தமிழகத்தின் கண்ணாடி

05 Dec 2019
1 hr ago
1 / 23
வினாடி வினா போட்டி : தினமலர் நாளிதழின் மாணவர் பதிப்பான பட்டம் இதழ் சார்பாக, திருப்பூர், திருமுருகன்பூண்டி, ஏ.வி.பி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் வினாடி வினா போட்டி நடந்தது. தகுதி சுற்றில் பங்கேற்ற மாணவ,மாணவியருடன(இடமிருந்து) பள்ளியின் ஒருகிணைப்பாளர் வனிதாமணி, மேலாளர் ராமசாமி, முதல்வர் பிரியாராஜா, ஆசிரியர் மெசிந்தா ஆகியோர் உடனிருந்தனர்.
3 hrs ago
2 / 23
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலுக்கு வந்த வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து கோவிலுக்கு வரும் பக்தர்களிடம் சோதனை நடத்தப்பட்டது.
4 hrs ago
3 / 23
டிச. 6 முன்னிட்டு சென்னை எம்.ஜி.ஆர்., சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வரும் பயணிகளின் உடமைகளை போலீசார் சோதனையிட்டனர்.
7 hrs ago
4 / 23
ஊட்டி அருகே நஞ்சநாடு மேல்நிலைப்பள்ளியில், மலேசியாவில் உள்ள தமிழ் பள்ளி தமிழாசிரியர்கள், மாணவியர்களுடன் நடனமாடினர்கள்.
7 hrs ago
5 / 23
காரைக்குடியில் உள்ள சூடாமணி புரத்தில் தொட்டியில் இருந்து வெளியாகும் தண்ணீர தெருக்களில் ஆறு போல ஒருகிறது.
8 hrs ago
6 / 23
ஊட்டி காந்தி மைதானத்தில், மாவட்ட ஒருங்கினைந்த கல்வி திட்டம் சார்பாக நடந்த, கபடி போட்டியில் எடக்காடு பள்ளி மற்றும் எமரால்டு பள்ளி அணிகள் மோதின.
8 hrs ago
7 / 23
உலக எயிட்ஸ் தினத்தை முன்னிட்டு, கையில் பதாகைகளுடன் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய தனியார் பள்ளி மாணவியர். இடம்: சாலிகிராமம், சென்னை.
9 hrs ago
8 / 23
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 3 வது நினைவு நாளை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் மலர்தூவி அஞ்சலி செலுத்திய, அ.ம.மு.க., பொதுச்செயலாளர் தினகரன் உள்ளிட்டோர்.
10 hrs ago
9 / 23
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 3 வது நினைவு நாளை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் அவரது நினைவிடத்தில், தமிழக முதல்வர் இ.பி.எஸ், துணை முதல்வர் ஓ.பி.எஸ். மற்றும் அமைச்சர்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
11 hrs ago
10 / 23
பசுந்தேயிலை கொள்முதல் செய்ய மறுக்கும் தொழிற்சாலை பிரச்னைக்கு தீர்வுகாண வலியுறுத்தி சிறுவிவசாயிகள் குன்னூர் தேயிலை வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
11 hrs ago
11 / 23
மலேசியாவில் உள்ள கோலா சினாங்கூர் மாவட்ட கல்வி அலுவலர் புஷ்பநாதன் தலைமையில் 18 பேர், நீலகிரி மாவட்டம் ஊட்டி நஞ்சநாடு அரசு பள்ளியில் , கல்வி கருத்து பரி மாற்ற நிகழ்ச்சிக்கு வந்துள்ளனர். அவர்கள், கலாசார நடனங்களை ஆடி மகிழ்ந்தனர் .
11 hrs ago
12 / 23
மலேசியாவில் உள்ள கோலா சினாங்கூர் மாவட்ட கல்வி அலுவலர் புஷ்பநாதன் தலைமையில் 18 பேர், நீலகிரி மாவட்டம் ஊட்டி நஞ்சநாடு அரசு பள்ளியில் , கல்வி கருத்து பரி மாற்ற நிகழ்ச்சிக்கு வந்துள்ளனர். மாணவ, மாணவிகளும் கலந்துரையாடினர்.
11 hrs ago
13 / 23
கோவை தடாகம் ரோடு வேலாண்டிபாளையம் பகுதியில் வணிக வளாகத்தில் உள்ள கடைகளில் தீ பிடித்ததையடுத்து அணைக்கும் முயற்சியில் ஈடுபட்ட தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினர்.
11 hrs ago
14 / 23
கார்த்திகை திருநாளை யொட்டி சென்னை மயிலாப்பூரில் மாடவீதிகளில் விற்பனைக்கு வந்துள்ள மண்விளக்குகள்.
13 hrs ago
15 / 23
உடுமலை கணக்கம்பாளையம் ஊராட்சி சம்பூர்ணலேவுட்டில் மழை நீர் செல்ல வழியில்லாமல் தேங்கி கிடக்கிறது.
13 hrs ago
16 / 23
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மூன்றாவது நினைவு நாளை முன்னிட்டு அ.தி.மு.க. சார்பில் நடந்த அமைதி பேரணியில் பங்கேற்ற முதல்வர் இ.பி.எஸ்., துணை முதல்வர் பன்னீர்செல்வம் உள்ளிட்டோர். இடம்:சேப்பாக்கம்.
14 hrs ago
17 / 23
கோவை சர்வோஜனா பள்ளியில் நடந்த மாவட்ட அளவிளான பள்ளி மாணவர்களுக்கான கூடைபந்து போட்டியில் சர்வோஜனா பள்ளி பி அணியும் - பாரதி மெட்ரிக் பள்ளி அணியும் மோதின.
14 hrs ago
18 / 23
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 3ம் ஆண்டு நினைவுத் தினத்தையொட்டி அவரது படத்திற்கு அ.தி.மு.க. கட்சி பெண்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர். இடம்: உடுமலை பஸ் ஸ்டாண்டு அருகில்
14 hrs ago
19 / 23
திருப்பூர், மாநகராட்சி ரோட்டில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ., நினைவு தினத்தையொட்டி அ.தி.மு.க., மாநகர் மாவட்டம் சார்பில் அமைதி ஊர்வலம் நடந்தது.
14 hrs ago
20 / 23
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு ஆட்டோ ஓட்டுனர் , தொண்டர்கள் அஞ்சலி செலுத்தினர். இடம்: அம்மன் குளம், கோவை.
19 hrs ago
21 / 23
விழிப்புணர்வு நிகழ்ச்சி : புதுச்சேரி சாலை போக்குவரத்துக் கழக கருத்தரங்கக் கூடத்தில், உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் நீதிபதி சோபனாதேவி பேசினார். அருகில், சாலை போக்குவரத்துக் கழக உதவி மேலாளர் ராதாகிருஷ்ணன்.
20 hrs ago
22 / 23
நாமகீர்த்தனம்: திருப்பூர் காலேஜ்ரோடு ஐயப்பன் கோவில் மண்டல பூஜையை முன்னிட்டு நாமகீர்த்தனம் பஜனை நிகழ்ச்சி நடந்தது.
23 hrs ago
23 / 23
மறுகால் வழியாக தண்ணீர் : தொடர் மழையால் வத்தலக்குண்டு அருகே வீரன்குளம் நிரம்மி மறுகால் செல்கிறது.