தமிழகத்தின் கண்ணாடி

23 Nov 2020
1day ago
1 / 10
கார்த்திகை 2வது சோமவாரத்தையொட்டி உடுமலை சக்தி விநாயகர் கோவிலில் சிவனுக்கு அபிஷேகம் செய்வதற்காக 108 சங்குகள் பூக்களால் அலங்காரம் செய்து வைக்கப்பட்டிருந்தன.
1day ago
2 / 10
நிவர் புயல் வருவதையொட்டி கடும் மழை வெள்ளத்தை சென்னை புறநகர் எதிர்நோக்கியுள்ளது. இந்த காலகட்டத்தில் ஏற்படும் இடர்பாடுகளை தவிர்க்க தாம்பரம் தீயணைப்புத்துறையினர் தயார் நிலையில் உள்ளனர்.
1day ago
3 / 10
தமிழக பா.ஜ., தலைவர் முருகனின் வெற்றிவேல் யாத்திரைக்கு பொள்ளாச்சி பா.ஜ.,வினர் வரவேற்பு அளித்தனர். இடம்: பொள்ளாச்சி காந்தி சிலை.
1day ago
4 / 10
சத்ய சாய் பாபா பிறந்த நாளையொட்டி உடுமலை ஸ்ரீ சத்ய சாய் சேவா சமிதியில் சாய் பாபா படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.
1day ago
5 / 10
20 மலை கிராமங்களுக்கு நேரடியாக 5 ஆயிரம் கம்பளம், இனிப்பு, உணவு பொட்டலங்கள் வாகனங்களில் அனுப்பட்டன. விழாவில் டிவிஎஸ் குழும தலைவர் வேணு சீனிவாசன், மல்லிகா சீனிவாசன், அகில இந்திய சத்ய சாய் சேவா நிறுவன துணைத் தலைவர் ரமணி, தமிழ்நாடு மாநில துணைத் தலைவர் சுரேஷ், மாநில ஆன்மீக ஒருங்கிணைப்பாளர் விஜய் கிருஷ்ணன், கன்வீனர் சதிஷ் உள்பட பலர் பங்கேற்றனர்.
1day ago
6 / 10
கோவை பீளமேடு காவல் நிலையம் பின்புறம் புதிய பாஜக அலுவலகத்திற்கு பூமி பூஜை நிகழ்ச்சி நடந்தது, இதில் மாநில தலைவர் வேல்முருகன்,கேரளா அமைச்சர் முரளிதரன் ஆகியோர் அடிக்கல் நாட்டினர்,அருகில் தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன்,மாவட்ட செயலர் நந்தகுமார் உள்ளிட்டோர்.
1day ago
7 / 10
நிவார் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமையில் விழுப்புரம் அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது. அருகில் கலெக்டர் அண்ணாதுரை, எஸ்.பி., ராதாகிருஷ்ணன்.
1day ago
8 / 10
புயல் உருவாகும் என்ற வானிலையை முன்னிட்டு கடலூர் முதுநகர் துறைமுகத்தில் 3 எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
1day ago
9 / 10
சூழல் கொஞ்சம் ஏதுவாய் மாறியதில் ஊருக்குள்ளே அழகாய் சுற்றி வரும் அழகிய பறவைகள். கோல்டன் ஓரியல் என்னும் இப்பறவையை கண்ட இடம்: கோவை வடவள்ளி.
1day ago
10 / 10
கடலூர் துறைமுகத்தில் கடலில் மீன்பிடிக்க மீன்வளத்துறை சார்பில் நவம்பர் 28 வரை மீன் பிடிக்க தடை செய்யப்பட்டதை தொடர்ந்து மீனவர்கள் தங்கள் விசைப்படகுகளை கரையோரத்தில் நிறுத்தி வைத்துள்ளனர்
Advertisement