தமிழகத்தின் கண்ணாடி

12 Nov 2019
1 hr ago
1 / 7
சீக்கிய மத குரு குருநானக்கின் 550-வது பிறந்தநாளையொட்டி சென்னை தி.நகர் ஜி.என்.செட்டி சாலையில் உள்ள குருநானக் சத்சங் சபாவில் வழிபாடு செய்த சீக்கிய பெண்கள்.
2 hrs ago
2 / 7
நெய்வேலி ஜவகர் சி.பி. எஸ். சி. பள்ளியில் தினமலர் பட்டம் மாணவர் பதிப்பு மற்றும் கோவை அமிர்தா விஸ்வ வித்யாபீடம் கல்வி நிறுவனம் ஆகியவை சார்பில் வினாடி-வினா போட்டி நடந்தது. போட்டியில் முதலிடம் பிடித்த மாணவர்களுக்கு கேடயம் மெடல் சான்றிதழ்களை பள்ளி முதல்வர் யசோதா வழங்கினார்.
3 hrs ago
3 / 7
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் செண்பகத்தோப்பு ரோடு அணைத்தலை ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்டிருந்த தற்காலிக பாலத்தை காட்டாற்று வெள்ளம் அடித்துச் சென்றதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
8 hrs ago
4 / 7
முன்னெடுப்பு பயிற்சி கூட்டம்: கடலூரில் நடந்த கல்வி மாவட்ட அளவிலான தேசிய அளவில் பள்ளி தலைமைஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களின் முழு மேம்பாட்டிற்கான முன்னெடுப்பு பயிற்சி கூட்டத்தில் சி.இ.ஓ. வெற்றிச்செல்வி பேசினார்.
10 hrs ago
5 / 7
குவிந்த பறவைகள்: சென்னை துரைப்பாக்கம் சதுப்புநில பகுதியில் இரைதேடி குவிந்துள்ள, க்ளாஸி இல்பிஸ் என்னும் அறிவாள் மூக்கன் பறவைகள்.
11 hrs ago
6 / 7
பேட்டரி வாகனம்: விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த வாராந்திர குறைகேட்பு கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்ட பேட்டரியால் இயங்கும் மூன்று சக்கர நாற்காலியை பெற்ற மாற்றுத்திறனாளி மகிழ்ச்சியுடன் ஓட்டிச் செல்கிறார்.
14 hrs ago
7 / 7
கலெக்டர் அலுவலகத்தில் மனு : திண்டுக்கல்லில் மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர் சங்கம் சார்பில் பணி நிரந்தரம் கோரி கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தனர்.