தமிழகத்தின் கண்ணாடி

27 May 2020
11 hrs ago
1 / 40
கொடைக்கானலில் பெய்த கன மழையில் நனைந்த பூச்செடிகள்.
11 hrs ago
2 / 40
புதுச்சேரி அடுத்த கூனி முடக்கு கிராமத்தில் செங்கல் சூலை கட்டும் பணி கட்டும் அமைக்கும் தொழில் முடங்கிகிடைக்கின்றது
12 hrs ago
3 / 40
அவிநாசி சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் கன மழை பெய்தது.
12 hrs ago
4 / 40
கிணற்று பாசனத்தில் பயிரிட்டுள்ள நெற்பயிர்கள்.இடம்: சிவகங்கை அருகே முத்துப்பட்டி.
13 hrs ago
5 / 40
கொடைக்கானலில் பூத்துள்ள இரு வண்ண ஸ்டேட்டீஸ் பூ.
14 hrs ago
6 / 40
உடுமலை போடிபட்டியில் பயிரிடப்பட்டுள்ள வாழை மரத்தில் உள்ள இலைகள் காற்றிற்கு கிழிந்து காணப்படுகிறது.
15 hrs ago
7 / 40
சூரியன் மறைய சந்திரன் தோன்ற செந்நிற வானம் பொன்னிறமாய் காட்சியளிக்க பறவைகள் தன் கூண்டுக்கு செல்ல அனைவருக்கும் இனியதோர் மாலை.இடம்: சிவகங்கை அருகே இடையமேலூர்.
15 hrs ago
8 / 40
இப்ப அடிக்கிற வெயிலுக்கு இந்த ஓலை குடிசைக்கு ஒரு கோபுரம் ஈடாகுமா. இடம் .. கோவை, கொச்சின் பைபாஸ் க.க சாவடி அருகே
15 hrs ago
9 / 40
திண்டுக்கல்லில் மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டம் நடந்தது.
15 hrs ago
10 / 40
திண்டுக்கல்லில் மாஸ்க் அணியாமல் இரு சக்கர வாகனத்தில் சென்றவர்களை நிறுத்தி போலீசார் அறிவுரை வழங்கினர்.
16 hrs ago
11 / 40
புதுச்சேரி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த கோர்ட் இ ஸ்டாம்ப் திட்டத்தை புதுச்சேரி தலைமை நீதிபதி தனபால் துவக்கி வைத்தார். உடன் கலெக்டர் அருண்
16 hrs ago
12 / 40
திருவள்ளூர் ரயில் நிலையத்தில் சுரங்கப்பாதைக்கு அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது
16 hrs ago
13 / 40
விழுப்புரம் பேங்க் ஆப் இந்தியா சார்பில் முதுநிலை மேலாளர் அம்ரித்குமார் விழுப்புரம் மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார் ஆகியோர் ஆலங்குப்பம் நரிக்குறவர் காலனியில் உள்ள நரிக்குறவர்களுக்கு அரிசி, காய்கறி, மளிகைப் பொருட்கள் கொண்ட தொகுப்பினை வழங்கினர். அருகில் முருகவேல், இன்ஸ்பெக்டர் பாண்டியன்.
16 hrs ago
14 / 40
உடுமலை திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவிலில் ஊழியர் கொடுத்த வாழைபழத்தை சண்டை போடாமல் சாப்பிடும் குரங்குகள்.
16 hrs ago
15 / 40
ஊரடங்கு தளர்த்தப்பட்டதால் கூண்டுகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள லவ்பேர்ட்ஸ்கள். இடம்.உடுமலை
16 hrs ago
16 / 40
கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் விவசாயிகளுக்கு நிவாரண வழங்காததை கண்டித்து சிவகங்கையில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
16 hrs ago
17 / 40
புதுச்சேரி ஊசுட்டேரியில் முடங்கிக் கிடக்கும் படகுகள்
16 hrs ago
18 / 40
கோவை பெரியநாயக்கன்பாளையம் சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரம் பதிவு செய்ய வருபவர்களுக்கு கிருமி நாசினி மருந்து மூலம் கைகளை கழுவிக் கொண்டு காய்ச்சல் உள்ளதா என்று பரிசோதனை செய்யப்பட்டு பின்பே பத்திரங்களை பதிவு செய்ய அனுமதிக்கப்படுகிறது.
19 hrs ago
19 / 40
கோவை சூலூர் விமான படை தளத்தில் மேம்படுத்தப்பட்ட தேஜஸ் மார்க் - 1 புதிய போர் விமானத்திற்கு சர்வதர்ம பூஜை நடந்தது.
20 hrs ago
20 / 40
விழுப்புரம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் விடைத்தாள் திருத்தும் பணிக்கு வந்த ஆசிரியர்களுக்கு மருத்துவ குழுவினர் டிஜிட்டல் தெர்மா மீட்டர் மூலம் பரிசோதனை செய்தனர்.
20 hrs ago
21 / 40
விசிறி விற்பனை ஜோர்!: கோடை வெய்யிலை சமாளிக்க பனைவிசிறி மட்டைகளை வாங்கி செல்லும் பொது மக்கள்.. இடம், விழுப்புரம் தற்காலிக உழவர் சந்தை .
20 hrs ago
22 / 40
விழுப்புரம் கிழக்கு பாண்டி ரோட்டில் சாலை விரிவாக்கப் பணிக்காக புத்துமாரியம்மன் கோவில் அதிகாலை அகற்றப்பட்டது. அந்த இடத்தில் மாம்பழம் மற்றும் வேப்பிலை வைத்து வழிபாடு செய்தனர்.
20 hrs ago
23 / 40
கொரோனோ அச்சத்தால் எப்பொழுதும் கூட்டம் நிரம்பி காணப்படும் திருவான்மியூர் மார்க்கெட் தற்போது வெறிச்சோடி காணப்படுகிறது.
20 hrs ago
24 / 40
வெளியூர்களுக்கு செல்ல முடியாமல் சென்னையில் உள்ள வட மாநில தொழிலாளர்கள் கைபேசியில் பொழுதை கழிக்கின்றனர்.இடம் : வேளச்சேரி
20 hrs ago
25 / 40
விழுப்புரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியால் பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணியை தொடங்கி வைத்து கலெக்டர் அண்ணாதுரை பார்வையிட்டார். அருகில் சி.இ.ஓ., முனுசாமி.
20 hrs ago
26 / 40
விழுப்புரம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் சமூக இடைவெளியுடன் ஆசிரியர்கள் அமர்ந்து பிளஸ்2 விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கியது.
20 hrs ago
27 / 40
சென்னையில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் மக்களை குளிர்விக்கும் விதமாக விற்பனைக்கு வந்துள்ள குழாய் வைத்த மண்பானைகள்.இடம்: கோடம்பாக்கம் நெடுஞ்சாலை
20 hrs ago
28 / 40
தலைக்கவசத்தை ,மறந்தது ஏனோ. இடம் :ஆலந்தூர்.
20 hrs ago
29 / 40
பிளஸ்2 பொதுதேர்வின் விடைத்தாள்கள் திருத்தும் பணி துவங்கியது. அறையில் சமூக இடைவெளியை கடைபிடித்தும், முக கவசம் அணிந்தும் விடைத்தாள்களை திருத்தும் பணியில் ஈடுபட்ட ஆசிரியர்கள். இடம் : சூரப்பட்டு,புழல்,சென்னை
20 hrs ago
30 / 40
விழுப்புரம் கிழக்கு பாண்டி ரோட்டில் புத்துமாரியம்மன் கோவில் இடிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து மக்கள் கட்சி சார்பில் மனு கொடுக்க வந்தனர்.
20 hrs ago
31 / 40
விழுப்புரம் இந்திய கம்யூனிஸ்டு கட்சி அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
20 hrs ago
32 / 40
விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி சார்பில் திமுக வழக்கறிஞர் மீது போலீசார் தொடர்ந்த வழக்கை ரத்து செய்யக்கோரி மாவட்ட முதன்மை நீதிபதி ஆனந்திடம் மனு கொடுக்க வந்த வழக்கறிஞர்கள்.
20 hrs ago
33 / 40
கொரோனாவோடு கோடை வெயிலும் சென்னை மக்களை வாட்டி வரும் நிலையில், கொரோனா விழிப்புணர்வோடு மட்டும் நிற்காமல்,மரம் வளர்ப்பு மற்றும் தண்ணீர் சேமிப்பு குறித்த விழிப்புணர்வும் விளம்பரங்களும் சாலை ஓரங்களில் வைக்கப்பட்டு வருகின்றன. இடம்: பெரம்பூர்.
20 hrs ago
34 / 40
திருப்பூர், தாராபுரம் ரோடு செட்டிபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் அறை தயார் செய்யும் பணி நடந்தது.
20 hrs ago
35 / 40
சென்னை தவிர தமிழகத்தின் மற்ற பகுதிகளில் ஆட்டோக்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில், இரண்டு மாதங்களாக இயக்கப்படாமல் வரிசையில் காத்திருக்கும் ஆட்டோக்கள். இடம்: கீழ்ப்பாக்கம்.
20 hrs ago
36 / 40
திருப்பூர், தாராபுரம் ரோடு விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணி நடந்தது.
20 hrs ago
37 / 40
உடுமலை மாரியம்மன் கோவில் வாசலில் திருமண தேதியை குறிப்பதற்காக கூடையில் உப்பு வைத்து அம்மனை கும்பிடும் கிராம மக்கள்.
20 hrs ago
38 / 40
விழுப்புரத்தில் தங்கி நகை வேலை செய்யும் மேற்கு வங்க தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலத்திற்கு செல்ல அனுமதிக்கோரி கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தனர்.
20 hrs ago
39 / 40
கோடை வெயிலின் தாக்கத்தை தாங்க முடியாமல், தண்ணீரில் இறங்கி சற்று ஆசுவாசப்படுத்திக் கொள்ளும் நாய். இடம்: சீனிவாசபுரம், சென்னை.
20 hrs ago
40 / 40
திருப்பூர் திருவருள் ஜோதிட கல்வி மையம் சார்பில் வள்ளலார் பூசம் நட்சத்திரத்தை முன்னிட்டு அன்னதானம் வழங்கப்பட்டது.
Advertisement