்த மாணவர்களுக்கு தினமலர் நினைவு கேடயம் மெடல் மற்றும் சான்றிதழ்களை பள்ளி தாளாளர் சுகிர்தா தாமஸ் வழங்கினார். பிற இடங்களை பிடித்த மாணவர்களுக்கு மெடல் மற்றும் சான்றிதழ் வழங்கினார். அருகில் ஆசிரியர்கள் சரஸ்வதி, ஜனனி.
5 hrs ago
5 / 40
பசுமை தாயகம் சார்பில் விருத்தாசலத்தில் பிளாஸ்டிக் கழிவுகளுக்கு அரிசி வழங்கும் நிகழ்ச்சியை மாநில சொத்து பாதுகாப்பு குழு தலைவர் டாக்டர் கோவிந்தசாமி துவக்கி வைத்தார்.
5 hrs ago
6 / 40
உடுமலை கணபதிபாளையத்தில் பயிரிடப்பட்டுள்ள மல்லி செடிகள்.
5 hrs ago
7 / 40
திருப்பூர் நொய்யலாற்றில் உள்ள செடிகளை சுத்தம் செய்யும் பணி நடந்து வருகிறது.
5 hrs ago
8 / 40
திருப்பூர் நல்லாற்றில் வரும் கழிவுநீரை சுத்திகரித்து, நஞ்சராயன் குளத்தில் சேகரிக்க, சுத்திகரிப்பு மையம் அமைக்கப்பட்டது. மையம் செயல்படாததால் தண்ணீர், குளத்திற்கு செல்லாமல், வாய்கால் வழியாக வெளியேறி வருகிறது. இதனால் குளத்தில் தண்ணீர் குறைவாக உள்ளது.
5 hrs ago
9 / 40
விழுப்புரம் நேருஜி சாலையின் இருபுறமும் போக்குவரத்துக்கு இடையூறாக சாலையோரத்தில் இருசக்கர வாகனம் நிறுத்தி வைத்துள்ளனர். இடம் வீரவாழியம்மன் கோவில் அருகில்.
5 hrs ago
10 / 40
விழுப்புரத்தில் மாவட்ட தொழில் மையம் சார்பில் நடந்த சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான கருத்தரங்கத்தில் குறு மற்றும் சிறு தொழில் நிறுவனங்கள் சங்க தலைவர் கருணாநிதி பேசினார்.
5 hrs ago
11 / 40
ஊட்டி காந்தள் முக்கோணத்தில், ஒருங்கினைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டம் சார்பாக, புதிய குழந்தைகள் மையம் திறக்கப்பட்டது.
5 hrs ago
12 / 40
திருப்பூர் ஜமனை ஓடையை சுத்தப்படுத்திய பொகலைன் மெஷின், சகதியில் சிக்கி மூழ்கியது.
5 hrs ago
13 / 40
சென்னை தி.நகரில் சிறப்பு குறைதீர் திட்டத்தின் கீழ் நடந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு வழங்கினார்.உடன் இடமிருந்து சென்னை மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமி மற்றும் எம்.எல்.ஏ., வி.என்.ரவி
5 hrs ago
14 / 40
கோவை ராமநாதபுரம் பங்கஜாமில் காலனியில் உள்ள ஸ்ரீ அலங்கார மாரியம்மன் கோவிலில் ஜென்மாஷ்டமி விழாவையொட்டி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த காலபைரவர்.
5 hrs ago
15 / 40
கோவை தாமஸ் வீதி பகுதியில் குட்கா கடைக்கு தெற்கு வட்டாட்சியர்கள் குழு மற்றும் காவல்துறையினர் கடைகளுக்கு சீல் வைத்தனர்.
5 hrs ago
16 / 40
ராமசாமி படையாட்சியார் மணிமண்டபத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திறக்க வருவதையொட்டி கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் பந்தல் அமைக்கும் பணி மற்றும் பாதுகாப்பு ஏற்பாடு குறித்து கலெக்டர் அன்புச்செல்வன்,எஸ் .பி. ஸ்ரீ அபிநவ் பார்வையிட்டார்.
5 hrs ago
17 / 40
கோவை, வடகோவை மேம்பாலத்தில் புதுப்பிக்கப்பட்ட மணி கோபுரத்தை மாநகராட்சி கமிஷனர் ஷர்வன்குமார் திறந்துவைத்தார், உடன் ரவுண்ட் இந்தியாவில் தேசிய தலைவர்கள் ஜெயக்குமார்,ஜெயக்குமார் ராமதாஸ், இளங்கோவன், ஏரியா 7 தலைவர் வித்யாதரன், துணைத் தலைவர் பிரதீப் ராஜப்பா,முன்னாள் தலைவர் அஸ்வின் குமார்,மணிக்கூண்டு ஒருங்கிணைப்பாளர் பங்கஜ் உள்ளிட்டோர்.
5 hrs ago
18 / 40
புதுச்சேரி காராமணிக்குப்பம் ஜீவானந்தம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்த அறிவியல் கண்காட்சியை பார்வையிட்ட மாணவர்கள்.
5 hrs ago
19 / 40
சென்னை பல்கலையின் 162வது பட்டமளிப்பு விழா பல்கலைகழக நூற்றாண்டு விழா அரங்கத்தில் நடந்தது. இதில் கவர்னர் பன்வாரிலால் புரோஹித் பார்வை திறன் குறைந்த மாணவிக்கு பட்டத்தை வழங்கினார். ( இடமிருந்து வலம் ) பல்கலையின் துணைவேந்தர் துரைசாமி , சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தின் முன்னாள் இயக்குனர் ராமசாமி உள்ளார் . இடம் : சேப்பாக்கம் .
5 hrs ago
20 / 40
புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தலை நடத்த கோரி பா.ஜ.,கட்சியினர் சட்டசபை அருகே ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
5 hrs ago
21 / 40
சென்னை, ராயபுரம் அரசு ஸ்டான்லி மருத்துவமனை முன்பாக, சாலையை கடக்க நடைமேம்பாலம் இருந்தும் ஆபத்தான முறையில் சாலையைக் கடக்கும் பொதுமக்கள் மற்றும் ஊழியர்கள்.
5 hrs ago
22 / 40
வருங்கால காவலர்கள்..!: கோவை அவினாசி ரோட்டிலுள்ள பி.ஆர்.எஸ் மைதானத்தில் போலீஸ் பணிக்கு ஆள் தேர்வு முகாமில் 100 மீட்டர் ஓட்டத்தில் பங்கேற்ற பெண்கள்
5 hrs ago
23 / 40
கோவை தாமஸ் வீதி பகுதியில் வைக்கப்பட்டிருந்த குட்கா பதுக்கி வைக்கப்பட்டிருந்த குடோனுக்கு வட்டாட்சியர், குறு மற்றும் காவல்துறையினர் சீல் வைத்தனர்
5 hrs ago
24 / 40
நீர் மேலாண்மை திட்டத்தின் கீழ் தூர்வாரி சீரமைக்கப்பட உள்ள பால் கேணி குளம். இடம்: பழைய பல்லாவரம்.
5 hrs ago
25 / 40
வெப்பச்சலனம் காரணமாக சென்னையில் பரவலாக பெய்த மழை. இடம்- புதுவண்ணாரப்பேட்டை, சூரியநாராயணன் சாலை.
5 hrs ago
26 / 40
தாம்பரம், பல்லாவரம், குரோம்பேட்டை, பகுதிகளில் திடீர் மழை பெய்தது. இடம். தாம்பரம் சானடோரியம், பேருந்து நிலையம்.
5 hrs ago
27 / 40
விதியை மீறி சாலை தடுப்புகளில் ஆடைகளை காய வைத்துள்ள பொதுமக்கள்.இடம்: பாந்தியன் சாலை, எழும்பூர், சென்னை.
5 hrs ago
28 / 40
குழந்தைகள் வன்கொடுமை தடுப்பு தினமான இன்று, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற பிரிவு சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. இதில் போக்சோ சட்டம் தொடர்பான விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் மாணவியரிடம் வழங்கினார். இடம் : அரசு பெண்கள் மாதிரி மேல்நிலைப்பள்ளி, எழும்பூர்
5 hrs ago
29 / 40
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிட கட்டுமானப்பணி அடுத்தாண்டு ஜனவரி மாதத்திற்க்குள் முடிக்க அதிகாரிகளுக்கு முதல்வர் இ.பி.எஸ்., அனுமதி வழங்கியுள்ளார். இதனை தொடர்ந்து பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இடம் : சென்னை மெரினா கடற்கரை.
5 hrs ago
30 / 40
தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோயிலில்  ஸ்ரீஸ்வர்ண ஆகர்ஷண பைரவரை காண திரண்ட பக்தர்கள்.
5 hrs ago
31 / 40
தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீஸ்வர்ண ஆகர்ஷண பைரவர்.
5 hrs ago
32 / 40
திண்டுக்கல் அருகே பூதிபுரம் பகுதியில் நாற்று நடவு செய்ய வயலை தயார் செய்யும் பணியில் விவசாயி.
5 hrs ago
33 / 40
விருத்தாசலம் இந்திரா நகரில் குடிநீர் தட்டுப்பாட்டை கண்டித்து அப்பகுதி பெண்கள் காலி குடங்களுடன் சப். கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
5 hrs ago
34 / 40
புதுச்சேரி சாலை கனரா வங்கியில் பவுண்டேஷன் பிறந்தநாளையொட்டி பள்ளி மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை அமைச்சர் கமலக்கண்ணன் வழங்கினார் அருகில் எம்எல்ஏ லட்சுமி நாராயணன் கல்வி இயக்குனர் உத்தரகவுடா வங்கி மண்டல தலைவர் ராஜேஷ் வங்கி கோட்ட மேலாளர் கண்ணன்
6 hrs ago
35 / 40
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் பயணிகளின் பயன்பாட்டிற்காக புதிதாக எஸ்கலேட்டர் அமைக்கும் பணி ஜரூராக நடந்து வருகிறது.
7 hrs ago
36 / 40
சென்னை, ராயபுரம் அரசு ஸ்டான்லி மருத்துவமனை முன்பாக, சாலையை ஆக்கிரமித்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஆட்டோக்களால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
7 hrs ago
37 / 40
ஸ்ரீ கால பைரவர் ஜென்மாஷ்டமி பெருவிழாவை முன்னிட்டு கோவை கெம்பட்டி காலனியில் உள்ள தர்மராஜா கோவிலில் ருத்ர மஹா யாகம் நடந்தது.
7 hrs ago
38 / 40
ஊட்டியில், சமூக பாதுகாப்பு துறை சார்பாக நடந்த சர்வதேச குழந்தைகள் பாதுகாப்பு தின நிகழ்ச்சியில், பள்ளி மாணவ, மாணவியர்கள் உறுதிமொழி எடுத்தனர்.
8 hrs ago
39 / 40
குழந்தைகளுக்கு மீதான தாக்குதலுக்கு எதிரான தினத்தை முன்னிட்டு, திருப்பூர் அரசு தொழிற்பயிற்சி மையம் முன்பு மனித சங்கிலி நடந்தது.
10 hrs ago
40 / 40
விழுப்புரம் இ.எஸ்., மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடந்த தினமலர் மாணவர் பதிப்பு பட்டம் நாளிதழின் வினாடி வினா போட்டியில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு மெடலுடன்,சான்றிதழரும், வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தினமலர் நினைவு பதக்கமும் பள்ளி முதல்வர் ஜெமி சுதாகர் வழங்கினார்.