தமிழகத்தின் கண்ணாடி

17 May 2021
6hours ago
1 / 15
இனி தடுப்பூசி என்னைக்கு கிடைக்குமோ எதிர்பார்ப்பில் முதியவர். இடம் - கோவை அரசு கலைக்கல்லூரி
6hours ago
2 / 15
ஊரடங்கு உத்தரவை மீறி வெளியே வந்தவர்களை போலீசார் எச்சரித்தும் அபராதம் விதித்தும் அறிவுறுத்தியும் அனுப்பினர். இடம் : கோவை ஹோப் காலேஜ் ரோடு
6hours ago
3 / 15
கோவை அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பஸ் மூலம் கொரோனா தொற்றுள்ள நோயாளிகளுக்கு ஆக்சிஜன் வழங்கப்பட்டன.
6hours ago
4 / 15
கொரோனா விழிப்புணர்வு குறித்தும் சமுக இடைவெளி பின்பற்ற வலியுறுத்தி, அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்வது அவசியம் குறித்தும் சைக்கிள் பிரசாரம் செய்த சமுக ஆர்வலர் ராமசுப்பரமணியன் சைக்கிள் பிரசாரத்தில் ஈடுபட்டார். இடம் : புதுச்சேரி நேரு வீதி
8hours ago
5 / 15
தமிழகத்தில் இப்பதிவு முறை நடைமுறைக்கு வந்ததை தொடர்ந்து கடலூர் கங்கணங்குப்பத்தில் போலீசார் பரிசோதனை செய்தனர்.
9hours ago
6 / 15
தமிழக முதல்வர் ஸ்டாலினை சந்தித்து நடிகர் ரஜினி கொரோனா தடுப்பு முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சம் வழங்கினார்.
11hours ago
7 / 15
சென்னை ஓட்டேரியில் உள்ள மாநகராட்சியின் மண்டல அலுவலகத்தில் நடந்த கொரோனா தடுப்பூசி முகாமை, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பார்வையிட்டு, தடுப்பூசி போட வந்த பொதுமக்களிடம் பேசினார்.
11hours ago
8 / 15
இ-பதிவு இருந்தால் மட்டுமே வாகனங்கள் அனுமதி. இடம்: திருப்பூர் மாவட்ட எல்லை பகுதியான நரியம்பள்ளி.
12hours ago
9 / 15
சென்னை ஓட்டேரியில் உள்ள மாநகராட்சியின் மண்டல அலுவலகத்தில் நடந்த கொரோனா தடுப்பூசி முகாமை, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பார்வையிட்டார். உடன் மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி, தயாநிதி மாறன் எம்.பி., மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு.
14hours ago
10 / 15
காலை 10 மணி வரை கடைகள் திறந்திருக்கும் என்பதால் திருப்பூர் தென்னம்பாளையம் மார்கெட்டில் குவிந்த மக்கள். சமூக இடைவெளி என்னாச்சு ?
15hours ago
11 / 15
எங்கோ செல்லும் இந்த பாதை !: முழு ஊரடங்கு ஒருபுறம், வேலைக்குச் செல்ல முடியாத நிலை மறுபுறம் தினக்கூலி வேலைக்குச் செல்லும் மக்களின் நிலையோ பரிதாபம். தனது மகளோடு உணவுக்கான தேடுதலை எடுத்துக் கொண்டு தண்ணீர் குடத்தை சுமந்து வரும் பெண்; இடம்; சிதம்பரம் அடுத்த மேட்டுப்பாளையம்.
21hours ago
12 / 15
முழு ஊரடங்கில் விதிகளை மீறி செல்லும் வாகன ஓட்டிகளில் .இடம்: சிவகங்கை-மேலூர் ரோடு.
21hours ago
13 / 15
முழு ஊரடங்கு ஆன நேற்று மேட்டுப்பாளையம் பஸ் நிலையத்தில் உணவில்லாமல் தவிப்பவர்களுக்கு காரமடையில் உள்ள தன்னார்வலர்கள் சாப்பாடு பொட்டலங்களை வழங்கினர்.
14 / 15
பாசனத்திற்காக உடுமலை அமராவதிஅணையிலிருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீர் அமராவதி ஆற்றில் செல்கிறது.
23hours ago
15 / 15
சாரல் மழையில் நனைந்த நெல் வயல்வெளிகள் பச்சை பசேலன காணப்படுகிறது. இடம்.உடுமலை அமராவதிநகர்.
Advertisement