தமிழகத்தின் கண்ணாடி

11 Jul 2020
17sec ago
1 / 16
கடலூர் தேவனாம்பட்டினம் சில்வர் பீச்சில் சுருக்குவலை பயன்படுத்த அனுமதி வழங்க கோரி மீனவர்கள் கடலில் இறங்கி போராட்டம் செய்தனர்.
1hours ago
2 / 16
கடலூர் தேவனாம்பட்டினம் சில்வர் பீச்சில் சுருக்குவலை பயன்படுத்த அனுமதி வழங்க கோரி மீனவர்கள் நடந்திய போராட்டத்திற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்..
38mins ago
3 / 16
சென்னை மாநகராட்சி மற்றும் பாதை தன்னார்வ அமைப்பு சார்பில் கொரோனா குறித்த விழிப்புணர்வு பேரணி நடந்தது.இடம்: ஆற்காட்டு சாலை, வளசரவாக்கம்.
3hours ago
4 / 16
திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை மெயின் ரோட்டில் இயங்கி வந்த மீன் மார்க்கெட், சமூக இடைவெளி கடைபிடிக்கவும், கொரோனா பரவாமல் தடுக்கவும் தற்காலிகமாக வலுக்கு பாலம் பகுதிக்கு மாற்றப்பட்டது. அந்த இடத்தில், மாவட்ட கலெக்டர் ஷில்பா பிரபாகர் சதீஷ் ஆய்வு செய்தார். அருகில், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் மகாகிருஷ்ணன்.
4hours ago
5 / 16
தாம்பரம் பஸ் நிலையத்தில் இருந்து மேற்கு பகுதி ரயில் நிலையத்தை இணைக்கும் வகையில் ஜி.எஸ்.டி., சாலையில் எஸ்குலேட்டர் வசதியுடன் கூடிய நடைபாதை பணியில் தற்போது வர்ணம் பூசும் பணி நடந்து வருகிறது . இடம் : தாம்பரம்.
5hours ago
6 / 16
லடாக் எல்லைக்கு ராணுவ தளவாடங்களை ஏற்றி சென்ற போது ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த தேனி மாவட்டம் துரைச்சாமிபுரத்தை சேர்ந்த ராணுவ வீரர் அழகுராஜாவின் உடலை பார்த்த கதறி அழுத அவரது மனைவி, மகள்.
5hours ago
7 / 16
கடலூரில் சுருக்குவலை பயன்படுத்தி கடலில் மீன் பிடிக்க கோரி மீனவர்கள் குடும்பத்தினருடன் தேவனாம்பட்டினம் சில்வர் பீச் பகுதியில் கருப்பு கொடி ஏற்றி தர்ணா நடத்தினர்.
5hours ago
8 / 16
திருப்பூர், பலவஞ்சிபாளையம் ரோடு வீரபாண்டி போலீஸ் ஸ்டேஷனில் பணியாற்றிய எஸ்.ஐ., ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானதை தொடர்ந்து ஸ்டேஷன் மூடப்பட்டு கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
6hours ago
9 / 16
திருப்பூர், பலவஞ்சிபாளையம் ரோடு வீரபாண்டி போலீஸ் ஸ்டேஷனில் பணியாற்றிய எஸ்.ஐ., ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானதை தொடர்ந்து ஸ்டேஷன் மூடப்பட்டு போலீசாருக்கு தெர்மல் ஸ்கேனர் மூலம் சோதனை செய்தனர்.
6hours ago
10 / 16
ஊட்டி மார்கெட்டிற்கு , அதிக எடையுடன் விற்பனைக்கு வந்த சுக்னி.
10hours ago
11 / 16
காய்ந்து ஈட்டி போல நீட்டியுள்ள பனை மரத்து மட்டைகள். இடம்:திண்டுக்கல் அருகே பெரியகோட்டை.
12hours ago
12 / 16
கோவை ரயில் நிலையத்தில் ரயில்வே தண்டவாளம் சீரமைக்கும் பணி நடந்து வருகிறது.
12hours ago
13 / 16
விழுப்புரம் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்களின் போக்குவரத்து வெகுவாக குறைந்துள்ளதால் சாலையில் உணவு தேடும் கவுதாரி பறவைகள்.
13hours ago
14 / 16
புதுச்சேரி பொம்மையார்பாளையம் கடல் நீர் ஊருக்குள் புகுந்ததால் பொதுமக்கள் அவதி
14hours ago
15 / 16
வானில் வட்டமிட்டு கண்களுக்கு ரம்மியமாக காட்சி தந்த நமது இயற்கை கார் மேக ஓவியங்கள். சென்னை.
15hours ago
16 / 16
:கலர் குடங்கள்:மழைக்காலம் துவங்கி உள்ளதால் கிராம பகுதி மக்களுக்கு மழை நீரை சேகரித்து வைத்துகொள்ள டூவிலரில் ஏராளமான பிளாஸ்டிக் குடங்களை விற்பனைக்காக கொண்டு செல்கிறார்கள்.இடம்: சிவகங்கை அருகே சோழபுரம்.