தமிழகத்தின் கண்ணாடி

23 Oct 2021
1hours ago
1 / 23
திருப்பூர், தெற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்த ஓட்டுப்பெட்டிகள் உத்திரபிரதேச மாநிலத்திற்கு கொண்டு செல்ல லாரியில் ஏற்றப்படுகிறது.
1hours ago
2 / 23
புதிய தொழில்நுட்பத்தில் உற்பத்தி செய்யப்பட்ட அத்தி நாற்றுகளை இளம் விஞ்ஞானி ஸ்ரீ லஷ்மி, புதுச்சேரி சபாநாயகர் செல்வத்திடம் காண்பித்தார். அருகில் ராமலிங்கம் எம்.எல்.ஏ., கூடப்பாக்கம் வேங்கடபதி.
1hours ago
3 / 23
தஞ்சாவூர் மாவட்டம் வல்லம் புதூர் பஞ்சாயத்துக்குட்பட்ட கிராமத்தை சேர்ந்த 87 பேருக்கு, 25 ஆண்டுகளாக இலவச வீட்டுமனைப்பட்டா கிடைக்காமல் தவித்தனர். இந்நிலையில் எம்.பி., பழனிமாணிக்கம் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஆகியோர் பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாவை வழங்கினார்.
2hours ago
4 / 23
கோவை செட்டிபாளையம் கரி மோட்டார் ஸ்பீடு வேயில் ஜே.கே., டயர் சார்பில் நடந்து வரும் தேசிய அளவிலான கார் பந்தயப் போட்டியில் எல்.ஜி.பி., பார்முலா- 4 பிரிவில் சீறிப்பாய்ந்த கார்கள்.
2hours ago
5 / 23
ஒட்டன்சத்திரம் - பழநி பைபாஸ் ரோட்டில் தண்ணீர் ஓடுவது போல கண்ணுக்கு தெரிந்த துாரம் வரை கானல் நீர் காட்சியளித்தது.
2hours ago
6 / 23
கடலூர் முதுநகர் மனவெளி பகுதியில் நடந்த முகாமில் திருநங்கைகளுக்கு கொரோனா தடுப்பு ஊசி போடப்பட்டது.
2hours ago
7 / 23
மதுரையில் நடந்த மாநில அளவிலான யோகா போட்டியில் திறமையை வெளிப்படுத்திய மாணவர்கள்.
3hours ago
8 / 23
வயலுக்கு இறைதேடி வந்த பறவைகள்.இடம்: சிவகங்கை அருகே சாமியார்பட்டி.
4hours ago
9 / 23
புதுச்சேரி தாவரவியல் பூங்காவில் திருவள்ளுவர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப்பணித்திட்ட மாணவிகள் தூய்மை பணியில் ஈடுபட்டனர்.
4hours ago
10 / 23
தாம்பரம் சித்தமருத்துவமனை அருகே உள்ள சுமார் ஒன்பது ஏக்கர் இடத்தில் தாம்பரம் மாநகராட்சி கட்டடம் மற்றும் போலீஸ் கமிஷனர் அலுவலக கட்டடம் கட்டுவதற்காக செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல் நாத் , மற்றும் தாம்பரம் போலீஸ் கமிஷனர் ரவி ஆய்வு செய்தனர்.
4hours ago
11 / 23
புதுச்சேரியில் பாரத் சேவக் சமாஜ் பல்கலைக்கழகம் சார்பில் நடந்த விழாவில் ஓய்வு பெற்ற நீதிபதி முருகபூபதிக்கு டாக்டர் பட்டத்தை பல்கலை சேர்மன் மேன்வேல் வழங்கினார். அருகில் ஐ.ஏ.எஸ். அதிகாரி சம்பத்குமார் மற்றும் பலர்.
12 / 23
சென்னை தி.நகரில் உள்ள வெங்கடேச பெருமாள் கோவில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் அடுத்த ஆண்டிற்கான காலண்டர் டைரி விற்பனையை தமிழக ஆலோசனை குழுவின் தலைவர் சேகர் வெளியிட்டு துவக்கி வைத்தார்.
5hours ago
13 / 23
சென்னை பெருங்குடி நகர்ப்புற சமுதாய நல மருத்துவமனையில் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வரிசையில் அமர்ந்திருந்த பொதுமக்கள்.
6hours ago
14 / 23
கதிரவன் ஒளிகள் மரக்கிளைகளில் ஊடுருவி, பொன்னிறத்தில் அழகாய் வரவேற்கிறது நம் காலை பொழுதை. இடம்: பெசன்ட் சாலை, பெசன்ட் நகர், சென்னை.
6hours ago
15 / 23
மேட்டுப்பாளையம் - ஊட்டி மலை ரயில் பாதையில் ஆடர் லி மற்றும் ஹில்குரோ இடையே மண்சரிவு மற்றும் பாறைகள் உருண்டதால் பயணிகள் ரயில் மேட்டுப்பாளையம் திரும்பி வந்தது.
16 / 23
சென்னை, ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடந்த, மெகா தடுப்பூசி முகாமை பார்வையிட்ட மருத்துவ துறை செயலர் ராதாகிருஷ்ணன்.இடம்: சேப்பாக்கம்.
7hours ago
17 / 23
கோவை கலெக்டர் அலுவலகத்தில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி விவசாயிகளுக்கு புதிய மின் இணைப்பு மற்றும் தொற்று நோயால் உயிரிழந்த குடும்பத்தினருக்கு நிவாரண நிதியை வழங்கினார். அருகில் கலெக்டர் சமீரன்.
7hours ago
18 / 23
பொள்ளாச்சியில் புதிதாக துவங்கப்பட்டுள்ள சிறுவர் சிறுமியருக்கான மனமகிழ் மன்றம் நிகழ்ச்சியில், எஸ்.பி., செல்வநாகரத்தினம் நோட்டு புத்தகங்களை, மாணவர்களுக்கு வழங்கினார்.
8hours ago
19 / 23
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி 70 வது பிறந்தநாளை முன்னிட்டு வடபழனியில் நலத்திட்ட உதவிகளை மாநில துணைத்தலைவர் கோபண்ணா வழங்கினார். காங்கிரஸ் பொதுச் செயலாளர் காண்டீபன் விழா ஏற்பாடுகளை செய்தார்.
8hours ago
20 / 23
விழுப்புரம் மத்திய மாவட்டத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் மற்றும் துணை தலைவர்கள் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியை சந்தித்து வாழ்த்து பெற்ற0னர்.
8hours ago
21 / 23
சென்னை தீவுத்திடல் அருகே தடுப்பூசி போட்டுக்கொள்பவர்ளுக்கு குலுக்கல் முறையில் பரிசு பொருட்கள் வழங்கப்படுவதால் முகாமிலேயே பொருட்களை வைத்துள்ளனர்.
10hours ago
22 / 23
விழுப்புரம் மாவட்ட ஊராட்சி குழு தலைவராக ஜெயசந்திரன் பொறுப்பேற்றார். அருகில் கலெக்டர் மோகன்.
12hours ago
23 / 23
கோவிட் பரவல் காரணமாக, மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, தங்கத்தேர் இழுக்கும் நிகழ்ச்சியை ஹிந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நேற்று மீண்டும் துவக்கி வைத்தார்.
Advertisement