தமிழகத்தின் கண்ணாடி

30 Jul 2021
12sec ago
1 / 28
கடலூர் முதுநகர் மீன்பிடித் துறைமுகத்தில் விசைப்படகு மீனவர்கள் அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு புதிய இயந்திரத்தை மாற்றி அமைத்தனர்.
11sec ago
2 / 28
பூண்டு விற்பனை செய்யும் நேரத்தில் கூட அழும் தன் குழந்தையை தாலாட்டும் தாய். இடம்:விருதுநகர்.
33sec ago
3 / 28
மதுரை ஆயுதப்படை மைதானத்தில் நடந்த போலீஸ் உடற்தகுதி தேர்வில் உயரம் தாண்டுதல் போட்டியில் திறமையை வெளிப்படுத்திய வீரர்.
16sec ago
4 / 28
தஞ்சாவூர் பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியில், போக்குவரத்துக்கு இடையூறாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள கடைகளை அகற்ற விடாமல், மாநகராட்சி கமிஷனர் சரவணகுமாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட திமுகவினர்.
17sec ago
5 / 28
கோவை உக்கடம் ஜி.எம்., நகர் பகுதியில் உள்ள டான் போஸ்கோ அன்பு இல்லத்தில், உலக மனித கடத்தலுக்கு எதிரான தினத்தையொட்டி மனித கடத்தல் தடுப்பு குறித்த விழிப்புணர்வு போஸ்டரை (இடமிருந்து) டான் பாஸ்கோ அன்பு இல்லம் இயக்குனர் செல்வதுரை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சேரன், மாநகர கூடுதல் போலீஸ் துணை கமிஷனர் சிலம்பரசன், சிவா டிரஸ்ட் இயக்குனர் சுப்பிரமணியசிவா, குழந்தைகள் உழைப்பு எதிர்ப்பு பிரச்சாரம் அமைப்பின் உறுப்பினர் பிரபாகர், மாவட்ட அமைப்பாளர் பழனிசாமி ஆகியோர் இணைந்து வெளியிட்டனர்.
26sec ago
6 / 28
இரண்டு மாத சம்பளத்தை வழங்க கோரி மதுரை மாநகராட்சி அலுவலகம் முன் பாதாளசாக்கடை பிரிவு பணியாளர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
1hours ago
7 / 28
சென்னை அரும்பாக்கம் பகுதியில் உள்ள, கூவம் ஆற்றங்கரையோரம் உள்ள ஆக்கிரமிப்பு வீடுகளை மாநகராட்சியினர் அகற்றினர்...
1hours ago
8 / 28
திருப்பூர், அம்மாபாளையம் போலீஸ் சோதனை சாவடியில் கண்காணிப்பு கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது.
1hours ago
9 / 28
புதுச்சேரி பாண்லேவில் உற்பத்தித் திறனை அதிகரிக்க தேசிய பால்வள வாரியத்துடன் தொழில்நுட்ப மற்றும் கட்டுமான ஒப்பந்தம் முதல்வர் ரங்கசாமி முன்னிலையில் கையெழுத்தானது.
46mins ago
10 / 28
ஆடி மாதம் 2வது வெள்ளிக்கிழமையையொட்டி வீரபாண்டி கவுமாரியம்மன் கோயிலில் பக்தர்களுக்கு கூழ் வழங்கப்பட்டது.
1hours ago
11 / 28
காரைக்குடி அழகப்பா பல்கலை., முன்பு ஏ.ஐ.டி.யூ.சி., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
1hours ago
12 / 28
ராமநாதபுரம் உத்தரகோசமங்கை அருகே ஆணைக்குடி பகுதியில் உப்பளத்தில் குவிந்துள்ள உப்பு.
1hours ago
13 / 28
திருவள்ளூர் வேம்புலி அம்மன் கோயிலில் ஆடி வெள்ளியை முன்னிட்டு நெய் விளக்கு ஏற்றிய பக்தர்கள்
1hours ago
14 / 28
புதுச்சேரி கடலூர் சாலையில் சிங்காரவேலர் சிலை அருகில் உள்ள தியாகிகள் நினைவிடத்தில் ஏஐடியுசி, சிஐடியு தொழிற்சங்கத்தினர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி பேசினார்.
1hours ago
15 / 28
சென்னை கோயம்பேடு மார்கெட்டில் உள்ள கடைகளில் போலீசார் சோதனை மேற்கொண்டு, தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
1hours ago
16 / 28
நாடோடிகள்: வயிற்றுப் பிழைப்புக்காக ஏராளமான கழுதைகளுடன் ஊர் ஊராகச் சென்று, கழுதைப்பால் ஒரு பாலாடை 100 ரூபாய்க்கு விற்பனை செய்யும் நாடோடிகள்
2hours ago
17 / 28
நீலகிரி மாவட்டம், வெலிங்டன் ராணுவ மையத்தில் நடந்த சத்தியப் பிரமாண நிகழ்ச்சியில், சிறந்த முறையில் பயிற்சி முடித்த இளம் வீரர்களுக்கு, மைய துணை தலைவர் கர்னல் குமாரதாஸ் பதக்கம் வழங்கினார்.
3hours ago
18 / 28
ஆடி மாதம் வெள்ளிக்கிழமையொட்டி ஆலையம்மன் கோவில் வாசலில் பொங்கல் படைத்து வழிபட்ட பெண் பக்தர்கள். இடம்.தேனாம்பேட்டை, சென்னை.
3hours ago
19 / 28
ஆடி வெள்ளிக்கிழமை யொட்டி காளிகாம்பாள் கோவிலில் குவிந்த பக்தர்கள் கூட்டம்.இடம்: தம்பு செட்டி தெரு, பிராட்வே.
5hours ago
20 / 28
பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகளுக்கு போதுமான இருக்கைகள் இல்லாததால் தரையில் அமர்ந்து கூட்டத்தில் பங்கேற்றனர்.
5hours ago
21 / 28
கரூர் அருகே ராயனூர் பகவதி அம்மன் கோயில் திடலில் கொரோனா தடுப்பூசி கோவாக்சின் 2ம் டோஸ் போடுவதற்கு நீண்ட வரிசையில் காத்திருந்தவர்கள்.
5hours ago
22 / 28
கரூரில் கிராமக் குழந்தைகள் பாதுகாப்பு காவலர் குழு அறிமுகம், குழந்தை திருமணம் தடுப்பு, போதைப்பொருள் புகையிலை ஒழிப்பு மற்றும் மூன்றாவது கண் சிசிடிவி விழிப்புணர்வு முகாமில் முகாமில் ஏடிஎஸ்பி அசோக்குமார் பேசினார்.
6hours ago
23 / 28
நீலகிரி-பந்தலூர் அருகே அத்திக்குன்னா குடியிருப்புகளை ஒட்டிய ஆற்றில் முகாமிட்டுள்ள முதலையை கண்காணிக்கும் பணியில் வனத்துறையினர்3-வது நாளாக ஈடுபட்டுள்ளனர்.
6hours ago
24 / 28
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே குடிநீர் கேட்டு பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியல் செய்தனர்.
6hours ago
25 / 28
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே பைத்தூர் புதூர் கிராமத்தை சேர்ந்த தேசிய ஊரக வேலை திட்ட தொழிலாளர்கள், வேலை வழங்கக்கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்
7hours ago
26 / 28
தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சார்பில் நடந்த விழாவில், அமைப்புசார தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். இடம்: ராயப்பேட்டை, சென்னை.
9hours ago
27 / 28
கோவை, செஞ்சிலுவை சங்கம்,ஜவான் பவன் அருகே வேலையை எதிர்பார்த்து காத்திருக்கும் வெளியூர் தொழிலாளிகள்.
9hours ago
28 / 28
சென்னை, குரோம்பேட்டை ரேலா மருத்துவமனையில் கல்லீரல் தானமளிப்பவர்களுக்கு தழும்பில்லா ரோபோட்டிக் சிகிச்சை முறையை முதல்வர் ஸ்டாலின் துவங்கி வைத்தார் உடன் (இடமிருந்து) ரேலா மருத்துவமனை தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் முகமது ரேலா, தலைவர் ஸ்ரீ நிஷா மற்றும் பாரத் பல்கலையின் நிர்வாக இயக்குனர் ஸ்வேதா.
Advertisement