தமிழகத்தின் கண்ணாடி

22 Feb 2020
3 hrs ago
1 / 17
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில், 1.34 கோடி ரூபாய் செலவில், அரசு சார்பில் கட்டப்பட்ட, 'தினத்தந்தி' பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபத்தை, முதல்வர் இ.பி.எஸ்., திறந்து வைத்தார். உடன், துணைமுதல்வர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள்,'தினத்தந்தி' இயக்குனர் சி.பாலசுப்பிரமணிய ஆதித்தன் மற்றும் குடும்பத்தினர்.
3 hrs ago
2 / 17
கலந்துரையாடல்: கோவை கொடிசியாவில் சி.ஐ.ஐ சார்பில் ராணுவ அதிகாரி உபாத்யா உடன் கலந்துரையாடல் நடந்தது,இதில் (இடமிருந்து) சி.ஐ.ஐ தலைவர் கணேஷ்குமார் கோவை மண்டலம் முன்னாள் தலைவர் வரதராஜன், ராணுவ அதிகாரி பிரிட்ஜ் சைலேந்திரா மாலிக், கொடிசியா தலைவர் ராமமூர்த்தி, தேவராஜ் உள்ளிட்டோர்
3 hrs ago
3 / 17
25வது ஆண்டு விழா: சென்னை மண்ணடியில் உள்ள இரத்தினவேலு சுப்பிரமணியம் முத்தியாலுப்பேட்டை பள்ளியின் 25வது ஆண்டு விழா நடந்தது.இதில் சிறந்த மாணவியர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.உடன் (இடமிருந்து) பள்ளி நிர்வாக அலுவலர் ராமசேஷன், இயக்குனர்கள் இளங்கோ, தணிகாசலம், சிறப்பு விருந்தினர் சென்னை ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் உதவி மேலாளர் லலித் குமார், பள்ளி இயக்குனர்கள் ஏகாம்பரம், தக்ஷாயினி, செயலர் ராம்குமார், இயக்குனர்கள் பார்த்தசாரதி மற்றும் விஜயகுமார்.
3 hrs ago
4 / 17
அறுவடை: இது ஒன்றும் வெளிநாடு அல்ல நம்முடைய கொங்கு மண் தான்..!கோவை சின்னியம்பாளையம் பகுதியில் கோழிக்கொண்டை பூக்களை அறுவடை மும்முரமாக நடந்து வருகிறது
5 hrs ago
5 / 17
நாகர்கோயிலில் உள்ள ஸ்காட் கிறிஸ்டியன் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் 14வது சந்திப்பு சென்னை ராயப்பேட்டையில் நடந்தது. இதில் மூத்த உறுப்பினர் சார்லஸ் அப்பாதுரைக்கு நினைவுப் பரிசு வழங்கிய ஸ்காட் கிறிஸ்டியன் கல்லூரியின் முதல்வர் எட்வர்ட். அருகில் இடமிருந்து வலம்: ஸ்காட் கிறிஸ்டியன் கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தின் சென்னை பிரிவு தலைவர் அகமது மீரான் மொஹிதீன்,ஸ்காட் கிறிஸ்டியன் கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தின் நாகர்கோவில் பிரிவு துணைத் தலைவர் ஆசாத், முன்னாள் நீதிபதி ஜஸ்டின் ஜார்ஜ்,ஸ்காட் கிறிஸ்டியன் கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தின் நாகர்கோவில் பிரிவு பொருளாளர் மோகன்தாஸ், ஸ்காட் கிறிஸ்டியன் முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் சென்னை பிரிவு செயலர் டேவிட் மற்றும் ஸ்காட் கிறிஸ்டியன் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் நாகர்கோயில் பிரிவு பொதுச் செயலாளர் ஜேம்ஸ் டேனியல்.
5 hrs ago
6 / 17
நிதி திரட்டும் நிகழ்ச்சி: மதுரை லட்சுமி சுந்தரம் மகாலில் மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம் சார்பில் குழந்தை பருவ புற்றுநோய்க்கு இலவச சிகிச்சையளிப்பதற்காக மியூசிக்கல் ஸ்டேஜ் ஷோ நிதி திரட்டும் நிகழ்ச்சி நடந்தது.
6 hrs ago
7 / 17
எங்கிட்ட மோதினால் படுத்தாலும் விட மாட்டேன்.இடம்:திண்டுக்கல் குட்டத்து ஆவாரம்பட்டி ஜல்லிக்கட்டு.
7 hrs ago
8 / 17
கோவை வெள்ளலூரிலுள்ள சக்தி விநாயகர் வைத்தீஸ்வரன் கோவிலில் வழுவூரார் இசை நாட்டிய விழாவில் மாணவியரின் நடனம் பார்வையாளர்களை வசீகரித்தது.
9 hrs ago
9 / 17
பாலாடை ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி கோவில் மாசி திருவிழாவை முன்னிட்டு அலகு குத்திக்கொண்டு ஊர்வலமாக வந்த பக்தர்கள். இடம்: திருவல்லிக்கேணி.
10 hrs ago
10 / 17
காது கேளாதோர் பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டு திருவிழா டெப் என்னேபில்டு அறக்கட்டளை சார்பில் நடந்தது. இதில் பல்வேறு விளையாட்டுகளை ஆர்வமுடன் விளையாடிய மாற்றுத்திறனாளிகள். இடம்: ஆயிரம் விளக்கு, சென்னை.
11 hrs ago
11 / 17
ராமேஸ்வரத்தில் இலங்கை கடற்படையை கண்டித்து விசைப்படகுகள் கடலுக்கு செல்லாததால் நிறுத்தப்பட்டு ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளன.
12 hrs ago
12 / 17
அடையாறு ஆற்றில் கட்டப்பட்டு வரும் வெள்ளதடுப்பு சுவர்கட்டுமான முறைகேட்டை கண்டித்து சைதாப்பேட்டை ஆட்டு தொட்டி அருகே அடையாறு ஆற்றுக்குள் இறங்கி ஆர்பாட்டம் நடத்திய தி.மு.க.,வினர் .இடம் : சைதாப்பேட்டை.
14 hrs ago
13 / 17
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் கோவிந்தசாமி அரசு கலை கல்லூரியில் நடந்த பட்டமளிப்பு விழாவில் பட்டம் பெறுவதற்காக வீறுநடை போட்டு வந்த மாணவ மாணவியர்.
15 hrs ago
14 / 17
புதுச்சேரி கடற்கரை காந்தி திடலில் ஆல்பா மாணவர்கள் பானை மேல் நின்று யோக ஆசனங்களை செய்து உலக சாதனை நிகழ்ச்சி நடத்தினர்.
15 hrs ago
15 / 17
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி தேரோட்டத்தில் தேரில் வளம்வந்த ராமநாத சுவாமி பர்வதவர்த்தினி அம்பாள் பிரியாவிடை.
15 hrs ago
16 / 17
புதுச்சேரி கடற்கரை காந்தி திடலில் ஆல்பா பள்ளி 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் 25க்கும் மேற்பட்ட யோக ஆசனங்களை செய்து உலக சாதனை நிகழ்ச்சி நடத்தினர்.
20 hrs ago
17 / 17
கோவை ஈஷா யோகா மையத்தில் நடந்த மஹா சிவராத்திரி விழாவில் பார்வையாளர்களை கவர்ந்த கலை நிகழ்ச்சிகள்.