தமிழகத்தின் கண்ணாடி

11 Aug 2020
1hours ago
1 / 8
பல்லாவரத்தில் போக்குவரத்திற்காக புதிய பாலம் கட்டும் பணி நீண்ட வருடங்களாக நடைபெற்றது. தற்போது முடிவடைந்த நிலையில் ஆகஸ்ட் 15ஆம் தேதி திறக்க உத்தேசித்துள்ளதாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இடம். பல்லாவரம்.
2hours ago
2 / 8
கிருஷ்ண ஜெயந்தி பண்டிகையை முன்னிட்டு கிருஷ்ணர் , ராதை வேடம் அணிந்து பண்டிகையை கொண்டாடிய குழந்தைகள். இடம் : உள்ளகரம், சென்னை .
2hours ago
3 / 8
சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் பணியாற்றி வரும் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் மற்றும் ஏழைகளுக்கு அரிசி உள்ளிட்ட மளிகை பொருட்களை நடிகர் ஆனந்தராஜ் வழங்கினார்.
4hours ago
4 / 8
2 ம் கட்டமாக சென்னை மணலியை அடுத்த ஆண்டார்குப்பம் சத்துவா கன்டெய்னர் சரக்குப் பெட்டக முனையத்தில் இருந்து 229 டன் எடையுடன் தெலுங்கானா மாநிலத்திற்கு புறப்பட்ட அம்மோனியம் நைட்ரேட் கன்டெய்னர் லாரிகள்.
4hours ago
5 / 8
கோகுலாஷ்டமியை முன்னிட்டு உடுமலை சீனிவாச பெருமாள் கோவிலில் சந்தான கோபாலகிருஷ்ணன் சிறப்பு அலங்காரத்தில் சேவை சாதித்தார்.
11hours ago
6 / 8
திருப்பூர் பழையபஸ்ஸ்டாண்ட் எதிரில் இருந்த மார்கெட் புதுபிக்கும் பணிக்காக, இடிக்கப்படுகிறது. தற்காலிக மார்கெட் ஒழுங்கு முறை விற்பனைகூடத்தில். அமைக்கப்பட்டுள்ளது. அதை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., குணசேகரன் திறந்துவைத்தார். அருகில் மார்கெட் சங்க நிர்வாகிகள்.
13hours ago
7 / 8
திண்டுக்கல் அருகே பாறைப்பட்டி  பகுதியில் பூத்துள்ள வெண்டைப்பூக்கள்.
15hours ago
8 / 8
கோகுலாஷ்டமி விழாவை முன்னிட்டு வீட்டில் வைத்து வழிபடுவதற்காக கோகுல கிருஷ்ணன் சிலையை வாங்கி செல்லும் பெண். இடம்: புதுச்சேரி காந்தி வீதி.
Advertisement