தமிழகத்தின் கண்ணாடி

02 Jun 2020
1 hr ago
1 / 19
டில்லியில் இருந்து, ஊட்டிக்கு வந்த நீலகிரி தொகுதி எம்.பி., ராஜாவுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டு அவரது வீட்டில், தனிமைப்படுத்தியதற்கான அறிவிப்பு நோட்டீஸ் ஒட்டப்பட்டது.
3 hrs ago
2 / 19
மாலை வேளையில்திருச்சியில் பலத்த மழை பெய்தது. மழையில், நனைந்தபடியே செல்லும் வாகன ஓட்டிகள்.
3 hrs ago
3 / 19
குறைவான பஸ்கள் இயக்கபடுவதால் உடுமலை பஸ் ஸ்டாண்டிலிருந்து பொன்ளாச்சி செல்லும் அரசு பஸ்ஸில் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் நெருக்கி அடித்து கொண்டு ஏறும் பயணிகள்.
3 hrs ago
4 / 19
மழைவர கருமேகங்கள் சூழ்ந்த இடம்: வடவள்ளி, கோவை.
5 hrs ago
5 / 19
விருத்தாசலம் பஸ்நிலையத்தில் எம்பி தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.9.70 லட்சம் மதிப்பில் ஹைமாஸ் விளக்கு அமைக்கும் பணி தீவிரமாக நடக்கிறது.
5 hrs ago
6 / 19
சிறு குரு தொழில்கள் நடக்கலாம் என்று அரசு உத்தரவிட்டது பேரில் சுமார் 1000 பிளாஸ்டிக் குடங்களை வாங்கி செல்லும் மொத்த வியாபாரி. இடம். தாம்பரம்.
6 hrs ago
7 / 19
கொரோனா நோயிலிருந்து மக்கள் விடுபட குமரி கடலில் இந்து சமய அறநிலைய துறை சார்பில் தமிழக அரசின் டில்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம் தலைமையில் சிறப்பு விளக்கு பூஜை நடந்தது.
6 hrs ago
8 / 19
ததும்பும் குளம்: சமீபத்திய மழைக்கு தண்ணீர் நிறைந்து காணப்படும் உடுமலை பெரியகுளம் .
6 hrs ago
9 / 19
சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வரும் நிலையில், சென்னை கோயம்பேடு பகுதியில் போக்குவரத்து அதிகமாக காணப்பட்டது.
7 hrs ago
10 / 19
சென்னை வில்லிவாக்கத்தில் பசுமை பூங்கா பணிகள் ஜரூராக நடந்து வருகிறது.
8 hrs ago
11 / 19
திருப்பூர், பகுதியில் தாழ்வாக பறந்த விமானப்படை ஹெலிகாப்டர்.
8 hrs ago
12 / 19
புதுச்சேரியில் மது பாட்டில் விலை உயர்வு ஏற்றியதால் உழவர்கரை மேட்டுப்பாளையம் சாராயக்கடையில் குடி பிரியர்கள் சாராய பாக்கெட் வாங்கி சென்றனர்.
10 hrs ago
13 / 19
கொரோனா தொற்றால் முக கவசம் அணிவது கட்டாயம் என்பதால் சென்னை தி.நகர் பகுதியில் பாதுகாப்பாக முக கவசம் அணிந்து செல்லும் வெளிநாட்டினர்.
10 hrs ago
14 / 19
ஊரடங்கு தளர்வை அடுத்து மீண்டும் துவங்கியது வாகனப் போக்குவரத்து. இதுக்கே இப்படி விழிபிதுங்குதே இன்னும் மாநகர பஸ் விட ஆரம்பிச்சுட்டா அவ்வளவுதான்...! இடம்- தங்கசாலை. சென்னை.
10 hrs ago
15 / 19
சென்னை தி.நகர் ரங்கநாதன் தெருவில் உள்ள கடைகளுக்கு செல்லும் மக்களுக்கு காய்ச்சல் அறிகுறி இருக்கிறதா என்று சோதனை நடத்தியபின் அனுமதிக்கப்படுகின்றனர்.
16 hrs ago
16 / 19
சித்திரை மாதம் முடிந்து வைகாசி மாதம் பிறந்தும் கோடை வெயில் குறையவில்லை. விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம்_ திருவண்ணாமலை சாலையில் வெயில் கக்கிய அனல் காற்றினால் கானல்நீர் தோன்றியது.
16 hrs ago
17 / 19
பல்லாவரம் நகராட்சிக்குட்பட்ட 13 வது வார்டு கண்ணபிரான் நகரில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் அந்த பகுதியில் பரபரப்பு உருவானது. மருத்துவமனையை சேர்ந்த செவிலியர்கள் அந்த பகுயில் உள்ளவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்தனர் .
17 hrs ago
18 / 19
வழக்கம் போலத்தான்.! கோவை இயல்பு நிலைக்குத் திரும்பியது என்பதற்கு இதைவிட ஒரு எடுத்துக்காட்டு இருக்காது. இடம்:மில் ரோடு, கோவை.
21 hrs ago
19 / 19
கோவை கலெக்டர் அலுவலகத்தில் பணிபுரிந்த பெண் அதிகாரி ஒருவருக்கு கோரொனோ தொற்று ஏற்பட்டுள்ளதையடுத்து வெறிச்சோடிய வளாகம்.