தமிழகத்தின் கண்ணாடி

13 Apr 2021
1day ago
1 / 40
விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் கம்பிகள் வெளியே தெரிவதால் நடந்து செல்லும் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்
1day ago
2 / 40
ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் , சுற்றுலா பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பூங்கா ஊழியர்கள் பதாகைகள் பிடித்து நிற்கின்றனர்.
1day ago
3 / 40
யுகாதி பண்டிகையையொட்டி உடுமலை திருப்பதி வேங்கடேசபெருமாள் கோவில் வளாகத்தில் ரேணுகாதேவிஅம்மன் திருக்கல்யாணம் நடந்தது.
1day ago
4 / 40
விருதுநகர் அருகே மெட்டுக்குண்டு பகுதியில் பூத்துக் குலுங்கும் செண்டு பூக்கள்.
1day ago
5 / 40
சென்னை சென்ட்ரல் பூந்தமல்லி சாலையில் நெடுஞ்சாலைதுறை சார்பில் பெயர் மாற்றம் செய்யப்பட்ட பெயர்ப்பலகை அடிக்கப்பட்டுள்ளது.
1day ago
6 / 40
சென்னை எழும்பூர் ரயில்வே பாதுகாப்புப்படையினர் கொரோனா வைரஸ் போன்று வேடம் அணிந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்.இடம்.எழும்பூர் ரயில் நிலையம்.
1day ago
7 / 40
புதுச்சேரி அடுத்த நோனாங்குப்பம் படகு குழாமில் சுற்றுலாபயணிகள் படகில் செல்லும் போது லைப் ஜாக்கெட் அணியாமல் பயணம் செய்கின்றனர்.
1day ago
8 / 40
புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் கேமரா அமைக்கும் இடங்களை சட்டப்பேரவை செயலர் முனுசாமி பார்வையிட்டார்.
1day ago
9 / 40
மழை பெய்வதற்காக மலை மீது திரண்டு காணப்படும் கருமேகக்கூட்டம். இடம்: உடுமலை தேவனூர்புதூர்.
1day ago
10 / 40
உடுமலை ஆண்டியூர் நல்லாற்றில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள மணல் குவாரி.
1day ago
11 / 40
கொரோனா தொற்றுநோய் காரணமாக வெளியூர் செல்லும் பயணிகள் ஆர்வம் காட்டாததால் பேருந்துகள் இன்றி வெறிச்சோடி காணப்படும் பெருங்களத்தூர் பேருந்து நிலையம்
1day ago
12 / 40
கள்ளக்குறிச்சி 4 ரோடு சந்திப்பில் நகராட்சி சார்பில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக மாஸ்க் அணியாதவர்களுக்கு 200 ரூபாய் அபராதம் விதித்தனர்.
1day ago
13 / 40
பெருங்களத்தூர்- செட்டிப்புண்ணியம் வரை ஜி.எஸ்.டி சாலையை எட்டு வழி சாலையாக அகலப்படுத்தும் பணியை ஒட்டி முதற்கட்டமாக மழைநீர் வடிகால் கால்வாய் பணி ஜரூராக நடைபெற்று வருகிறது. இடம்: பொத்தேரி
1day ago
14 / 40
விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கலைக் கல்லூரி வாக்கு என்னும் மையத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை திட்டக்குடி தொகுதி தி.மு.க., வேட்பாளர் கணேசன் பார்வையிட்டார்.
1day ago
15 / 40
பச்சை பசேலென்று காட்சியளிக்கும் நெல் வயல்கள். இடம் : திருக்கனூர்.
1day ago
16 / 40
திருக்கனூர் அடுத்த பாவேந்தர் பாரதிதாசன் அரசு மேல்நிலைப்பள்ளியில் கொரோனா தடுப்பு ஊசி சிறப்பு முகாமில் பொதுமக்கள் ஆர்வமுடன் பங்கேற்று ஊசி போட்டுக் கொண்டனர். இடம் : பிஎஸ் பாளையம்.
1day ago
17 / 40
முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூபாய் 200 அபராதம் விதிக்கப்பட்டது. இடம்: தேனி பழைய பஸ் ஸ்டாண்ட்.
1day ago
18 / 40
கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் மீன் வாங்கும் கூட்டத்தின் ஒரு பகுதி. இடம்: மீன்பிடி துறைமுகம் கடலூர் முதுநகர்.
1day ago
19 / 40
சித்திரை மாதத்தை வரவேற்கும் விதமாக திண்டுக்கல் ராம்நகரில் பூத்துக்குலுங்கும் சரக்கொன்றை பூக்கள்.
1day ago
20 / 40
தேனி மாவட்ட தென்னை உற்பத்தியாளர்கள் கம்பெனி சார்பில் நீரா பானம் விற்பனை செய்யபடுகிறது. இடம்: வாரச்சந்தை எதிரே, பெரியகுளம் ரோடு.
1day ago
21 / 40
கொரோனா தடுப்பு வழி முறைகளை குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நகராட்சி ஊழியர்கள் ஒலிப்பெருக்கி மூலம் அறிவுரை வழங்கினர். இடம்: தேனி பழைய பஸ் ஸ்டாண்ட்.
1day ago
22 / 40
புதுச்சேரி - விழுப்புரம் சாலையில் மதகடிப்பட்டு வாரச்சந்தையில் சமூக இடைவெளியின்றி பொருட்கள் வாங்கும் மக்கள்.
1day ago
23 / 40
கோவை பேரூரில் தெரு நாய்களுக்கு உணவிடும் மூதாட்டி கவுரி.
1day ago
24 / 40
திருக்கனூர் - மதகடிப்பட்டு செல்லும் சாலையில் வாழைத் தோட்டத்தில் ஊடு பயிராக மணிலா பயிரிடப்பட்டுள்ளன. இடம் : சோம்பட்டு
1day ago
25 / 40
பழநி-உடுமலை ரோடு அருகே கண்ணுக்கு எட்டிய தூரம் பொன்நிறமாக காட்சியளிக்கும் நெல்வயல்.
1day ago
26 / 40
இருபது ஆண்டு பழமையான திண்டிவனம் மேம்பாலத்தில், சேதமடைந்த பகுதிகளை மாநில நெடுஞ்சாலை துறை சாலை ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி முன்னிலையில் அளவீடு செய்யும் தனியார் ஒப்பந்த தொழிலாளர்கள்.
1day ago
27 / 40
அரக்கோண்ம் அருகே நடந்த இரட்டை கொலை சம்பவம் தொடர்பாக உண்மை கண்டறியும் குழு அறிக்கையை இந்திய பெண் சிந்தனையாளர் , களம் அமைப்பின் தலைவர் சிவகாமி வெளியிட்டு பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தார். உடன் ( வலது ) வழக்கறிஞர் ரஜினி , ( இடது ) மனித உரிமை செயல்பாட்டாளர் கல்பனா சதீஸ் உள்ளனர் .இடம் : சேப்பாக்கம் .
1day ago
28 / 40
தமிழ் புத்தாண்டை வரவேற்கும் விதமாக பெய்த கோடை மழை. இடம்: உடுமலை
1day ago
29 / 40
திருப்பூர் காலேஜ் ரோடு ஆறாவது வீதியில் சாக்கடை கட்டுமான பணிக்காக குழிகள் தோண்டப்பட்டு மூன்று மாதங்களாக, பணிகள் மந்தமாக நடந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் வீடுகளுக்கு உள்ளே செல்வதே பிரச்சனையாக மாறியுள்ளது.
1day ago
30 / 40
கொரோனா வைரஸ் அதிகரித்து வருவதால் திருவள்ளூர் தேரடியில் நகராட்சி அதிகாரிகள் , முக கவசம் அணியாமல் வருபவர்களிடம் அபராதம் வசூலிக்கின்றனர்.
1day ago
31 / 40
மதுரை ரைபிள் கிளப்பில் பயிற்சி பெறும் வீரர், வீராங்கனைகள்.
1day ago
32 / 40
ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் , சுற்றுலா பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பூங்கா ஊழியர்ள் பதாகைகள் பிடித்து நிற்கின்றனர்.
1day ago
33 / 40
மதுரை சேதுபதி பள்ளியில் நடந்த தேசிய மக்கள் தொடர்பு இயக்கத் தொடக்க விழாவில் சுதேசி விழிப்புணர்வு இயக்க அகில பாரத அமைப்பாளர் சுந்தரம் பேசினார். இடமிருந்து பள்ளித் தலைமையாசிரியர் ரவி, பாரதிய கிசான் சங்க மாநில பொதுச் செயலாளர் பார்த்தசாரதி, ஆர்.எஸ்.எஸ்., மாவட்ட தலைவர் சந்திரன்.
1day ago
34 / 40
தமிழ் புத்தாண்டையொட்டி புதுச்சேரி பாரதி வீதி பூக்கடையில் பூ விற்பனை ஜோராக நடந்தது.
1day ago
35 / 40
கொரான தொற்று அதிகரித்து வந்த நிலையில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் மீன் வாங்கும் கூட்டத்தின் ஒரு பகுதி. இடம்; மீன்பிடி துறைமுகம் கடலூர் முதுநகர்.
1day ago
36 / 40
விழுப்புரம் வண்டிமேடுஅருகே அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது.
1day ago
37 / 40
கோவை சிங்காநல்லூர் ரயில்வே ஸ்டேஷனில் ஜாலியன்வாலாபாக் சுதந்திர போராட்டத்தின் நினைவாக (4) பட்டாலியன் (என்சிசி) தேசிய மாணவர் படை மாணவ மாணவியர் சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டு மறைந்த தியாகிகளுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
1day ago
38 / 40
மாஸ்க் எங்கே ?: ஒரு சிலர் மட்டுமே முகக்கவசத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்துள்ளதால்மேலும் அதிகரித்து வரும் கொரோனா தொற்று. இடம்- கொருக்குப்பேட்டை.
1day ago
39 / 40
விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், முகக்கவசம் இல்லாமல் வேனில் பயணம் செய்தவர்களை நான்கு முனை சிக்னலில் போக்குவரத்து போலீசார் இறக்கி கட்டாயமாக முகக்கவசம் அணிந்து பாதுகாப்பாக செல்லுமாறு அறிவுறுத்தி முகக்கவசங்களை வழங்கினர்.
1day ago
40 / 40
இது போல் ஜொலிக்கும் வாழ்க்கை நமக்கு தேவையென்றால் சற்று கவனம் இன்றைய நிலவரபடி நமக்கு அவசியம் தேவை. இடம்: கோவை, வாலாங்குளம்
Advertisement