தமிழகத்தின் கண்ணாடி

20 Jan 2021
1day ago
1 / 40
துணை அதிபராக பதவியேற்றதை தொடர்ந்து கமலா ஹாரிஸ் சொந்த ஊரான துளசேந்திபுரத்தில் கிராமத்தினர் விளக்கு ஏற்றி கொண்டாடினர்.
1day ago
2 / 40
குடியரசு தினத்தையொட்டி புதுச்சேரி இந்திராகாந்தி விளையாட்டு அரங்கில் பந்தல் அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
1day ago
3 / 40
மதுரை மாவட்டம் செக்கானூரணியில் தி.மு.க., சார்பில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் தலைவர் ஸ்டாலின் கலந்து கொண்டார்.
1day ago
4 / 40
பருவ மழை நிறைவடைந்து ஏரிகள் மற்றும் கிணறுகள் நிரம்பிய நிலையில் தற்போது விவசாய பணியில் தீவிரம் காட்ட துவங்கியுள்ள விவசாயிகள். இடம்: ரிங்ரோடு, திருவண்ணாமலை.
1day ago
5 / 40
ஓமந்தூரார் அரசு மருத்துவ கல்லூரியில் முதல் நாள் கல்லூரிக்கு வந்த முதலாம் ஆண்டு மாணவர்களை மூத்த மாணவர்கள் பூ கொடுத்து வரவேற்றனர்.அருகில் சுகாதார செயலர் ராதாகிருஷ்ணன் மற்றும் கல்லூரியின் டீன் ஜெயந்தி.இடம்: சேப்பாக்கம், சென்னை.
1day ago
6 / 40
திருச்சி மாவட்டம் சூரியூரில் நடந்த ஜல்லிக்கட்டில் சீறி வந்த காளையை அடக்கிய வீரர்.
1day ago
7 / 40
விழுப்புரம் நகர பாஜக சார்பில் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது.
1day ago
8 / 40
கள்ளக்குறிச்சி பருத்தி வாரச்சந்தையில் விவசாயிகள் விற்பனைக்குக் கொண்டுவந்த பஞ்சு மூட்டைகள் குடோனில் வைக்கப்பட்டுள்ளது
1day ago
9 / 40
ஊட்டி தாவரவியல் பூங்காவில், சினிமா சூட்டிங் எடுக்கப்பட்டது.
1day ago
10 / 40
ஆடியோ மட்டும் வருது படத்த காணோம்: திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பம் நலத்துறை சார்பில் விழிப்புணர்வு குறும்படம் போடப்பட்டது அதில் ஆடியோ மட்டும் வந்தது வீடியோ கடைசி வரை வரவே இல்லை.
1day ago
11 / 40
தமிழகத்தில் 300 நாட்களுக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக 10 மற்றும் 12ஆம் வகுப்புகள் துவங்கி, சானிடைசர் வழங்கப்பட்டு வெப்ப பரிசோதனைக்குப் பின்னரே மாணவ மாணவியர் அனுமதிக்கப்படுகிறார்கள். கொரோனா பரவலை தடுக்க கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையில் ஆர்வத்துடன் பள்ளிக்கு வரும் மாணவ, மாணவியர். இதையடுத்து விட்டமின் மற்றும் ஜிங்க் மாத்திரைகள் குறித்து விளக்கிய தலைமை ஆசிரியை. இடம்- சென்னை, அரசு மேல்நிலைப்பள்ளி மணலி.
1day ago
12 / 40
மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் வைகை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இடம்: தேனி அருகே குன்னூர்.
1day ago
13 / 40
முதல்வரை அவதூறாக பேசியதாக திமுக தலைவர் ஸ்டாலினை கண்டித்து சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர்.
1day ago
14 / 40
திருச்சி மாவட்டம் சூரியூரில் நடந்த ஜல்லிக்கட்டை காண திரண்ட ஜல்லிக்கட்டு பிரியர்கள்.
1day ago
15 / 40
முதலாமாண்டு மருத்துவ மாணவ, மாணவியர்களை பூங்கொத்து கொடுத்து வரவேற்ற ஸ்டான்லி அரசு மருத்துவமனை முதல்வர் பாலாஜி.
1day ago
16 / 40
எச்சரிக்கை: 32 வது தேசிய சாலை பாதுகாப்பு மாத விழாவையொட்டி தேனி போக்குவரத்து போலீசார் சார்பில் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ஹெல்மெட் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளை எமதர்ம ராஜா வேடமணிந்த நபர் எச்சரித்து அறிவுரை வழங்கினார், இடமிருந்து, இன்ஸ்பெக்டர் ராமலட்சுமி, முகமது மீரா, போக்குவரத்து இன்ஸ்பெக்டர் செந்தில்குமார்.
1day ago
17 / 40
திருப்பூர், முருகம்பாளையத்தில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற கோரி கலெக்டரிடம் மனுக்கொடுக்க வந்தனர்.
1day ago
18 / 40
ஓமந்தூரார் அரசு மருத்துவ கல்லூரியில் முதல் நாள் கல்லூரிக்கு வந்த முதலாம் ஆண்டு மாணவியருக்கு மூத்த மாணவியர் பூ கொடுத்து வரவேற்றனர்.இடம்: சேப்பாக்கம், சென்னை.
1day ago
19 / 40
திருப்பூர் ஆவின் மற்றும் கனரா வங்கியின் சார்பில் வேளாண் கடன் வழங்கும் சிறப்பு முகாம் தாராபுரம் ரோட்டில் உள்ள அலுவலகத்தில் நடந்தது.
1day ago
20 / 40
இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்ட சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ். உடன் கட்சிப் பிரமுகர்கள்.
1day ago
21 / 40
பழநி அருகே கோதைமங்கலம் குளம் நிறைந்து மறுகால் செல்லும் தண்ணீர் அருவி போல் சென்றது.
1day ago
22 / 40
மதுரை தெற்கு வெளி வீதி காஜா தெருவில் உள்ள வீடு இடிந்தது
1day ago
23 / 40
திண்டுக்கல் குடகனாற்றில் கழிவு நீர் கலப்பதை தடுக்க தவறிய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தை கண்டித்து குடகனாறு பாதுகாப்பு சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
1day ago
24 / 40
திண்டுக்கல் மாவட்ட ஏழு சட்டசபை தொகுதி வரைவு வாக்காளர் பட்டியலை கலெக்டர் விஜயலட்சுமி வெளியிட்டார்.
1day ago
25 / 40
மதுரை மாரியம்மன் தெப்பக்குளத்திற்கு வைகை ஆற்றில் இருந்து ஐந்தாவது முறையாக தண்ணீர் திறக்கப்பட்டது.
1day ago
26 / 40
விருத்தாசலம் அடுத்த கவனை அரசு துவக்கப் பள்ளிக்கு, புதிய கட்டடம் கட்டித் தரக்கோரி, கிராம மக்கள் சார் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
1day ago
27 / 40
திருச்சி மாவட்டம் சூரியூரில் நடந்த ஜல்லிக்கட்டில் தன்னை அடக்க வந்த மாடுபிடி வீரர் விரட்டிய காளை.
1day ago
28 / 40
திருப்பூர், காங்கயம் ரோடு டி.எஸ்.கே.,வில் அ.தி.மு.க., மாநகர் மாவட்ட அலுவலக அமைச்சர் வேலுமணி திறந்து வைத்தார்.அருகில், மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன்.
1day ago
29 / 40
ஊட்டி செசன்ஸ் கோர்ட்டிற்கு, கோடநாடு எஸ்டேட் வழக்கிற்காக சயான் மற்றும் வாளையார் மனோஜை போலீசார் அழைத்து வந்தனர்.
1day ago
30 / 40
கொரோனா காலங்களில் பள்ளிகள் திறக்கப்படாததால் மதில் சுவர்களில் சினிமா போஸ்டர்கள் மற்றும் கட்சி போஸ்டர்கள் ஒட்டி அசிங்கப்படுத்தியிருந்தனர் தற்போது பள்ளிகள் திறக்கப்பட்ட பின் மதில் சுவரில் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகளை கிழித்தெறிந்து மாணவர்களின் விழிப்புணர்வு ஓவியம்வரையப்பட்டுள்ளன. இடம் : பல்லாவரம் மறைமலை அடிகள் பள்ளி .
1day ago
31 / 40
சென்னை புறநகர் மற்றும் செங்கல்பட்டு , காஞ்சிபுரம் பகுதிகளில் நடை பெறும் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வரும் முதல்வர் இ.பி.எஸ்., செல்லும் பாதை முழுவதும் உள்ள மேம்பாலங்களில் வர்ணம் பூசும் பணி நடந்து வருகிறது. இடம் : பல்லாவரம் - துரைப்பாக்கம் ரேடியல் சாலை மேம்பாலம் .
1day ago
32 / 40
சென்னையில் குடியரசு தின விழாவிற்கான ஒத்திகை காமராஜர் சாலையில் நடந்தது. இதில் இருசக்கர வாகனத்தில் சாகசங்கள் செய்து காட்டிய போலீசார்.
1day ago
33 / 40
திருச்சி மாவட்டம் சூரியூரில் நடந்த ஜல்லிக்கட்டில் வாடிவாசலில் இருந்து சீரிய காளையை அடக்கிய வீரர்.
1day ago
34 / 40
திண்டிவனம் வட்டார போக்குவரத்து துறை சார்பில் ஹெல்மெட் விழிப்புணர்வு மற்றும் சாலை விதிகளை கடைப்பிடிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி, நேரு வீதியில் நடந்தது. அருகில் டி.எஸ்.பி., கணேசன்.
1day ago
35 / 40
கோவை சித்ராவின் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களை இறுதியாண்டு மாணவ மாணவிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
1day ago
36 / 40
கோவை சித்ராவின் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களை இறுதியாண்டு மாணவ மாணவிகள் மற்றும் அரசு மருத்துவமனை டீன் காளிதாஸ் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
1day ago
37 / 40
மதுரை மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியலை கலெக்டர் அன்பழகன் வெளியிட்டார்.
1day ago
38 / 40
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சட்டமன்ற தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை கலெக்டர் அண்ணாதுரை வெளியிட்டார்.
1day ago
39 / 40
மதுரை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த இறுதி வாக்காளர் பட்டியல் நிகழ்ச்சிக்கு முறையான அழைப்பு இல்லை எனக்கூறி வெளிநடப்பு செய்த எதிர்கட்சியினர் .
1day ago
40 / 40
ஊட்டி எச்.ஏ.டி.பி.,மைதானத்தில், சர்வதே தடகள போட்டிகளில் பங்கேற்கும் விளையாட்டு விரர்கள் பயிற்சி ஈடுபட்டு வருகின்றனர்.
Advertisement