தமிழகத்தின் கண்ணாடி

11 Apr 2021
1day ago
1 / 40
பூத்துக்குலுங்கும் பஞ்சுகள் :- கோடை வெயிலின் உச்சத்தில் பஞ்சு மரத்தில் உள்ள பஞ்சுகள் வெடிச்சி வெண்ணிறத்தில் பூத்துக் குலுங்கும் பூக்கள். இடம் : புதுச்சேரி ஈசிஆர் சாலை பாலாஜி நகர் அருகே.
1day ago
2 / 40
தமிழகத்தில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில், விழுப்புரம் பழைய பஸ் நிலையம் அருகேவுள்ள பூந்தோட்டம் குளம் பூங்காவில் பெற்றோர்கள், சிறுவர்களை அழைத்து வந்து கொரோனா அச்சமின்றி விளையாடுகின்றனர்.
1day ago
3 / 40
விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து வெளியே செல்லும் நெடுஞ்சாலை ஓரத்தில் ஷேர் ஆட்டோக்களை வரிசையாக நிறுத்தி உள்ளதால் பஸ்கள் செல்ல முடியாமல் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.
1day ago
4 / 40
விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் எதிரில் முக கவசம் அணியாதவர்கள் மீது போக்குவரத்து போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்
1day ago
5 / 40
கொரோனா நோய் தொற்று அச்சம் மனிதர்களுக்கு மட்டும் தான் எங்களுக்கு இல்லை என மகிழ்ச்சியாக கொளுத்தும் வெயிலில் குளத்தில் கும்மாளம் போடும் குரங்குகள். இடம்: கிரவலப்பாதை, திருவண்ணாமலை,
1day ago
6 / 40
கொரோனா அச்சத்தில் அதிகளவு பக்தர்கள் வராததால் வெறிச்சோடி காணப்பட்ட அருணாசலேஸ்வரர் கோவில். இடம்: திருவண்ணாமலை.
1day ago
7 / 40
கடலூர் ஜவான் பவன் கம்மியப்பேட்டை இணைப்பு சாலை வளைவில் தடுப்பு கட்டை இல்லாததால் இரவு நேரங்களில் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
1day ago
8 / 40
திருப்பூரில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் வடமாநில தொழிலாளர்கள் அதிகளவு பேர், சொந்த ஊருக்கு திரும்பி வருகின்றனர். திருப்பூர் ரயில்வே ஸ்டேஷனில் காத்திருந்த தொழிலாளர்கள்.
1day ago
9 / 40
ஏரிகளின் நீர்மட்டம் வெயிலின் காரணமாக குறைந்து வருவதால் ஒரே இடத்தில் மீன் அதிகமாக கிடைக்கிறது அதனால் கூட்டம் கூட்டமாக இறையை தேடும் பறவைகள். இடம்: பல்லாவரம் ஏரி.
1day ago
10 / 40
கொரோனா எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் விடுமுறை தினங்களில், கோவிலுக்கு வந்த பக்தர்கள் சிலர் முக கவசம் அணியாமல் அலட்சியமாக சுற்றி வந்தனர். இடம்: அருணாசலேஸ்வரர் கோவில், திருவண்ணாமலை.
1day ago
11 / 40
திருப்பூரில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் வடமாநில தொழிலாளர்கள் அதிகளவு பேர், சொந்த ஊருக்கு திரும்பி வருகின்றனர். திருப்பூர் ரயில்வே ஸ்டேஷனுக்கு கம்பெனி வாகனத்திலேயே வந்திறங்கிய தொழிலாளர்கள்.
1day ago
12 / 40
கோவை போத்தனூர் அருகே இந்து முன்னணி நிர்வாகி தாக்கப்பட்டதை கண்டித்து கலெக்டர் அலுவலகம் முன்பு இந்து முன்னணியினர் முற்றுகையிட்டனர் பின்பு போலீஸ் கமிஷனர் அலுவலத்தில் குற்றவாளியை கைது செய்யுமாறு மனு கொடுத்தனர்.
1day ago
13 / 40
கோவை 'கொடிசியா' இ -அரங்கத்தில் தொழிலாளர்களுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
1day ago
14 / 40
நகராட்சியால் பராமரிக்கப்பட்டு வரும் தாம்பரம் பழைய குளம் பாசி படிந்து பராமரிப்பின்றி காணப்படுகின்றன. குளத்து நீரை சுத்திகரிப்பு செய்யும் மோட்டார் இயங்காமல் அப்படியே கிடக்கின்றன. இடம். முடிச்சூர் சாலை, மேற்கு தாம்பரம்.
1day ago
15 / 40
மதுரை மாடக்குளம் கண்மாயை சீர்செய்யும் நீர்ப்பாசன குழுவினர்.
1day ago
16 / 40
சிங்காநல்லுாரில் தியாகி என்.ஜி.ஆர். மஹாலில் நடந்த என்.ஜி. ராமசாமியின், 110வது ஆண்டு பிறந்த நாள் விழாவில் கவிஞர் கவிதாசன் பேசினார்.
1day ago
17 / 40
எதிர்நீச்சல்: மதுரை மாடக்குளம் கண்மாயில் ஆட்டுக் கிடாகளுக்கு நீச்சல் பயிற்சி அளிக்கும் இளைஞர்கள்.
1day ago
18 / 40
அழகு மலராட அழகாய் கூட செண்டுமல்லி பூக்களின் கூட்டத்தினை கண்ட இடம்: கோவை நரசீபுரம்.
1day ago
19 / 40
கிண்டி கத்திபாரா மேம்பாலத்தின் கீழ் உள்ள காலியிடங்களில் சென்னை மெட்ரோ ரயில்வே நிர்வாகம் சார்பில் வணிக வளாகங்கள் , மற்றும் பூங்கா கட்டுமானப்பணி நடந்து வருகிறது . இடம் கிண்டி
1day ago
20 / 40
கொரோனா பரவல் அச்சமில்லாமல் தாம்பரம் சண்முகம் சாலை மார்க்கெட் பகுதியில் குவிந்த கூட்டம். இடம்: மேற்கு தாம்பரம்
1day ago
21 / 40
பல்லாவரம் நகராட்சி சார்பில் தனியார் நிறுவன ஊழியர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. இடம். குரோம்பேட்டை .
1day ago
22 / 40
திருப்பூர் ரயில்வே ஸ்டேசனில் சமூக இடைவெளியின்றி ரயிலில் ஏறும் பொதுமக்கள்.
1day ago
23 / 40
சென்னையில் கொரோனா எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் விடுமுறை தினங்களில் கடற்கரையில் பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் வெறிச்சோடி காணப்பட்ட கடற்கரை...இடம் : எலியட்ஸ் கடற்கரை, பெசன்ட் நகர்
1day ago
24 / 40
உடுமலை கல்வியாளர்கள் மற்றும் படைப்பாளர்கள் சார்பில். நடந்த பாராட்டு விழாவில் எழுத்தாளர் சுப்ரபாரதிமணியனுக்கு சென்னை பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் பொன்னுசாமி பரிசு தொகையையும் கேடயத்தையும் வழங்கினார்.
1day ago
25 / 40
விருத்தாசலத்தில் கொரோனா வார்டாக மாற்றப்பட உள்ள அரசு கல்லூரி மாணவியர் விடுதி
1day ago
26 / 40
திருப்பூர், முதலிபாளையம் நிப்ட்-டீ கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான நுழைவு தேர்வு நடந்தது.
1day ago
27 / 40
புதுச்சேரி பாக்கமுடையான்பட்டு அரசு ஆரம்பப் பள்ளியில் கொரோனா தடுப்பூசி திருவிழா முகாமில் தடுப்பூசி போட வந்தவர்களிடம் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் நலம் விசாரித்தார்.
1day ago
28 / 40
சென்னை, வண்ணாரப்பேட்டையில் காங்கிரஸ் தலைவர் அழகிரி பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில் முக கவசம் அணியாமல் அலட்சியமாக இருந்த காங்கிரஸ் பெண் தொண்டர்கள்.
1day ago
29 / 40
கொரோனா தொற்று அதிகமாக பரவுவதால் சென்னை, கொருக்குப்பேட்டையில் கபசுர குடிநீர் மற்றும் மாஸ்க் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்திய பா.ஜ. கட்சியினர். இடம்- கார்ணேசன் நகர்.
1day ago
30 / 40
சோழவரம் அருகே குதிரைப்பாளையம் கிராமத்தில் மல்லிகை தோட்டத்தில் பூ பறிக்கும் பெண்கள்
1day ago
31 / 40
திருப்பூர், ஊத்துகுளி ரோடு மூழிக் குளத்தின் கரையை பலப்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது.
1day ago
32 / 40
புதுச்சேரி குயவர்பாளையம் மணிமேகலை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கொரோனா தடுப்பூசி திருவிழா முகாமில் மக்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.
1day ago
33 / 40
புதுச்சேரி பாக்கமுடையான்பட்டு அரசு ஆரம்பப் பள்ளியில் கொரோனா தடுப்பூசி திருவிழாவில் தடுப்பூசி போட்டுக்கொள்ள வரிசையில் அமர்ந்திருந்த மக்கள்.
1day ago
34 / 40
பங்குனி அமாவாசையையொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்தம் கடலில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடினார்கள்.
1day ago
35 / 40
ஊட்டி கமர்ஷியல் சாலையில், முக கவசம் அணியாமல் வருபவர்களுக்கு போலீசார் அபராதம் விதித்தனர்.
1day ago
36 / 40
கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் மெரினா கடற்கரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து வெறிச்சோடி காணப்பட்டது.
1day ago
37 / 40
சென்னையில் கொரோனா எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் விடுமுறை தினங்களில் கடற்கரையில் பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டதால் வெறிச்சோடி காணப்பட்ட கடற்கரை. இடம்: எலியட்ஸ் கடற்கரை, பெசன்ட் நகர்.
1day ago
38 / 40
கொரோனா அதிகரித்து வரும் நிலையில், முககவசம் அணிந்து செல்லும் பெண்கள். இடம்; உடுமலை.
1day ago
39 / 40
மீன்பிடி தடைக்காலம்: தமிழகத்தில் வரும் வியாழக்கிழமை முதல் மீன்பிடி தடைக்காலம் துவங்குவதால், இந்த ஞாயிற்றுக்கிழமையே மீன்களை வாங்க குவிந்த பொதுமக்கள். இடம்; காசிமேடு.
1day ago
40 / 40
மாலை நேர வெளிச்சத்தில், மின்மினிப் பூச்சி போல் ஜொலிக்கும் நீரின் மத்தியில் இறை தேடி காத்திருக்கும் இந்த நீர் காகத்தை சேர்ந்து பார்த்தால் ஓவியம் போல் தோன்றுகிறது. இடம்: கோவை வெள்ளலூர் குளம்.
Advertisement