தமிழகத்தின் கண்ணாடி

02 Jul 2020
5 mins ago
1 / 4
தாம்பரம் அடுத்த பெருங்களத்தூர் , பீர்க்கண்காரணை பேரூராட்சியில் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்று அதிகமாகி வருவதால் நாமக்கல் மாவட்டம் எரும்பட்டியில் இருந்து வந்த மருத்துவ குழுவினர் சிறப்பு முகாம் நடத்தி வார்டு தோறும் உள்ள பொதுமக்களுக்கு உடல் வெப்பம் , ஆக்சிஜன் அளவு பரிசோதித்தனர் . இடம் : பெருங்களத்தூர்.
25 mins ago
2 / 4
முடக்கம்: கொரோனாவால் செங்கல் இறக்கும் தொழில் முடங்கியது. திருப்பூர் பி.என் ரோட்டில் லாரியில் செங்கல் லோடுடன் நிறுத்தப்பட்டுள்ள காட்சி.
10 hrs ago
3 / 4
கடலூர் முதுநகர் மீன்பிடித் துறைமுகத்தில் மீன்வளத்துறை அதிகாரிகள் மீனவர் விசைப்படகு சீல் வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து மீனவப் பெண்கள் தீக்குளிக்க முயன்றதால் போலீசார் தடுத்து நிறுத்தி மண்ணெண்ணெய் கேனை பறிமுதல் செய்தனர்.
10 hrs ago
4 / 4
திருச்சி மதுரம் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் காய்கறி கடைகள் அமைத்துள்ள, உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு மாநகராட்சி சார்பில், கொரோனா தொற்று நோய் உள்ளதா என, தெர்மா மீட்டர் மூலம் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டது.