தமிழகத்தின் கண்ணாடி

28 Sep 2021
1hours ago
1 / 13
பொள்ளாச்சி தெற்கு ஒன்றிய இடைத்தேர்தலுக்கான ஓட்டுப் பெட்டிகள் தயார் செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
1hours ago
2 / 13
சென்னை எழும்பூரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள காவலா் அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள நவீன துப்பாக்கிகள் மற்றும் போலீசார் பயன்படுத்தும் உபகரணங்களை ஆர்வமுடன் பார்வையிட்ட பள்ளி மாணவ, மாணவிகள்.
2hours ago
3 / 13
புதுச்சேரி கவர்னர் மாளிகையில் நடந்த அஞ்சலக விழாவில் கவர்னர் தமிழிசை சௌந்தர்ராஜன் சிறப்பு அஞ்சல் உரைகளை வெளியிட்டார். அருகில் சென்னை மண்டல அஞ்சல் துறை இயக்குனர் சோமசுந்தரம், சென்னை நகர அஞ்சல் துறை தலைமை அதிகாரி வீணா ஸ்ரீநிவாஸ், புதுச்சேரி தலைமை அஞ்சல் நிலைய முதுநிலை கண்காணிப்பாளர் சிவப்பிரகாசம்.
2hours ago
4 / 13
கோவை செங்குளத்தின் கரை பகுதியில் பச்சைப் பஞ்சுருட்டான் பறவைகள் இறைக்காக காத்திருக்கின்றன.
3hours ago
5 / 13
புழல் ஏரியில் இருந்து வெளியேறும் உபரிநீர் கால்வாயை தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர் சேகர் பாபு, சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இடம்: ஆமுல்லைவாயில், மணலி.
4hours ago
6 / 13
ஊட்டி அரசு கலைக்கல்லூரியில், கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
4hours ago
7 / 13
ஊட்டியில், கட்டப்பட்டு வரும் அரசு மருத்துவ கல்லூரி கட்டடத்தை, எம்.பி., ராஜா ஆய்வு செய்தார், அருகில் கலெக்டர் இன்னசென்ட் திவ்யா மற்றும் அதிகாரிகள்.
4hours ago
8 / 13
உடுமலை விசாலாட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்.2 மாணவிகளுக்கு ரத்தத்தில் சிவப்பு அணுக்கள் குறித்த பரிசோதனை முகாம் நடந்தது.
5hours ago
9 / 13
உடுமலை கண்ணம்மநாயக்கனூரில் பயிரிடப்பட்டுள்ள தக்காளி செடிகளில் பறிக்கப்பட்ட பழங்களை விவசாயிகள் தரம் பிரித்து நோய் தாக்குதலில் சேதமடைந்த பழங்களை கீழே கொட்டி வைத்துள்ளனர்.
6hours ago
10 / 13
பள்ளிகள் திறக்காவிட்டாலும் நேரத்தை வீணடிக்காமல் வீட்டின் முன் சாலை ஓரத்தில் அமர்ந்து கவனமுடன் படித்து வரும் பள்ளிக் குழந்தைகள். இடம்: கடலூர் முதுநகர் தைக்கால் தோனி.
6hours ago
11 / 13
விழுப்புரம் - திருமலை திருப்பதி பாதை யாத்திரைக்குழு சார்பில் விழுப்புரம் ஆதிதிருவரங்கம் ஒன்பதாம் ஆண்டு பாதையாத்திரை துவங்கியது.
6hours ago
12 / 13
சென்னை மெரினா கடற்கரையில் உள்ள நீரூற்று வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு பார்வையாளர்களை கவர்ந்து வருகிறது.
7hours ago
13 / 13
சென்னை மெரினா கடற்கரையில் உள்ள நீரூற்று வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
Advertisement