இன்றைய போட்டோ

29 Jun 2022
1hours ago
1 / 26
புதுச்சேரி லாஸ்பேட்டை தாகூர் கலைக் கல்லூரி காம்பவுன்ட் சுவரில் ஓவியம் வரையும் கல்லூரி மாணவ மாணவிகள்.
2hours ago
2 / 26
மாலை சூரிய ஒளியில், குளிர்ந்த காற்று வீசும் ஏரிக்கரை மேலே தொடர் பயிற்சியும், விடாமுயற்சியிலும் மனதையும், உடலையும் வலிமைப்படுத்தும் இளைஞர்களின் உடற்பயிற்சி. இடம்: அறிவியல் பூங்கா, திருவண்ணாமலை.
2hours ago
3 / 26
திருப்பூர், ஜெய்வாபாய் பள்ளியில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உயர் கல்விக்கு வழிகாட்டும் நிகழ்ச்சி நடந்தது. இதில் நான் முதல்வர் திட்டத்தின் வழிகாட்டி கையேடு வெளியிடப்பட்டது.
2hours ago
4 / 26
திருப்பூர், தெற்கு தாலுக்கா அலுவலகத்தில் ஓட்டு பதிவு இயந்திரங்கள் சரிபார்க்கும் பணிகள் நடந்து வருகிறது.
3hours ago
5 / 26
அரசு உத்தரவுகளை பின்பற்றுவது எப்போது? திருவண்ணாமலை ரவுண்டானா பகுதியில் வாகன ஓட்டிகளில் ஒரு சிலர் மட்டுமே மாஸ்க் அணிந்து சென்றனர்.
4hours ago
6 / 26
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் தன்னார்வலர்கள் மற்றும் கோவில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.
4hours ago
7 / 26
திருப்பூர், கலெக்டர் அலுவலகத்தில் மாதந்திர கலந்தாய்வு கூட்டம் நடந்தது.
5hours ago
8 / 26
திருப்பூர், விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், மாவட்ட கேரம் விளையாட்டு போட்டி காலேஜ் ரோடு உள்விளையாட்டு அரங்கில் நடந்தது.
5hours ago
9 / 26
திருப்பூர், ஜெய்வாபாய் பள்ளியில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உயர் கல்விக்கு வழிகாட்டும் நிகழ்ச்சி நடந்தது. இதில் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் பேசினார், அருகில் மாவட்ட கல்வி அதிகாரி திருவளர்செல்வி, தெற்கு தொகுதி எம் எல் ஏ செல்வராஜ், மேயர், தினேஷ்குமார், மாவட்ட கலெக்டர் வினீத், மாநகராட்சி கமிஷனர் கிராந்தி குமார் ஆகியோர் உடனிருந்தனர்.
6hours ago
10 / 26
விழுப்புரம் பூத்தமேடு பகுதியில் கடை வைத்திருப்பவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்தனர்.
6hours ago
11 / 26
சென்னையில் ரேஷன் கடை ஊழியர்களுக்கு மருத்துவ முகாம் நடந்தது. இதில் ஏராளமான ஊழியர்கள் தங்களது உடல் குறித்து மருத்துவர்களிடம் ஆலோசனை செய்து கொண்டனர். இடம்: அண்ணாசாலை.
6hours ago
12 / 26
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடந்தது.
6hours ago
13 / 26
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் அடிப்படையில் சுற்றுலா தளமான மெரினாவில் வியாபாரிகளுக்கு வழங்கப்பட இருந்த கடைகள் மிகவும் சிறிய அளவில் இருந்ததால் எதிர்ப்பு கிளம்பியது. இதை அடுத்து வேறு வழியின்றி மயிலாப்பூர் மயான பூமியில் குப்பை போல் ஊழியர்கள் கடைகளை போட்டு வைத்துள்ளனர்.
6hours ago
14 / 26
ஊட்டி கமர்ஷியல் சாலை கேசினோ சந்திப்பு பகுதியில் , உள்ள விதிமீறல் வணிகவளாக கட்டடத்திற்கு நகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.
7hours ago
15 / 26
சென்னையில் ரேஷன் கடை ஊழியர்களுக்கு மருத்துவ முகாம் நடந்தது.இதில் ஏராளமான ஊழியர்கள் கண் பரிசோதனை செய்தனர்.இடம்.அண்ணாசாலை
7hours ago
16 / 26
நிலத்தடி நீர் குறைந்து வருவதன் காரணத்தால் பட்டுப் போய் நிற்கிறதோ இந்த தென்னை மரங்கள்.இடம்: வடவள்ளி மெயின் ரோடு
8hours ago
17 / 26
கோவை கோர்ட் வளாகத்தில் உள்ள பார் அசோசியேஷன் ஹாலில் வக்கீல்கள், நீதிமன்ற ஊழியர்களுக்கு இலவச கண் மருத்துவ முகாம் நடைபெற்றது.
10hours ago
18 / 26
சிங்கார சென்னை 2,0 திட்டத்தின் மிக பிரம்மாண்டமாக விளையாட்டு மைதானத்தின் வரையப்பட்டுள்ள ஓவியங்கள். இடம்:ஆசீர்வாதபுரம், மண்ணடி.
19 / 26
ஆனி அமாவாசையை முன்னிட்டு திண்டுக்கல் மலையடிவார பத்ரகாளியம்மன் கோயிலில் காமதேனு வாகனத்தில் அம்மன்.
14hours ago
20 / 26
பருவமழை தொடங்கினாலும் சூரியணின் வழக்கமான உதயத்தில் காலைப்பொழுது கண்கொள்ளா காட்சி. இடம்: காரமடை
14hours ago
21 / 26
புதுச்சேரி கதிர்காமம் தொகுதி சுப்பையா திருமண மண்டபம் அருகில் நேற்று இரவு மின் கம்பம் வெடித்து பழுதாகி உள்ளதால் எம்.எல்.ஏ .,ஆறுமுகம் பார்வையிட்டார்
17hours ago
22 / 26
பழநியில் இருந்து கோவைக்கு, பொள்ளாச்சி வழியாக மின்சார ரயில் சோதனை ஓட்டம் நடந்தது.
17hours ago
23 / 26
உயரே சுற்ற மிரட்டும் அழகு...கோவை காந்திபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள பொருட்காட்சியில் இடம் பெற்றுள்ள ராட்டினத்தின் அழகு தான் இது.
18hours ago
24 / 26
காட்டு முயல் சோளப் பயிர்களை சேதப்படுத்துவதாக கூறி விவசாயிகள் வயலில் துணியால் தடுப்பு வேலி அமைத்துள்ளனர். இடம் கடலூர் அடுத்த குள்ளஞ்சாவடி
18hours ago
25 / 26
சென்னை மேம்பால ரயில் கூவம் ஆற்றுப் பாலத்தில் கடக்கும் போது அதன் பிம்பம் தண்ணீரில் பிரதிபலித்தது இடம்: சிந்தாரிப்பேட்டை.
19hours ago
26 / 26
விமானம் விழுந்ததாக எழுந்த புரளியால், அரியலுார் மாவட்டம், வங்காரம் அங்கனுார் இடையே உள்ள வனப் பகுதியில் தயார் நிலையில் நிற்கும் 108 ஆம்புலன்ஸ் மற்றும் அங்கு திரண்ட பொதுமக்கள்.
Advertisement