தமிழகத்தின் கண்ணாடி

22 Nov 2019
3 hrs ago
1 / 15
புதுச்சேரி வேதபுரீஸ்வரர் கோவில் தீர்த்த குளத்தில் அய்யப்ப சுவாமிக்கு ஆராட்டு நடந்தது
5 hrs ago
2 / 15
சென்னையில் இருந்து கோவைக்கு விமானத்தில் ரெயின் டிராப்ஸ் என்ற தனியார் அமைப்பினர் ஆதரவற்ற குழந்தைகளை அழைத்து வந்தனர்,இடம் கோவை விமான நிலையம்
5 hrs ago
3 / 15
கோவை சிட்ராவிலுள்ள பி.எஸ்.ஜி கல்லூரியில் என்.சி.சி மாணவர்களுக்கான முகாம் நடந்தது, இதில் டாங்கிகளை கையாளும் முறை குறித்த செயல் விளக்கம் அளிக்கப்பட்டது
5 hrs ago
4 / 15
தினமலர் நாளிதழ் மாணவர் பதிப்பான பட்டம் மற்றும் கோவை அமிர்தா விஸ்வ வித்யாபீடம் இணைந்து வழங்கும், பதில் சொல் அமெரிக்கா செல், வினாடிவினா நிகழ்ச்சி கோவை பீடம்பள்ளியிலுள்ள வளர்மதி அறக்கட்டளையின் ஸ்ரீ சுகப்பிரம்ம மகரிஷி வித்யாலயம் மெட்ரிகுலேஷன் பள்ளியில் நடந்தது, இதில் பரிசு பெற்ற மாணவ மாணவியருடன் பள்ளி ஆசிரியைகள் .
6 hrs ago
5 / 15
கருவேல மரங்களை வெட்டி விறகு எடுக்க சென்ற தனது தந்தையுடன் சென்ற சிறுவன் கருவேல மரக் குச்சிகளை வெட்டி பழகிக் கொள்கிறான். இடம். பல்லாவரம்.
7 hrs ago
6 / 15
புதுச்சேரி இந்திராகாந்தி விளையாட்டு அரங்கத்தில் நடந்த மாற்றுத்திறனாளிக்கான விளையாட்டுப் போட்டியில் துவக்கி வைக்க வந்த அமைச்சர் கந்தசாமியை மாற்றுத்திறனாளிகள் முற்றுகையிட்டு வாக்குவாதம் செய்தனர்.
8 hrs ago
7 / 15
ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கு மருத்துவ முகாம் பல்லாவரம் நகராட்சி தொடக்கப்பள்ளியில் நடைபெற்றது. இதில் மாற்றுத்திறனுடைய குழந்தையுடன் கலந்துகொண்ட பெற்றோர்கள். இடம். பல்லாவரம்.
9 hrs ago
8 / 15
ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கு அடையாள அட்டை மற்றும் மருத்துவ முகாம் பல்லாவரம் நகராட்சி தொடக்கப்பள்ளியில் நடைபெற்றது. இதில் மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கு அடையாள அட்டை அதிகாரிகள் வழங்கினர். இடம். பல்லாவரம்.
10 hrs ago
9 / 15
சென்னை சேத்துப்பட்டு மேயர் ராமநாதன் சாலையில் உள்ள கேபிள் ஒயர்களில் செடிகள் வளர்ந்து மரம் போல் காட்சியளிக்கிறது.
12 hrs ago
10 / 15
உடுமலை திருமூர்த்தி அணையிலிருந்து 3 ம் மண்டல பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது.
16 hrs ago
11 / 15
புதுச்சேரியில் காலையில் பலத்த மழை பெய்தது.
17 hrs ago
12 / 15
தமிழரின் வீர விளையாட்டாம் மஞ்சு விரட்டு களத்தில் வீரர்களை பந்தாட மணலில் முட்டும் பயிற்சி எடுத்து வரும் அரளிக் கோட்டை காளை.
19 hrs ago
13 / 15
உலக ரோல்பால் போட்டியில் வெள்ளி பதக்கம், கோப்பை வென்ற திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த மாணவிகள். இடமிருந்து : சுஸ்மிதா, கண்மணி.
22 hrs ago
14 / 15
பள்ளி வேட்டை: புதுச்சேரி கோவிந்தசாலை பாரதிபுரத்தில் உள்ள அய்யப்பசுவாமி கோவிலில் பள்ளி வேட்டை உற்ஸவம் நடந்தது.
23 hrs ago
15 / 15
விற்பனைக்கு வந்த வாழைத்தார்: திண்டுக்கல் சிறுமலை செட்டில் விற்பனைக்கு வந்த வாழைத்தார்கள்.