தமிழகத்தின் கண்ணாடி

09 May 2021
1hours ago
1 / 12
முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து திருப்பூர் தென்னம்பாளையம் மார்கெட்டில் பொருட்கள் வாங்க அதிகளவு பேர் வந்ததால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.
1hours ago
2 / 12
கூடுதல் அரசு போக்குவரத்து கழக பஸ்கள் இயக்கப்பட்டாலும் பயணிகள் இல்லாமல் வெறிச்சோடிய கிடந்த மதுரை மாட்டு தாவணி பஸ் ஸ்டாண்டு.
30mins ago
3 / 12
தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு வருவதால் சென்னை, சைதாப்பேட்டை மார்க்கெட் பகுதியில் பொருட்கள் மற்றும் இறைச்சி வாங்க குவிந்த பொதுமக்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
3hours ago
4 / 12
புதுச்சேரி சட்டப்பேரவைக்கு முதல்வர் ரங்கசாமி வருகை தந்தார்.
3hours ago
5 / 12
த.மா.கா., துணைத்தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.,வுமான கோவைதங்கம் தேர்தலுக்கு முன் த.மா.கா., விலிருந்து விலகி தி.மு.க., வில் இணைந்தார். அவர் முதல்வர் ஸ்டாலினை சந்தித்தார்,
4hours ago
6 / 12
புதுச்சேரி அடுத்த சுல்தான்பேட்டை பகுதியில் இறைச்சி கடையில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
4hours ago
7 / 12
முழு ஊரடங்கு அறிவித்ததால் திருப்பூரில் இருந்து சொந்த ஊருக்கு கிளம்பி சென்ற பொதுமக்கள். இடம்: பழைய பஸ்ஸ்டாண்ட்.
8hours ago
8 / 12
நாளை முதல் தமிழகம் முழுவதும் தமிழக அரசு முழு ஊரடங்கு அறிவித்த நிலையில் கடலூர் முதுநகர் மீன் மார்க்கெட்டில் மீன் வாங்க குவிந்த கூட்டத்தின் ஒரு பகுதி.
8hours ago
9 / 12
நாளை முதல் முழு ஊரடங்கு என்பதால் உடுமலை செங்குளத்தில் மீன்கள் வாங்க நிற்கும் மக்கள் கூட்டம்.
10hours ago
10 / 12
கொடைக்கானல் ரோஜா பூங்காவில் பூத்துள்ள ரோஜா.
14hours ago
11 / 12
மதுரையில் கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் முகக் கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை பின்பற்றாமலும் இருந்தால் பரவலுக்கு வழிவகுக்கும் அல்லவா . இடம்: சிம்மக்கல்.
15hours ago
12 / 12
திடீரென்று முழு ஊரடங்கு உத்தரவு அரசு அறிவித்ததால் சென்னை புறநகர் பகுதிகளில் வசிக்கும் தென் மாவட்டங்களை சேர்ந்த கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் சொந்த ஊருக்கு செல்வதற்கு கூட்டம் கூட்டமாக பேருந்து நிலையத்திற்கு குவிந்தனர், இதனால் தனியார் பேருந்துகள் திருச்சி மற்றும் மதுரைக்கு 1000 -1500 என்று வசூலித்தனர் இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இடம். பெருங்களத்தூர், தாம்பரம்.
Advertisement