தமிழகத்தின் கண்ணாடி

01 Oct 2020
1hours ago
1 / 6
சிவாஜி கணேசன் பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவச் சிலைக்கு துணை முதல்வர் பன்னீர்செல்வம் , மலர் தூவி மரியாதை செலுத்தினார். உடன் அமைச்சர்கள். இடம் : சிவாஜி கணேசன் மணிமண்டபம், அடையாறு. சென்னை.
2hours ago
2 / 6
ஊட்டி நகரின் முக்கிய குடிநீர் ஆதாரங்களில் ஒன்றான மர்லிமந்து அணை சமீபத்தில் பெய்த மழையால் நிரம்பியுள்ளது.
2hours ago
3 / 6
முக்தியடைந்த இந்து முன்னணி நிறுவனர் ராமகோபாலன் உடல் திருச்சி உறையூர் சீரா தோப்பில் உள்ள பாரதி வித்யாஷ்ரம் பள்ளியில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அங்கு, வந்த பா.ஜ.,வின் முன்னாள் தேசிய செயலாளர் ஹெச். ராஜா அவரது திருவுருவப் படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தினர்.
2hours ago
4 / 6
முக்தியடைந்த இந்து முன்னணி நிறுவனர் ராமகோபாலனுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, கோவை, காரமடையில் இந்து முன்னணி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் அமைதிப் பேரணியாக நான்கு ரத வீதிகளில் வலம் வந்தனர்.
7hours ago
5 / 6
விஜயதசமியையொட்டி கடலூர் பழைய வண்டி பாளையத்தில் தயாராகும் மகாபலிபுரம் கோவில் வடிவில் கொலு பொம்மை.
13hours ago
6 / 6
ஊட்டச்சத்து மாதத்தை ஒட்டி கோவை பூ மார்க்கெட்டில் ஊட்டச்சத்து உணவு பொருட்களின் கண்காட்சி நடந்தது. இடம் மாநகராட்சிப் பள்ளி
Advertisement