தமிழகத்தின் கண்ணாடி

25 Feb 2020
4 hrs ago
1 / 14
ஆய்வு கூட்டம்: திருப்பூர், கலெக்டர் அலுவலகத்தில் சிறுபான்மையினர் நல கமிஷன் ஆய்வு கூட்டம் நடந்தது.
5 hrs ago
2 / 14
அருளாசி: மந்தைவெளி கல்யாண நகர் அசோசியேஷன் சார்பில் திருவாடுதுறை ஆதீன சைவ சித்தாந்த நேர்முக பயிற்சி மைய மந்தைவெளி கிளை சைவ சித்தாந்த வகுப்பு மாணவர்களுக்கு ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அருளாசி வழங்கினார்.
5 hrs ago
3 / 14
போக்குவரத்து நெரிசல்: இரவு நேரத்தில் போக்குவரத்து நெரிசலால் நீண்ட வரிசையில் நிற்கும் வாகனங்கள் .இடம். உடுமலை -பொள்ளாச்சி ரோடு .
5 hrs ago
4 / 14
ஆணழகன் போட்டி : மாநில அளவில் பல்கலை மாணவர்களுக்கான ஆணழகன் போட்டி கோயம்புத்துார் கற்பகம் பல்கலையில் நடந்தது.
6 hrs ago
5 / 14
சர்வதேச கருத்தரங்கம்: கல்வி மேலாண்மை மற்றும் தொழில்நுட்பம் நிலைப்புத்தன்மை குறித்த தாம்பரம் சாய்ராம் கல்லூரியில் 9-வது சர்வதேச கருத்தரங்கு நடந்தது. இதில் நெதர்லாந்து ரேமஸ் பல்கலை வணிகத்துறை பேராசிரியர் பீட்டர் ஓகல்சன், கருத்தரங்கு சிடியை வெளியிட்டார். உடன் இடமிருந்து வலம், கல்லூரி மேலாண்மைதுறை இயக்குனர் கே. மாறன், தமிழ்நாடு ஆசிரியர் கல்வி பல்கலை துணைவேந்தர் பஞ்சநாதன், கல்லூரி முதல்வர் ராஜேந்திர பிரசாத், பேராசிரியர் செல்வகுமார். இடம்: சாய்ராம் கல்லூரி, தாம்பரம்.
8 hrs ago
6 / 14
புதுச்சேரி தலைமைச் செயலகத்தில் அரசின் திட்டங்கள் செயல்பாடுகள் குறித்து அனைத்து துறை அதிகாரிகளுடன் முதல்வர் நாராயணசாமி ஆலோசனை நடத்தினார்
10 hrs ago
7 / 14
சென்னையில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் மெரினா கடற்கரை நீச்சல் குளத்தில் குளித்து விளையாடும் சிறுவர்கள்.
11 hrs ago
8 / 14
ஊட்டியில், மாவட்ட நிர்வாகம் சார்பாக நடந்த தூய்மைக்கு சேவை நிகழ்ச்சியில், தூய்மை காவலர்களுக்கு கோலப் போட்டி நடந்தது.
12 hrs ago
9 / 14
குரோம்பேட்டை எம்.ஐ.டி .மேம்பாலம் கீழ் பகுதியில் நெடுஞ்சாலை துறையினரால் பூங்கா அமைப்பதற்கான வேலை நடைபெற்று வருகிறது. இடம் .குரோம்பேட்டை.
14 hrs ago
10 / 14
கோவை பூ மார்க்கெட் பகுதியில், ஜெயின் சமூகத்தை சேர்ந்த நெகல்குமாரி துறவறம் செல்வதால், அலங்கரிக்கப்பட்டு ஊர்வலம் நடத்தினர்.
16 hrs ago
11 / 14
மாணவ மாணவியர்களிடையே காவலன் செயலி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி கோவை அரசு கலைக் கல்லூரியில் நடந்தது. இதில் தங்களது மொபைல் போனில் செயலியை பதிவு செய்தபின் மாணவியர்கள் டார்ச் லைட் அடித்து உயர்த்தி காண்பித்தனர்.
18 hrs ago
12 / 14
திருப்பூர் தாராபுரம் ரோடு கோட்டை மாரியம்மன் கோவில் பொங்கல் விழாவை முன்னிட்டு தீர்த்த குடம் எடுத்து வந்த பக்தர்கள்.
20 hrs ago
13 / 14
நீலகிரி - கோத்தகிரி மார்க்கெட் பகுதியில் நள்ளிரவில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதில் 15-க்கும் மேற்பட்ட கடைகளுக்கு தீ பரவியது.
23 hrs ago
14 / 14
துணைஜனாதிபதி வெங்கையா நாயுடு புதுச்சேரிக்கு வருகையை முன்னிட்டு அதிவிரைவு பாதுகாப்பு படை வந்துள்ளனர்