தமிழகத்தின் கண்ணாடி

01 Jun 2020
23 mins ago
1 / 14
எப்போது தான் முடியுமோ ! : இந்த ஊர் செல்லும் பயணம். வழிமேல் விழிவைத்து ரயிலுக்காக காத்திருக்கும் வடமாநில தொழிலாளர்கள். இடம்- சென்ட்ரல்.
57 mins ago
2 / 14
எழுபது நாட்களுக்கு மேல் ஊரடங்கில் இருந்தவர்கள் சிறிது தளர்வுக்கு பின் வாகன ஓட்டிகள் வண்டலூர் பகுதியில் இருந்து சென்னை நகருக்குள் வரத்தொடங்கினர். இடம் : பெருங்களத்தூர் ஜி.எஸ்.டி., சாலை.
1 hr ago
3 / 14
ஊரடங்கு முதல் சிறிது தளர்வுக்கு பின் காரில் 3 பேர் பயணம் செய்யலாம் என அரசு உத்தரவுக்கு பின் சென்னை விமான நிலையத்தில் பயணம் செய்ய பயனிகள் வராததால் பிரீபெய்டு கார்கள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
1 hr ago
4 / 14
கடலூர் முதுநகர் மீன்பிடி துறைமுகத்தில் மீன்பிடிக்க செல்லாததால் மீனவர்கள் தங்களது படகுகளை நிறுத்தி வைத்திருந்தனர்.
1 hr ago
5 / 14
சென்னை தி.நகர் போத்தீஸ் போன்ற பெரிய கடைகள் திறந்தவுடன் ஆர்வமுடன் புடவைகளை வாங்கும் மக்கள்.
1 hr ago
6 / 14
கோவை உக்கடம் பஸ் ஸ்டாண்டில் இயங்கிவந்த தற்காலிக காய்கறி மார்க்கெட் இன்று முதல் லாரி பேட்டை பகுதியில் இயங்க உள்ளதால் அப்பகுதியில் துப்புரவு பணிகள் மேற்கொள்ளப்பட்டு கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
2 hrs ago
7 / 14
புதுச்சேரி கல்வித்துறை முன்பு புதுவை அரசு நிதி உதவி பெறும் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களின் கூட்டமைப்பு சார்பில் கோரிக்கைகளை விடுத்து தர்ணா போராட்டம் நடந்தது.
3 hrs ago
8 / 14
நீண்ட நாட்களுக்கு பிறகு சென்னையில் மீண்டும் இயங்க துவங்கிய ஆட்டோக்கள்.இடம் : திருவான்மியூர்.
3 hrs ago
9 / 14
விவசாயிகளுக்கு இலவச மின்சாரத்தை ரத்து செய்யும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, கட்சி சார்பற்ற விவசாய சங்கத்தினர் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
5 hrs ago
10 / 14
ரயில் பயணம்: ஊரடங்கு தளர்வு அறிவிப்பில், தமிழக அரசு இன்று முதல் பஸ் மற்றும் ரயில் போக்குவரத்து செயல்படும் என அறிவித்தது. இதையடுத்து, திருச்சி ஜங்ஷன் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து நாகர்கோவிலுக்கு புறப்பட்டு செல்லும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலில் குறைந்த அளவு பயணிகள் மட்டுமே வந்தனர்.
5 hrs ago
11 / 14
பஸ் போக்குவரத்து துவங்கியது: ஊரடங்கு தளர்வு அறிவிப்பில், தமிழக அரசு இன்று முதல் பஸ் மற்றும் ரயில் போக்குவரத்து செயல்படும் என அறிவித்தது. இதையடுத்து, திருச்சி மத்திய பஸ் ஸ்டாண்டில் இருந்து தஞ்சை செல்லும் பஸ் பயணிகளுக்கு தெர்மா மீட்டர் மூலம் பரிசோதனை செயதும், கைகளில் சானிடைசர் தெளித்தும், பாதுகாப்பாக ஏற்றி அழைத்துச் சென்றனர்.
8 hrs ago
12 / 14
சென்னை, காசிமேடு மக்களுக்கு வேண்டுகோள்!: 'கொரோனா' தொற்றின் வீரியம் உங்களுக்கு புரியவில்லை என்பது, இந்த கூட்டத்தை பார்த்தால் புரிகிறது. உங்களை அண்டி இருக்கும் நீரழிவு, ரத்தக் கொதிப்பு நோயாளிகளை தாக்கி, உயிருக்கு உலை வைக்கிறது. எச்சரிக்கையுடன் இருங்களேன், ப்ளீஸ்.
9 hrs ago
13 / 14
மழை காலம் நெருங்கவுள்ள நிலையில் கோவை கிருஷ்ணாம்பதி குளத்தில் ஆகாயத் தாமரைகள் நிறைந்து குளமே தெரியாத நிலையில் காணப்படுகிறது.
10 hrs ago
14 / 14
உடுமலை அமராவதிஅணை தண்ணீரில் உள்ள கற்களில் வரிசையாக அமர்ந்து தூண்டில்போட்டு மீன் பிடிக்கின்றனர்.
Advertisement