தமிழகத்தின் கண்ணாடி

18 Jan 2022
1day ago
1 / 19
தைப்பூசத்தை முன்னிட்டு சென்னை, சைதாப்பேட்டை காரணீஸ்வரர் கோவிலில் தெப்பத் திருவிழா துவங்கியது.
1day ago
2 / 19
சிவகங்கை மாவட்டம் நாட்டரசன் கோட்டை கண்ணுடையநாகியம்மன் கோயில் வளாகத்தில் நகரத்தார் முக கவசம் அணிந்து பொங்கல் வைத்து வழிப்பட்டனர்.
1day ago
3 / 19
கொரோனா நோய்தொற்று பரவல் காரணமாக மணலூர்பேட்டை ஆற்றில் நடக்கவேண்டிய தீர்த்தவாரி இன்று திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், சூலம் ரூபத்தில் அண்ணாமலையாருக்கு தீர்த்தவாரியில் சிறப்பு கலச அபிஷேகம் நடந்தது.
1day ago
4 / 19
கடலூர் மாவட்டம் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் பயிலும் பயிற்சி மாணவர்களுக்கு உதவி தொகை வழங்காததை கண்டித்து மருத்துவ மாணவர்கள் மண்டியிட்டு தங்களது கோரிக்கையை தெரிவித்தனர்.
1day ago
5 / 19
தைப்பூசத் திருவிழாவில் கோவில்களில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படவில்லை. காரமடை அருகே உள்ள குருந்தமலை கோவிலில் நுழைவாயிலில் சாமி கும்பிட்ட பக்தர்கள்.
1day ago
6 / 19
தைப்பூசத்தை முன்னிட்டு கோவை மருதமலை கோவிலுக்கு பாதயாத்திரை சென்ற பக்தர்கள்.
1day ago
7 / 19
தைப்பூசத்தை முன்னிட்டு சென்னை, வடபழனி ஆண்டவர் கோவிலுக்கு காவடி எடுத்து வந்த பக்தர் .
1day ago
8 / 19
விஷ்வ ஹிந்து பரிஷித் அமைப்பின் சார்பில் பிரதமருக்காக சத்ரு சம்ஹார யாகம் நடத்தப்பட்டது.இடம்: தி.நகர், சென்னை.
1day ago
9 / 19
தை பூச விழாயொட்டி திருப்பூர், தாராபுரம் ரோடு கோட்டை மாரியம்மன் கோவில் சுப்பிரமணியர் வள்ளி தெய்வானையுடன் வெள்ளி கவசத்தில் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
1day ago
10 / 19
புதுச்சேரியில் கொரோனா 2 ஆயிரத்தை கடந்த நிலையில் கொசப்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பரிசோதனை செய்ய குவிந்த பொதுமக்கள்.
1day ago
11 / 19
சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ், மாநகராட்சி சார்பில், வரையப்பட்டுள்ள சுவர் ஓவியம்.
1day ago
12 / 19
புதுச்சேரி முதலியார்பேட்டை வள்ளலார் கோவிலில் தைப்பூசத்தை முன்னிட்டு யோகா பரதநாட்டிய நிகழ்ச்சி நடந்தது
1day ago
13 / 19
கொரோனா கட்டுப்பாடு காரணமாக இன்று தைப்பூச நாளில் கோயில்களில் பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டதால் பழநி பாதவிநாயகர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய திரண்ட பக்தர்கள்.
1day ago
14 / 19
தைப்பூச விழாவை முன்னிட்டு பழநி முருகன் கோயிலுக்கு கோலாட்டம் ஆடிவந்த திருச்சி மாவட்டத்தை சேர்ந்த பக்தர்கள்.
1day ago
15 / 19
வடலுார் ராமலிங்க அடிகளார் நினைவு நாளை முன்னிட்டு,வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில் ஏழு திரைகள் விலகிய 151 ஜோதி தரிசனம் விழாவில் பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்..
1day ago
16 / 19
வடலூரில் ஜோதி தரிசனம்; வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில் ஏழு திரைகள் விலகிய 151 ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது.
1day ago
17 / 19
சிறுத்தை தப்பி ஓடாமல் இருக்க ஓட்டின் மேல் வலைபோட்டு மூடப்பட்டது. இடம்: கோவை பாலக்காடு ரோடு பி.கே.,புதூர், சத்யா நகர்.
1day ago
18 / 19
ரம்யம் : அந்திசாயும் வேளையில் மரக்கிளைகளுக்கிடையே ஒய்வெடுக்க சென்ற சூரியனின் ரம்யமான காட்சி. இடம்: தேனி.
1day ago
19 / 19
தை பொறந்தால் வழி பிறக்கும் என்பதை சாத்தியபடுத்தும் வகையில் கோவை வேளாண் பல்கலையில் நாற்று நடும் மாணவர்கள்.
Advertisement